Saturday, December 31, 2011

சிறப்பாசிரியர்களுக்கான நேர்காணல் ஜன., 3ம் தேதி துவக்கம்

நாமக்கல்: "அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம், தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்படும் சிறப்பாசிரியர்களுக்கான நேர்காணல், ஜனவரி 3ம் தேதி துவங்கி, 10ம் தேதி வரை நடக்கிறது' என, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குமார் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
நாமக்கல் மாவட்டம், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், அரசு பள்ளிகளில், கலை ஆசிரியர்கள், 128 பேர், உடற்கல்வி ஆசிரியர்கள், 132 பேர், தொழிற்கல்வி ஆசிரியர்கள், 148 பேர் என மொத்தம், 408 பேர், 5,000 ரூபாய் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட உள்ளனர்.
அதில், உடற்கல்வி ஆசிரியர் பதவிக்கு, 478 பேர், ஓவிய ஆசிரியர் பதவிக்கு, 380 பேர், இசை, தோட்டக்கலை மற்றும் கட்டடக்கலை ஆசிரியர் பதவிக்கு முறையே, 22, 18, ஒன்று என, 41 பேர், தையல் ஆசிரியர் பதவிக்கு, 256 பேர், கணினி ஆசிரியர் பதவிக்கு, 491 பேர் என மொத்தம், 1,646 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
அவர்களுக்கான நேர்காணல், ஜனவரி 3ம் தேதி துவங்குகிறது. அதன்படி, உடற்கல்வி ஆசிரியர்களுக்கான நேர்காணல், ஜனவரி 3 மற்றும் 4ம் தேதியும், ஓவிய ஆசிரியர்களுக்கான நேர்காணல், ஜனவரி 5 மற்றும் 6ம் தேதியும், இசை, தோட்டக்கலை மற்றும் கட்டடக்கலை ஆசிரியர்களுக்கான நேர்காணல், ஜனவரி 6ம் தேதியும் நடக்கிறது.
மேலும், தையல் ஆசிரியர்களுக்கான நேர்காணல், ஜனவரி 7ம் தேதி, கணினி ஆசிரியர்களுக்கான நேர்காணல், ஜனவரி 9 மற்றும் 10ம் தேதி நடக்கிறது. நேர்காணலுக்கான கடிதம், அந்தந்த விண்ணப்பதாரர்களுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு நேர்காணல் கடிதம் கிடைக்கப்பெறாதவர்கள், தங்களுக்குரிய நேர்காணல் தேதிக்கு ஒரு நாள் முன்னதாக, அனைவருக்கும் கல்வி இயக்கம், மாவட்ட திட்ட அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

LINK: http://www.dinamalar.com/district_detail.asp?id=376560

Thursday, December 29, 2011

மீண்டும் நேர்முக தேர்வு?

திருவள்ளூர் மாவட்டத்தில், பகுதி நேர ஆசிரியர் பணிக்கு,  ஜனவரி 6- இல் மீண்டும் நேர்முக   தேர்வு  நடக்க  உள்ளதாக தகவல்.   விண்ணப்பிக்காதவர்கள் வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும்.
இது அதிகார பூர்வமற்ற தகவல் தான்...

A.E.E.O., பணி தேர்வுக்கு விண்ணப்பம்

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும், A.E.E.O., பணி, போட்டித் தேர்வுக்கான விண்ணப்பம், உடல் ஊனமுற்றோருக்கு, ஜன., 6ம் தேதி வரை வழங்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், 34 உதவி தொடக்க கல்வி அலுவலர் பணி நியமனத்திற்காக, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், போட்டித் தேர்வு நடத்தப்படுகிறது. இவர்களுக்கான விண்ணப்பங்கள் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில், வழங்கப்பட்டன.
உடல் ஊனமுற்றவர்கள் தேர்வு எழுத வசதியாக, இப்போட்டித் தேர்வில் பங்கேற்க விரும்புபவர்களுக்கு, அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் விண்ணப்பங்கள், ஜன., 6ம் தேதி வரை வழங்கப்படும். விண்ணப்பத்தை நேரடியாக முதன்மை கல்வி அலுவலகத்தில் பெற வேண்டும்.



CORRIGENDUM

As per G.O.Ms. No.53 Social Welfare and Nutritious Meal Programme Department, dated 11.04.2005, Applications are invited from Differently abled persons (Except Hearing impaired & Visually impaired) for the said post (Ref. TRB Notification No. 1/2011 Dt. 25.10.2011) provided they are bound to be Otherwise suitable and the Medical Board is satisfied that the physically Challenged is not such as it could render them incapable of efficiently discharging their duties in the post for which they are selected. The candidates are eligible for age relaxation up to ten years (i.e. 45 years as on 01.07.2011). and exempted from payment of fees The Candidates who have already applied need not apply. The fees paid by them will be refunded.

IMPORTANT DATES : (Revised only for Differently abled Candidates)


1.
Commencement of Sale of Application Forms from concerned CEO's offices in the District.
26.12.2011
 
2.
Last Date for receipt of Application at CEO's office
06.01.2012
5.30. p.m.
3.
Date of written Examination
Will be Intimated later. The Date already announced (08.01.2012)
will be Postponed)



In announcement from TRB for selection of 34 AEEO, chances are not given to computer graduate B.Ed teachers, are they not suit to Discharge AEEO duty? or why this dishonour to computer graduate? Today teaching innovations all are deponds on computer and internet. Till now our TN education department being very innocent to give on computer education to our TN children. Govt has to recruit computer B.Ed teachers and bring 6th subject as computer in tamilnadu.

Wednesday, December 28, 2011

பகுதிநேர ஆசிரியர் நேர்முகத் தேர்வு தள்ளிவைப்பு

அரசுப் பள்ளிகளில், பகுதி நேர அடிப்படையில், 16 ஆயிரத்து, 549 ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். விண்ணப்பங்கள் மீதான பரிசீலனைக்குப் பின், நேற்று முன்தினத்தில் இருந்து, நேர்முகத் தேர்வு நடத்த வேண்டும் என, தமிழக அரசு தெரிவித்திருந்தது.ஆனால், பல மாவட்டங்களில், விண்ணப்பங்கள் மீதான பரிசீலனைப் பணிகள், இன்னும் முடியவில்லை. மேலும், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களில் இருந்து, பதிவுமூப்பு பட்டியலும் வரவில்லை. இதனால் சென்னை, மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களில், நேர்முகத் தேர்வு துவங்கவில்லை.

இதுகுறித்து, அனைவருக்கும் கல்வி இயக்க வட்டாரங்கள் கூறும்போது,""சில மாவட்டங்களில், விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை முடியாததால், நேர்முகத்தேர்வு துவங்கவில்லை. ஆனாலும், நேர்முகத்தேர்வு பணிகள், ஏற்கனவே திட்டமிட்டபடி, ஜன.,15ம் தேதிக்குள் முடிக்கப்படும். அதற்கேற்ப, ஒவ்வொரு மாவட்டத்திலும், பல குழுக்கள் அமைக்கப்பட்டு, விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றனர்.

Tuesday, December 27, 2011

பட்டதாரி ஆசிரியர்கள் வழக்கு

சென்னை, டிச. 26: பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனத்துக்காக நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.  இது தொடர்பாக அனைத்து பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் சார்பில் அதன் தலைவர் கே. ரத்தினகுமார் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளதாவது: 

 தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக பட்டதாரி ஆசிரியர்கள் மாநில அளவிலான வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு மூப்பு அடிப்படையிலேயே பணி நியமனம் செய்யப்பட்டு வந்தனர்.  கடந்த சில ஆண்டுகளில் மட்டும் 28 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் இந்த அடிப்படையிலேயே பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், 8 ஆயிரத்து 100 பட்டதாரி ஆசிரியர்கள் சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் முடிந்த நிலையில், பணி நியமன ஆணையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். இந்த நிலையில், இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஆசிரியர் தகுதித் தேர்வை எழுத வேண்டும் என்றும், அதில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையிலேயே இனி ஆசிரியர்கள் நியமனம் நடைபெற வேண்டும் என்றும் தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியது.  இதன் அடிப்படையில் தமிழகத்திலும் இனி ஆசிரியர் தகுதித் தேர்வு மூலமே பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று கடந்த நவம்பர் 15-ம் தேதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 
பட்டப் படிப்பை முடித்து, குறிப்பிட்ட துறையில் ஆசிரியர் கல்விக்கான பட்டமும் (பி.எட்) பெற்று, உரிய தகுதிகளுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து விட்டு, ஆசிரியர் பணி கிடைக்கும் என்று பல ஆண்டுகளாக நம்பிக்கையுடன் காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு எதிராக இந்த அரசாணை உள்ளது. இது சட்ட விரோதமானதாகும்.  எனவே, இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும். 
மாநில அளவிலான வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு மூப்பு அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப மாநில அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.இந்த மனு நீதிபதி கே. சுகுணா முன்னிலையில் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இது தொடர்பாக தமிழக அரசின் கல்வித் துறை, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் ஆகியவை இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

Monday, December 26, 2011

பகுதி நேர ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு துவங்கியது

அரசு நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றுவதற்கான பகுதி நேர ஆசிரியர்களை நியமிக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து ஏராளமானோர் விண்ணப்பித்திருந்தனர். விண்ணப்பித்திருந்தவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு dec 26ல், துவங்கியது.
இதில், கலந்து கொள்ள வரும் ஆசிரியர்கள், தங்களது பொது மற்றும் தொழிற்கல்வி, இதர தனித்திறன் குறித்த சான்றுகளின் அசல் மற்றும் நகல்களை அரசு பதிவு பெற்ற அலுவலரிடம் சான்று பெற்று எடுத்த வர அறிவுறுத்தப்பட்டிருந்தது.
காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை ஒரு பிரிவாகவும், பிறகு மாலை 2 மணி முதல் 5 மணி வரையிலும் நேர்காணல் நடைபெறுகிறது. 27, 28ம் தேதிகளிலும் சான்றிதழ் சரிபார்ப்பும், கலந்தாய்வும் நடைபெறும். ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு பிரிவு ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு பள்ளிகளில் இந்த கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.
 *******************************************************************************

Sunday, December 25, 2011

பகுதிநேர ஆசிரியர் பணிக்கு பரிந்துரை பட்டியல் வெளியீடு

பெரம்பலூர்: பெரம்பலூர் கலெக்டர் தரேஷ்அஹமது வெளியிட்ட அறிக்கை:பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த அந்தந்த பதிவு மூப்புக்குட்பட்ட தகுதி வாய்ந்த மனுதாரர்கள் அனைவரும் தங்களது வேலைவாய்ப்பு பதிவு அடையாள அட்டையுடன் வருகை தந்து தங்களது பெயர் பரிந்துரை செய்யப்படுவதை டிச., 28ம் தேதிக்குள் உறுதி செய்து கொள்ள வேண்டும்.உடற்கல்வி ஆசிரியர் மற்றும் ஓவிய ஆசிரியர் பணியிடங்களுக்கு சென்னை, தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தங்களது பட்டம் அல்லது பட்டய சான்றிதழை பதிவு செய்துள்ள அந்தந்த பதிவு மூப்புக்குட்பட்ட பெரம்பலூர் மாவட்ட பதிவுதாரர்கள் தங்களது அந்த அலுவலக அசல் பதிவு அடையாள அட்டை மற்றும் சான்றுகளுடன் தவறாமல் வருமாறும் கோரப்படுகின்றனர்.

உடற்கல்வி ஆசிரியர், ஓவிய ஆசிரியர் தோட்டக்கலை டிப்ளமோ பயின்றவர்கள் தையல் ஆசிரியர் (டி.டி.சி) அல்லது டிப்ளமோ, இசை ஆசிரியர் (டி.டி.சி), கணிணி பயிற்றுநர், பட்டதாரி பயிற்றுநர், (ஆங்கிலம், சோசியாலஜி, சோசியல் ஒர்க் மற்றும் பிளாசபி) ஆகிய அனைத்து பிரிவுகளிலும், 

ஆதரவற்ற விதவைகள்,
கலப்பு திருமணம் புரிந்தோர்.
இலங்கை தமிழர்கள், 
முன்னாள், இன்னாள் ராணுவத்தினர் மற்றும் அவர்களை சார்ந்தவர்கள், சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுதாரர்கள்,
தமிழ்மொழி காவலர்களின் வாரிசுகள், 
அரசுக்கு நிலம் ஒப்படைத்தவர்கள் மற்றும் அவரது வாரிசுதாரர்கள், மாற்றுத்திறனாளிகள் 

ஆகிய முன்னுரிமை பிரிவுகளின்கீழ் வேலைவாய்ப்பு அலுவலகம், பெரம்பலூரில் நவ., 30ம் தேதிக்கு முன்னதாக பதிவு செய்தவர்கள் மற்றும் அனைத்து பிரிவுகளிலும்
நவ.,30ம் தேதி வரை பதிவு செய்துள்ள அருந்ததியினர் பிரிவினரும் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு தவறாமல் வருகை தந்து விளம்பர பலகையில் ஒட்டப்பட்டுள்ளதில் தங்களது பெயர் உள்ளதா? என்பதை சரிபார்த்து கொள்ளலாம்.

ஆசிரியர்களுக்கு, அதிகாரிகளே இடத்தை தேர்வு செய்கிறார்கள்

சென்னை,  டிச. 24-

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 1,155 பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதல் முறையாக கவுன்சிலிங் இல்லாமல் பணிநியமனம் வழங்கப்பட உள்ளது. இதற்காக அதிகாரிகளே ஆசிரியர்கள் வேலைபார்க்க உள்ள இடங்களை தேர்வு செய்யும் பணி மும்முரமாக நடக்கிறது.

தமிழக அரசு கல்வித்துறையில் அதிக அக்கறை செலுத்தி வருகிறது. போதுமான ஆசிரியர்களை நியமிக்கவேண்டும் என்பதிலும், தரமான கல்வியை மாணவர்களுக்கு போதிக்கவேண்டும் என்பதிலும் கண்ணும் கருத்துமாக உள்ளது.

ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள்

சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் பள்ளிக்கல்வி இயக்குனரகமும், தொடக்க கல்வி இயக்குனரகமும் உள்ளன. அரசு உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளிகள், அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் பள்ளிக்கல்வி இயக்குனர் ப.மணியின் தலைமையில் இயங்குகின்றன. அரசு தொடக்கப்பள்ளிகள், அரசு நடுநிலைப்பள்ளிகள், நர்சரி பள்ளிகள் ஆகியவை தொடக்க கல்வி இயக்குனரகம் கட்டுப்பாட்டில் இயக்குனர் சங்கர் தலைமையில் செயல்படுகின்றன.

இந்த இரு துறைகளிலும் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலியிடப்பணிகள் மற்றும் பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டதால் ஏற்படும் காலிப்பணியிடங்கள் ஆகியவற்றை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணி நடைபெற்றது.


வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்கள் 3,959 பேர் தேர்ந்து எடுக்கப்பட்டனர். அவர்களில் 2,804 பேர் பள்ளிக்கல்வித்துறைக்கு அதாவது அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.  1,155 பேர்கள் மட்டும் தொடக்க கல்வி இயக்குனரகத்திற்கு, அதாவது நடுநிலைப்பள்ளிகளுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

அதிகாரிகளே தேர்ந்து எடுத்தனர்

கடந்த சில வருடங்களாக காலியாக உள்ள இடங்கள் அறிவிக்கப்பட்டு போர்டில் எழுதிவைக்கப்பட்டு கவுன்சிலிங் நடத்தப்பட்டு ஆசிரியர்களின் விருப்பத்தின் பேரில் அவர்கள் வேலைபார்க்க போகும் இடங்களை தேர்வு செய்தனர். ஆனால் இந்த வருடம் பள்ளிக்கல்வி இயக்குனரகம் 2,804 ஆசிரியர்களுக்கும் கவுன்சிலிங் நடத்தாமல் அதிகாரிகளே இடங்களை தேர்வு செய்து தபாலில் அனுப்பி வைத்தனர். அதன்படி நேற்று ஏராளமான ஆசிரியர்கள் பணியில் சேர்ந்தனர். பலருக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் போடப்பட்டிருந்தது.

2-ந் தேதிக்குள் பணிநியமன ஆணை


இந்த நிலையில் தொடக்க கல்வி இயக்குனரகத்துக்கு தேர்வு செய்யப்பட்ட 1,155 ஆசிரியர்களும் நமக்கு எப்போது கவுன்சிலிங் வரும் நாம் இடத்தை தேர்வு செய்யலாம் என்று இருக்கிறார்கள். அவர்கள் அடிக்கடி தொடக்க கல்வி துறைக்கு டெலிபோனில் பேசியவண்ணம் உள்ளனர். ஆனால் கவுன்சிலிங் எதுவும் நடத்தாமல் தொடக்க கல்வி இயக்குனரகம் மற்றும் மாவட்ட கல்வி நிர்வாகம் சேர்ந்து அவர்களாகவே ஆசிரியர்களுக்கு இடங்களை தேர்ந்து எடுத்து வருகிறார்கள். அவர்களுக்கு 2-ந்தேதிக்குள் பணிநியமன ஆணை தபாலில் வழங்கப்படும் என்று தெரிகிறது.

ஆனால் இது குறித்து எந்தவித அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை. இதனால் பணிக்கான காத்திருப்போர் நமக்கு வேலை கிடைக்குமா? கவுன்சிலிங் நடத்தப்படுவது எப்போது? என்று பல்வேறு கோணங்களில் சிந்தித்து வருகிறார்கள்.

மனக்குழப்பம்

சீனியாரிட்டி அடிப்படையில் ஆசிரியர்களை தேர்வு செய்துள்ளதால் தேர்ந்து எடுக்கப்பட்ட ஆசிரியர்கள் பலர் 42 வயதை தாண்டி உள்ளனர். சிலர் 45 வயதை கடந்து உள்ளனர். அவர்களின் குழந்தைகள் 10-வது வகுப்பு அல்லது பிளஸ்-2 படிக்கிறார்கள். அவர்கள் தாங்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் பணிநியமனம் செய்யப்பட்டால் என்ன செய்வது குடும்பத்தை விட்டு எப்படி செல்வது என்று பலர் மனம் குழம்பி தொடக்க கல்வித்துறைக்கு நேரிலும் போனிலும் வந்து விசாரிக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு அதிகாரிகள் சரியான பதிலை சொல்லவில்லை.

வெறும் மிரட்டல் கிடையாது; பள்ளிகள் இழுத்து மூடப்படும்

அங்கீகாரம் இல்லாத நர்சரி மற்றும் பிரைமரிப் பள்ளிகளுக்கு, "நோட்டீஸ்' அனுப்பப் பட்டிருப்பது, வெறும் மிரட்டல் கிடையாது; அரசு விதிமுறைகளை பூர்த்தி செய்யாவிட்டால், சம்பந்தபட்ட பள்ளிகள் இழுத்து மூடப்படும் என, தொடக்க கல்வித்துறை அதிகாரிகள் வட்டாரத்தினர், ஆவேசத்துடன் தெரிவித்தனர்.
மாநிலம் முழுவதும், தமிழக அரசின் அங்கீகாரம் இல்லாமல், 752 நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் இயங்கி வருவதாக, தொடக்க கல்வித்துறை அடையாளம் கண்டுள்ளது. அரசு விதிமுறைகளை பூர்த்தி செய்வதற்கு, தமிழக அரசு ஏற்கனவே வழங்கிய கால அவகாசம், கடந்த ஜூனில் முடிவடைந்த நிலையில், இந்தப் பள்ளிகளுக்கு தற்போது, "நோட்டீஸ்' அனுப்பப் பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு நோட்டீஸ்:தனியார் பள்ளிகளைப் பொறுத்தவரை, மாநகராட்சிப் பகுதிகளில் பள்ளிகள் இருந்தால், 6 கிரவுண்டு இடமும், மாவட்ட தலைநகரப் பகுதிகள் என்றால், 8 கிரவுண்டு இடமும் இருக்க வேண்டும். நகராட்சிப் பகுதியாக இருந்தால், 10 கிரவுண்டு இடமும், நகரப் பகுதிகளாக இருந்தால், 1 ஏக்கர் மற்றும் கிராமப் பகுதியாக இருந்தால், 3 ஏக்கரும் இடம் இருக்க வேண்டும் என, தமிழக அரசு கூறியுள்ளது.

நகரம் மற்றும் நகரங்களைச் சார்ந்த பகுதிகளில் இயங்கும் பள்ளிகள், அரசு தெரிவித்துள்ளபடி இடங்களை வாங்க, திணறி வருகின்றன. இதனால், அரசு அங்கீகாரம் வழங்கவில்லை. இதற்கிடையே, அரசு விதிமுறைகளை பூர்த்தி செய்ய, கடந்த ஜூன் வரை கால அவகாசம் தரப்பட்டது. எனினும், விதிமுறைகளை பள்ளிகள் பூர்த்தி செய்யாததால், 752 நர்சரி மற்றும் பிரைமரிப் பள்ளிகளுக்கு, தொடக்க கல்வித்துறை,"நோட்டீஸ்' அனுப்பி உள்ளது.

கடும் நடவடிக்கை:இதுகுறித்து, துறை அதிகாரிகள் வட்டாரத்தினர் கூறும்போது, ""நோட்டீஸ் அனுப்புவது, ஒரு வழக்கமான நடவடிக்கை என, தற்போது பள்ளிகள் நினைக்கக் கூடாது. இந்த முறை, கடுமையாக நடவடிக்கை எடுப்போம். அரசு விதிமுறைகளை பூர்த்திசெய்வது குறித்து, 15 நாட்களில் உறுதிமொழி அளிக்க வேண்டும்.உரிய பதிலை அளிக்காவிட்டால், சம்பந்தபட்ட பள்ளிகளை இழுத்து மூடுவோம். இந்தப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளை, அருகில் உள்ள வேறு பள்ளிகளுக்கு மாற்றி விடுவோம்,'' என்றனர்.

நிலம் விலை அதிகம்:தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிர்வாகிகள் சங்க கூட்டமைப்பின் தலைவர் கிறிஸ்துதாஸ் இதுகுறித்து கூறியதாவது:
மாநகராட்சி பகுதியிலும், நன்கு வளர்ச்சி அடைந்து வரும் பகுதிகளிலும், கூடுதல் நிலம் வாங்க முடியாத அளவிற்கு, நிலத்தின் விலை பல மடங்கு அதிகரித்து விட்டது. இதனால், அரசின் விதிமுறையை பூர்த்தி செய்ய முடியாத நிலை இருக்கிறது. தற்போதைய நிலவரப்படி, 1,000 பள்ளிகள் வரை, அங்கீகாரம் இல்லாமல் இயங்கி வருகின்றன.
தேவைக்கு அதிகமான வசதிகளையும், இடங்களையும் கொண்டிருந்தால் மட்டுமே, அங்கீகாரம் வழங்கப்படும் என்ற நிலை உள்ளது. நிலப்பரப்பை வைத்து கல்வித்தரம் அமைவதில்லை. படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தாற்போல், வசதிகள் இருந்தால் போதும் என்ற அளவில், பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கிறிஸ்துதாஸ் கூறினார்.

பகுதிநேர ஆசிரியர் நியமனம் தாமதமாகிறதா?

பகுதிநேர ஆசிரியர் நியமனப் பணிகளை செய்ய, பெரும்பாலான மாவட்டங்களில், பதிவுமூப்பு பட்டியல்கள் அனுப்பப்படாததால், என்ன செய்வது என தெரியாமல், அதிகாரிகள் முழித்து வருகின்றனர். இதனால், 26ம் தேதி துவங்க இருந்த நேர்முகத் தேர்வு, மேலும் சில நாட்களுக்கு தள்ளிப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

நேர்முகத் தேர்வு:
16 ஆயிரத்து, 549 பகுதி நேர ஆசிரியர்கள் தேர்வுக்கு, கடந்த 19ம் தேதியில் இருந்து, வரும் 25ம் தேதி வரை, நேர்முகத் தேர்வுக்கான கடிதங்களை அனுப்ப வேண்டும் என்றும்; 26ம் தேதியில் இருந்து, நேர்முகத் தேர்வை நடத்த வேண்டும் என்றும், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டனர்.ஆனால், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களில் இருந்து, இன சுழற்சி வாரியாக, பதிவுமூப்பு பட்டியல் வரவில்லை. சென்னை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், பதிவுமூப்பு பட்டியல் இன்னும் பெறப்படவில்லை. இதனால், திட்டமிட்டபடி நேர்முகத் தேர்வு துவங்குமா என்பது, கேள்விக்குறியாகி உள்ளது.

அடுத்த வாரத்தில்
இதுகுறித்து, கல்வித் துறை அதிகாரிகள் கூறும்போது, "இன சுழற்சி அடிப்படையில், ஒரு பணியிடத்திற்கு ஐந்து பேர் வீதம், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம், பதிவுமூப்பு பட்டியலை அனுப்ப வேண்டும். இந்த பட்டியலை வைத்து தான், நேர்முகத் தேர்வை நடத்த முடியும்' என்றனர்.மேலும், ""பெரும்பாலான மாவட்டங்களில், இந்த பட்டியல்கள் வந்து சேரவில்லை; அடுத்த வாரத்தில் தான் பட்டியல்கள் கிடைக்கும். அதன்பின், நேர்முகத் தேர்வில் பங்கு பெறுவோருக்கான கடிதங்களை அனுப்ப வேண்டும்,'' என்றனர்.

நடக்குமா?
 சென்னை மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட, 326 பணியிடங்களுக்கு, 1,400 பேர் விண்ணப்பித்து உள்ளனர். இவர்களில், ஒரு நாளைக்கு, 100 பேர் முதல், 120 பேர் வரை, நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட உள்ளனர். 12 நாட்கள் வரை, நேர்முகத் தேர்வு நடக்க உள்ளது.ஜனவரி 15ம் தேதிக்குள், நேர்முகத் தேர்வு பணிகளை முடித்து, 16ம் தேதி முதல் பணி நியமன உத்தரவுகளை வழங்க வேண்டும் என, தமிழக அரசு தெரிவித்து இருந்தது

பகுதி நேர ஆசிரியர் நியமனம்: நாளை நேர்காணல்

திருவள்ளூர் : பகுதி நேர ஆசிரியர்கள் பணிக்கு விண்ணப்பித்தவர்களின் சான்றிதழ் சரி பார்த்தலுக்கான நேர்காணல், நாளை (திங்கட்கிழமை) முதல் நடக்கவுள்ளது.
அனைவருக்கும் கல்வி இயக்கம், 2010-11ம் ஆண்டில், திருவள்ளூர் மாவட்டத்தில், நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், ஆறாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரையுள்ள பள்ளிகளுக்கு, பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர். இப்பணிக்கு விண்ணப்பித்தவர்களின் சான்றிதழ்களை சரி பார்த்தலுக்கான நேர்காணல், நாளை (திங்கட்கிழமை) முதல் நடக்கவுள்ளது.
விண்ணப்பதாரர்கள், நேர்காணலுக்கு அழைக்கப்பட்ட தேதியில், பொது மற்றும் தொழிற்கல்வி, இதர தனித்திறன் குறித்த சான்றுகளின் அசல் மற்றும் நகல்களை, அரசு பதிவு பெற்ற அலுவலரிடம் சான்றொப்பம் பெற்று கொண்டு வரவேண்டும்.
நேர்காணல் நடைபெறும் இடங்கள் உடல்நலக் கல்வி - ஸ்ரீலட்சுமி மேல்நிலைப் பள்ளி, திருவள்ளூர்.கலை (ஓவியம்) - ஞான வித்யாலயா மேல்நிலைப் பள்ளி, திருவள்ளூர். தையல்/இசை/கணினி - வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளி, திருவள்ளூர்.
நேர்காணல் கடிதம் பெறாதவர்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் / அனைவருக்கும் கல்வி திட்ட அலுவலரை தொடர்பு கொள்ளவும். மொபைல் எண்கள்: 97888 59098, 73730 02991, 97888 59100 இத்தகவலை அனைவருக்கும் கல்வி இயக்கம் தெரிவித்துள்ளது.

Saturday, December 24, 2011

கணினி சான்றிதழ் பயிற்சி

சென்னை, டிச. 23: தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் சார்பில் கணினி சான்றிதழ் பயிற்சி அளிக்கப்படுகிறது.  இது குறித்து தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் செயல் இயக்குநர் பி. ஐயம்பெருமாள் வெளியிட்ட செய்தி:
கணினி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விண்டோஸ் மற்றும் எம்.எஸ்.ஆபீஸ் குறித்து குறுகிய கால பயிற்சி அளிக்கப்படுகிறது.  சென்னை காந்தி மண்டபம் சாலை, பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மைய வளாகத்தில், டிசம்பர் 28ம் தேதி பயிற்சி வகுப்புகள் தொடங்குகின்றன.

மேலும் விவரங்களுக்கு: 044 - 2441 0025,  2440 2894,  2491 5250 

இரட்டை தேர்வு முறைக்கு எதிர்ப்பு: பட்டதாரிகள் உண்ணா விரதம்

சென்னை : ஆசிரியர் பணி நியமனத்துக்காக கொண்டு வந்துள்ள இரட்டை தேர்வு முறையை அரசு ரத்து செய்யாவிட்டால் மாபெரும் உண்ணா விரதம் இருக்க பதிவு மூப்பு பட்டதாரிகள் அறிவித்துள்ளனர். தமிழ்நாடு பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில செயலாளர் மனோகர், பொருளாளர் அய்யாதுரை மாநில தலைவர் ரத்தினக்குமார் ஆகியோர் நேற்று நிருபர்களை சந்தித்தனர்.
அப்போது ரத்தினகுமார் கூறியதாவது:

பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் பதிவு மூப்பு அடிப்படையில் நடந்தது. இந்த முறையை மாற்றி தகுதி தேர்வு, போட்டி தேர்வு என இரட்டை தேர்வு முறையை அரசு கொண்டு வந்துள்ளது. அந்த தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்குத்தான் பணி நியமனம் என்றும் அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால், வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 20 ஆண்டுகளாக காத்திருக்கும் பட்டதாரிகளும், அவர்களின் குடும்பத்தினரும் பாதிக்கப்படுவார்கள்.

 டி.என்.பி.எஸ்.சி.,யில் மாபெரும் ஊழல் நடந்துள்ளது போல இப்போது பெரிய அளவில் ஊழல் நடக்க இந்த இரட்டை தேர்வு முறை வாய்ப்பாக இருக்கும். இதனால் ஏற்கெனவே சான்று சரிபார்ப்பு முடித்து காத்திருக்கும் 8000 பேருக்கும் பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும். இது தவிர வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போர் 25000 பேர் உள்ளனர். 

அவர்களுக்கும் பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும். தமிழக அரசு, இரட்டை தேர்வு முறையை ரத்து செய்யாவிட்டால் 28ம் தேதி சென்னை காயிதே மில்லத் கல்லூரியின் பின்புறம் மாநிலம் தழுவிய உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளோம். அதற்கு பிறகும் அரசு கண்டுகொள்ளாவிட்டால்,நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம்.
இவ்வாறு ரத்தினகுமார் தெரிவித்தார்

Friday, December 23, 2011

பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்

பெரம்பலூர், டிச. 20: சென்னையில் டிச. 28 ஆம் தேதி நடைபெறவுள்ள உண்ணாவிரதப்  போராட்டத்தில் பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தினர்கள் பங்கேற்க  வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.   இதுகுறித்து தமிழ்நாடு பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின்  பெரம்பலூர் மாவட்டத் தலைவர் ரங்கநாதன், செயலர் அழகுமுத்து, பொருளாளர் விசுவநாதன் ஆகியோர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:  
தகுதி தேர்வு மற்றும் போட்டித் தேர்வுகளை எதிர்த்து, பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர் நியமனம் வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில்  மாநிலத் தலைவர் ரத்தினகுமார் வழக்குத் தொடர்ந்துள்ளார்.   இந்தக் கோரிக்கையை நிறைவேற்றக் கோரி, டிச. 28 ஆம் தேதி சென்னை காயிதேமில்லத் நினைவிடம் எல்.ஐ.சி. அலுவலகம் அருகில் கவன ஈர்ப்பு அடையாள  உண்ணாவிரதம் நடைபெறுகிறது.
இதில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து பதிவு மூப்பு பட்டாரி ஆசிரியர்களும் கலந்து கொள்ள வேண்டும். மேலும், இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் டிச. 25 ஆம் தேதி பெரம்பலூர் மதரஸô சாலையில் நடைபெறுகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கள்ளர் சீரமைப்புத் துறையில் A.E.E.O., பணியிடம்

மதுரை: கள்ளர் சீரமைப்புத்துறை துவக்கப் பள்ளிகளை நிர்வகிக்க உதவித் துவக்கக் கல்வி அலுவலர் (ஏ.இ.இ.ஓ.,)பணியிடம் உருவாக்கப்பட்டுள்ளது. மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் கள்ளர் சீரமைப்புத் துறை பள்ளிகள் செயல்படுகின்றன. இத்துறையின் கீழ் 240 துவக்க, நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. இவற்றை கவனிக்க, இடைநிலை ஆசிரியர் அந்தஸ்தில் 6 மேற்பார்வையாளர்கள் பணியிடம் உள்ளது. இவர்கள் கள்ளர் சீரமைப்புத்துறை பள்ளிகளை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபடுவர்.

இப்பணியிடங்களை, சமீபத்தில் உதவிதுவக்கக் கல்வி அலுவலர்கள் பணியிடமாக மாற்றி, அரசு உத்தரவிட்டுள்ளது. இவர்கள் பள்ளிக் கல்வித்துறையில் உள்ளது போல 6 சரகங்களாக பிரித்து, இயங்க உள்ளனர். இதற்காக சோழவந்தான், செக்கானூரணி, உசிலம்பட்டி, உத்தமபாளையம், பெரியகுளம், திண்டுக்கல்லில் இந்த அலுவலகங்கள் செயல்படும்.

உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க மாநில சட்டசெயலாளர் சின்னப்பாண்டி கூறுகையில், ""துவக்கக் கல்வித் துறையில் உள்ளதுபோல, பணியிடத்தை மாற்ற ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர். அதை அரசு நிறைவேற்றியுள்ளதற்கு நன்றி,'' என்றார்.

தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க குழு

விருதுநகர்: எஸ்.எஸ்.ஏ., சார்பில் நியமிக்க உள்ள பகுதி நேர ஆசிரியர்களை தேர்வு செய்ய, கலெக்டர் தலைமையில் குழு அமைக்கப்பட உள்ளது.தமிழகத்தில் எஸ்.எஸ்.ஏ., சார்பில், இசை, ஓவியம், தொழிற்கல்வி, உடற்கல்வி, கம்ப்யூட்டர் போன்ற பாடங்களுக்கு பகுதி நேர ஆசிரியர்களாக, 15 ஆயிரத்து 549 பேர் நியமிக்க உள்ளனர். இதற்கான விண்ணப்பங்கள் அனைத்து மாவட்டங்களிலும் பெறப்பட்டுள்ளன. சீனியாரிட்டி, உயர் கல்வித்தகுதி, இட ஒதுக்கீட்டு அடிப்படையில் நியமனம் செய்ய உள்ளனர்.
இவர்களை தேர்வு செய்ய, அந்தந்த மாவட்ட கலெக்டர் தலைமையில் தேர்வுக்குழு அமைக்கப்பட உள்ளது. இதில், முதன்மை கல்வி அதிகாரி, எஸ்.எஸ்.ஏ., முதன்மை கல்வி அதிகாரி, தேர்வு செய்யப்படும் துறையில் உள்ள ஒரு ஆசிரியரும் பங்கு பெறுவார்கள். இக்குழு தேர்வு செய்யும் ஆசிரியர்களுக்கே பணி நியமனம் வழங்கப்பட உள்ளது.

Thursday, December 22, 2011

நீண்ட காத்திருப்பிற்கு பின் கிடைத்தது பணி


தேர்வாகியும், பணி நியமனம் கிடைக்காமல், பல மாதங்களாக புலம்பி வந்த பட்டதாரி ஆசிரியர்களில், சிறுபான்மை மொழி ஆசிரியர்கள் உள்ளிட்ட 181 பேரைத் தவிர, மீதமுள்ளவர்களுக்கு, பள்ளிக் கல்வித்துறை பணி நியமன உத்தரவு அனுப்பி உள்ளது.சட்டசபை தேர்தலுக்கு முன், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில், 2,804 பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. தேர்வுப் பட்டியல் வெளியிடுவதற்குள், சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப் பட்டதால், நிறுத்தி வைக்கப்பட்டது.

தேர்தலுக்குப் பின், சான்றிதழ் பிரச்னை காரணமாக 24 பேரும், சிறுபான்மை மொழிப் பாட ஆசிரியர்களின் தேர்வுப் பணிகள் முடியாததால், இதற்கான, 157 பணியிடங்கள் தவிர, மீதமுள்ள 2,623 பணியிடங்களுக்கான தேர்வானவர்கள் பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது.ஆனாலும், இவர்களுக்கு பணி நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்காததால், ஆசிரியர் பணிக்கு தேர்வானவர்கள் பீதி அடைந்தனர். 
இந்த நிலையில், 2,623 பேரையும் பணி நியமனம் செய்து, அதற்கான உத்தரவுகள் அனுப்பப்பட்டுள்ளன.மத்திய இடைநிலைக் கல்வி திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளில், காலியாக உள்ள இடங்களில் பெரும்பாலானோரும், மீதமுள்ளவர்கள், அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் நியமிக்கப் பட்டுள்ளனர்.

Wednesday, December 21, 2011

12 ஆயிரம் ஆசிரியர் நியமனப் பணி மார்ச்சில் தொடங்கும்




சென்னை, டிச. 20: புதிதாக 12 ஆயிரம் ஆசிரியர்களை நியமனம் செய்வது தொடர்பாக தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. ஆசிரியர்களை நியமிக்கும் பணிகள் மார்ச் மாதத்தில் தொடங்கும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
  30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். முதற்கட்டமாக, 12 ஆயிரத்து 420 ஆசிரியர்களை நியமிக்க தமிழக அரசு உத்தரவை வழங்கியுள்ளது.அதன்படி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் 1,305 பேரும், பட்டதாரி ஆசிரியர்கள் 6,679 பேரும், விவசாய ஆசிரியர்கள் 25 பேரும் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வின் மூலம் நியமிக்கப்பட உள்ளனர். இடைநிலை ஆசிரியர்கள் 3,565 பேரும், சிறப்பாசிரியர்கள் 846 பேரும் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு மூப்பின் அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர்.மொத்தம் 12,420 ஆசிரியர்களை நியமிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
 இந்த நியமனங்கள் தொடர்பாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறியது:
 கடந்த ஆண்டுக்கான சட்டக் கல்லூரி விரிவுரையாளர் நியமனம் உள்ளிட்ட பணிகள் இப்போது நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் அனைத்தும் மார்ச் மாதத்துக்குள் நிறைவடைந்துவிடும்.
 அதன்பிறகு, புதிய ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான பணிகள் தொடங்கும். இப்போது 12,420 ஆசிரியர்களை நியமிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மீதமுள்ள சுமார் 17 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்களை நியமிப்பதற்கான அரசாணையும் விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் எழுத்துத் தேர்வுகளுக்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் மாதத்தில் வரவேற்கப்படும். வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்பப்படும் பணியிடங்களுக்கு பதிவு மூப்புப் பட்டியல் மார்ச் மாதத்தில் கோரப்படும்.சான்றிதழ் சரிபார்ப்பு, எழுத்துத் தேர்வுகளுக்குப் பிறகு வரும் செப்டம்பர் மாதத்துக்குள் பணி நியமனம் செய்ய திட்டமிட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறும் பட்டதாரி ஆசிரியர்கள் மட்டுமே போட்டித் தேர்வில் பங்கேற்க முடியும். இந்த தகுதித் தேர்வை மே முதல் வாரத்திலும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வை ஜூன் மாதத்திலும் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
  மாவட்ட அளவிலான 16,548 பகுதிநேர ஆசிரியர்கள் நியமனம், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் நியமனம் உள்ளிட்ட பணிகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளன.

தமிழகம் 2,623 பட்டதாரி ஆசிரியர்கள் நேரடி நியமனம்: தபால் மூலம் பணிநியமன ஆணை

சென்னை, டிச. 20: சான்றிதழ் சரிபார்ப்பு நிறைவடைந்து கடந்த ஓர் ஆண்டாக காத்திருந்த 2,623 பட்டதாரி ஆசிரியர்களுக்கான நேரடி பணி நியமன ஆணைகள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.  தொடக்கக் கல்வித் துறைக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள சுமார் 1,200 பட்டதாரி ஆசிரியர்களுக்கு வெள்ளி அல்லது சனிக்கிழமை பணி நியமன ஆணைகள் அனுப்பப்படும் என்று தெரிகிறது.
 மாநில பதிவு மூப்பின் அடிப்படையில் ஏறத்தாழ 6 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்கும் பணி கடந்த ஆண்டு தொடங்கியது. கடந்த ஆண்டு நவம்பரில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது. விடுபட்டவர்களுக்கு இந்த ஆண்டு ஜனவரியில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது.
 பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வுப் பட்டியலை மார்ச் முதல் வாரத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. அதன்படி, அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட 1,200 பட்டதாரி ஆசிரியர்கள் உடனடியாக பணியமர்த்தப்பட்டனர். சட்டப்பேரவைத் தேர்தல், உயர் நீதிமன்ற வழக்குகள் காரணமாக மீதமுள்ள பட்டதாரி ஆசிரியர்களை உடனடியாக பணியமர்த்தப்படவில்லை. 

 உயர் நீதிமன்ற உத்தரவின்படி திருத்திய பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வுப் பட்டியல் கடந்த செப்டம்பரில் வெளியிடப்பட்டது.  இதில் சுமார் 3,900 பட்டதாரி ஆசிரியர்கள் இடம்பெற்றிருந்தனர். இவர்களில் பள்ளிக் கல்வித் துறைக்கு 2,623 ஆசிரியர்களும், தொடக்கக் கல்வித் துறை, நலத் துறை மற்றும் சீர் மரபினர் பள்ளிகளுக்கு மீதமுள்ள ஆசிரியர்களும் ஒதுக்கப்பட்டனர்.  பள்ளிக் கல்வித் துறை கீழ் தேர்ந்தெடுக்கப்ட்ட ஆசிரியர்களுக்கான நேரடி பணி நியமன ஆணைகள் தபால் மூலம் திங்கள்கிழமை அனுப்பப்பட்டன. தொடக்கக் கல்வித் துறையின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு சில நாள்களில் பணி நியமன ஆணைகள் அனுப்பப்படும் என்று தெரிகிறது.

Tuesday, December 20, 2011

ஆறாம் வகுப்பு வரை இனி ஒரு புத்தகம் மட்டுமே!

சென்னை, டிச.19: மாணவர்களின் புத்தகச் சுமையைக் குறைக்கும் விதமாக வரும் கல்வியாண்டில் 1 முதல் 6-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் ஒரு பருவத்துக்கு ஒரு புத்தகத்தை மட்டுமே எடுத்துச் செல்லும் வகையில் புத்தகங்கள் பிரித்து அச்சடிக்கப்பட உள்ளன.  முப்பருவ முறையின்படி, 7, 8 ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் ஒரு பருவத்துக்கு இனி 2 புத்தகங்களை மட்டுமே எடுத்துச் செல்லும் வகையில் பிரிக்கப்பட்டு அச்சடிக்கப்பட உள்ளன. பிற வகுப்பு மாணவர்களுக்கு இப்போதுள்ளது போல் 5 முதல் 6 புத்தகங்கள் வரை வழக்கமான முறையில் அச்சடிக்கப்பட உள்ளன. 


 மாணவர்களின் புத்தகச் சுமையைக் குறைக்கும் நோக்கத்தில் தமிழகத்தில் முப்பருவ முறை அறிமுகப்படுத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதன்படி, முழுக் கல்வியாண்டுக்கும் உரிய புத்தகங்கள் மூன்று பருவங்களுக்கு ஏற்றவாறு பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பருவ முடிவிலும் தொடர் மற்றும் உள் மதிப்பீட்டுடன் கூடிய தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.  இதன் மூலம் மாணவர்களின் கவலை, அச்சம், மன அழுத்தம் ஆகியவை பெரிதும் குறைக்கப்படுவதுடன், பள்ளிக்கூடம் செல்லும் குழந்தைகளுக்குப் புத்தகச் சுமையினால் ஏற்படும் இன்னல்கள் தீர்க்கப்படும் என்று கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

ஒவ்வொரு பருவத்துக்கும் ஏற்றவாறு பாட நூல்களை மூன்றாகப் பிரிப்பது தொடர்பாக ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் அரசுக்குப் பரிந்துரையை அனுப்பியிருந்தது.  அந்தப் பரிந்துரையை ஏற்று பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.எஸ்.ஸ்ரீதர் வெளியிட்டுள்ள அரசாணையின் விவரம்: 
 * ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை நடைமுறையில் உள்ள பாடநூல் பக்கங்களைக் கணக்கிடும்போது கீழ்க்கண்டவாறு பாடநூல்கள் பிரிக்கப்படுகின்றன. 
* 1 முதல் 6 வகுப்புகளுக்கு ஒரு பருவத்துக்கு ஓர் ஒருங்கிணைக்கப்பட்ட பாடப்புத்தகம் வீதம் மூன்று பருவங்களுக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும். 
* 1, 2 வகுப்புகளில் தமிழ், ஆங்கிலம், கணக்கு, சூழ்நிலையியல் ஆகிய 4 பாடங்களும் ஒருங்கிணைக்கப்பட்டிருக்கும்.
* 3, 4, 5, 6 வகுப்புகளில் தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் ஆகிய ஐந்து பாடங்கள் ஒருங்கிணைக்கப்பட்டிருக்கும்
.  * 7, 8 வகுப்புகளில் தமிழ், ஆங்கிலத்தைத் தொகுதி-1 எனவும், கணக்கு, அறிவியல், சமூக அறிவியலைத் தொகுதி-2 எனவும் ஒரு பருவத்துக்கு இரண்டு புத்தகங்கள் வெளியிடப்படும்
.  * தமிழ் வழி, ஆங்கில வழி ஆகிய இரண்டு வழிகளுக்கும் மற்றும் சிறுபான்மை மொழிகளுக்கும் மேற்கண்ட நடைமுறைகள் பின்பற்றப்படும். 
* சிறுபான்மை மொழிப்பாடங்களில் தமிழ், ஆங்கிலம் தவிர பிற பாடங்கள் அந்தந்த மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு சேர்த்து அளிக்கப்படும்.
  * சிறுபான்மை மொழி மாணவர்களுக்கு அந்தந்த மொழி சார்ந்த மொழிப் பாட நூல் தனியாக வழங்கப்படும். அது மூன்றாகப் பிரிக்கப்படாமல் ஆண்டிற்கு ஒரு புத்தகமாகவே, இப்போது நடைமுறையில் உள்ளதைப் போலவே வழங்கப்படும்.
* பாடப்புத்தகங்களை "ஏ 4' அளவில் அச்சிடுவதன் மூலம் பாடவாரியாக ஒருங்கிணைப்பது எளிதாக அமையும்.
* 9, 10 வகுப்புகளுக்கு முப்பருவ முறை 2012-13-ல் அறிமுகப்படுத்தப்படவில்லை என்பதால் பழைய முறையைப் பின்பற்றி பாடநூல்களை அச்சிட்டு வழங்க வேண்டும்.  ஆசிரியர் கல்வி வாரியத்தின் பரிந்துரையை ஏற்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. ஒவ்வொரு பருவத்துக்கும் ஏற்றவாறு பாடநூல்களைப் பிரித்து அச்சிட தமிழ்நாடு பாடநூல் கழகத்துக்கு அனுமதியும் வழங்கப்படுகிறது என்று ஸ்ரீதர் தெரிவித்துள்ளார். 
 மொத்தம் 6.5 கோடி புத்தகங்கள்: இந்த ஆண்டு 1 முதல் 12-ம் வகுப்பு வரை மொத்தம் 6.5 கோடி புத்தகங்கள் அச்சிடப்பட உள்ளன. இந்தப் புத்தகங்களை அச்சிடுவதற்கு 150 பதிப்பாளர்கள் வரை இறுதிசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. புத்தகங்களை அச்சிடும் பணி ஜனவரி முதல் தொடங்க உள்ளதாகத் தெரிகிறது.  
 சமச்சீர் புத்தகங்கள்: வரும் கல்வியாண்டில் சமச்சீர் புத்தகங்களில் உள்ள குறைகளை நீக்கி பிழைகளற்ற புத்தகங்களாக அச்சிடுவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஜனவரியில் தொடங்கி மார்ச் மாதத்துக்குள் அச்சிடும் பணிகள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  கல்வி ஆண்டின் தொடக்க நாளிலேயே: அனைத்து மாணவர்களுக்கும் வரும் கல்வியாண்டின் தொடக்க நாளிலேயே பிழையில்லாத, தரமான புத்தகங்கள் கிடைப்பதற்கான நடவடிக்கைகளை கல்வித்துறை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.   இப்போதைய ஒருங்கிணைக்கப்பட்ட புத்தகங்கள்
  1. 4 (368 பக்கங்கள்) 1 (138 பக்கங்கள்)
 2. 4 (432 பக்கங்கள்) 1 (154 பக்கங்கள்) 
 3. 5 (640 பக்கங்கள்) 1 (228 பக்கங்கள்) 
 4. 5 (632 பக்கங்கள்) 1 (225 பக்கங்கள்)
 5. 5 (680 பக்கங்கள்) 1 (243 பக்கங்கள்) 
 6. 5 (608 பக்கங்கள்) 1 (243 பக்கங்கள்)  
7. 5 (1024 பக்கங்கள்) 2 (190 பக்கங்கள்)
 8. 5 (1152 பக்கங்கள்) 2 (220 பக்கங்கள்)  

"பகுதிநேர ஆசிரியர் நியமனம் நேர்மையாக நடக்க ....?

அரசுப் பள்ளிகளில், 16 ஆயிரத்து, 549 பகுதிநேர ஆசிரியர்கள் நியமனம், நேர்மையாக நடக்கும்; இதில் ஏதேனும் தவறுகள் நடந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என, "அனைவருக்கும் கல்வி திட்ட' இயக்குனர் முகம்மது அஸ்லம் எச்சரித்து உள்ளார்.

பகுதி நேர ஆசிரியர் பணியிடங்களுக்காக, ஒவ்வொரு மாவட்டத்திலும், 5,000 முதல், 8,000 பேர் வரை விண்ணப்பித்து உள்ளனர். மாநிலம் முழுதும்,  இரண்டு லட்சத்திற்கும் அதிகமாக விண்ணப்பங்கள் குவிந்துள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்கிடையே, இந்தப் பதவியை பிடிக்க, சிலர் ஆளுங்கட்சி பிரமுகர்களை மொய்த்து வருகின்றனர். மேலும், ஒரே தகுதி நிலையில், ஏராளமானோர் விண்ணப்பித்து இருப்பதால், நியமனம் எப்படி நடக்கும் என்று தெரியாமலும், விண்ணப்பித்தவர்கள் குழம்பிய நிலையில் இருக்கின்றனர்.

தேர்வு எப்படி?  இதுகுறித்து, அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனரான ஐ.ஏ.எஸ்., அதிகாரி முகம்மது அஸ்லமிடம் கூறியதாவது: இட ஒதுக்கீடு முறையை பின்பற்றி, வேலை வாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு மற்றும் பணிக்கான தகுதிகள் அடிப்படையில், நேர்முகத்தேர்வு நடத்தி, பகுதி நேர ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த நியமனத்தில், மாற்றுத் திறனாளிகளுக்கு, 3 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப் படும். மாவட்ட அளவிலான தேர்வுக் குழுவில், கலெக்டர்களும் இடம் பெற்றுள்ளனர். தேர்வு முறையை, அவர்கள் முழு அளவில் கவனிப்பர்.

தகுதியானவர் தேர்வு : ஒரே தகுதி நிலையில், நூற்றுக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தால், அவர்களில் தகுதியானவர்கள் எப்படி தேர்வு செய்யப்படுவர் என்பது பற்றி அதிகாரிகளிடம் கேட்டபோது,

""சமமான கல்வித்தகுதி இருந்தால், அவர்களில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பில் யாருக்கு முன்னுரிமை இருக்கிறது என்று பார்ப்போம். அதிலும் சமமாக இருந்தால், பிறந்த தேதியை பார்ப்போம். இப்படி, பல நிலைகளில் தகுதியின் அடிப்படையிலேயே பகுதிநேர ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர்,'' என்று தெரிவித்தனர்.
தேர்வில் தவறு நடந்ததாக புகார் எழுந்தால், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப் படும், என முகம்மது அஸ்லம் கூறினார்.


அவிங்களும் இதையேதான்  சொன்னாங்க ...?

tnpsc- இல்  ஒவ்வொரு நியமனத்தின்  போதும், நியாயமான  முறையில், பணி நியமனம்   நடப்பதாகவும் , யாரையும் நம்ப வேண்டாம், பணம் கொடுத்து ஏமாற  வேண்டாம் என்று காட்டு  கூச்சல் போட்டனர். அவர்கள்  எல்லாம்  இன்று, விசாரணை வளையத்தில்...
ஆகவே ஜனங்களே...  உஷாரா   உஷார்  பண்ணுங்க....
இந்த  பதிவின் தலைப்பில் உள்ள (...?)தை      புரிஞ்சிக்குங்க...

Monday, December 19, 2011

பகுதி நேர ஆசிரியர் பணிக்கு 1,624 பேர் விண்ணப்பிப்பு

திருவள்ளூர்:அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ், பகுதி நேர ஆசிரியர் பணியிடங்களுக்கு, 1,624 பேர் விண்ணப்பித்துள்ளனர்.திருவள்ளூர் மாவட்டத்தில் 809 பேர் நியமிக்கப்பட உள்ளனர். இதில், 268 பேர் கலை பாடத்துக்கும், 268 பேர் சுகாதாரம் மற்றும் உடற்கல்வி பாடத்துக்கும், 273 பேர் தொழிற்கல்வி பாடத்துக்கும் நியமிக்கப்பட உள்ளனர்.
இன்று முதல் நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு கடிதம் அனுப்பப்படும். அவர்கள், வரும் 26ம் தேதி முதல் ஜன., 15 வரை நேர்முகத் தேர்வு நடத்தி, ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

சிறப்பு ஆசிரியர் பணி விண்ணப்பிக்க டிச., 21 கடைசி

சிவகங்கை : சிறப்பு ஆசிரியர் தற்காலிக பணிக்கென பூர்த்தி செய்த விண்ணப்பத்தை வழங்க டிச.,21 அன்று கடைசிநாள் என கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பள்ளிகளில் தோட்டக்கலை, வாழ்வியல் மற்றும் தகவல் திறன், "மேஷனரி மற்றும் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்' பாடங்களுக்கென தொகுப்பூதிய (மாதம் ரூ.5,000) அடிப்படையில் சிறப்பு ஆசிரியர்கள் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான விண்ணப்பம் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் வழங்கப்படுகிறது. விண்ணப்பம் பெறவும், பூர்த்தி செய்த விண்ணப்பத்தை திரும்ப ஒப்படைக்க கடைசி நாள் டிச.,21. அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை நேரடியாக வழங்கவேண்டும்.

Sunday, December 18, 2011

மாணவர்களை சந்தோஷப்படுத்துமா முப்பருவ கல்வித்திட்டம்?

தமிழகத்தில் அடுத்த கல்வியாண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, முப்பருவ கல்வி திட்டத்தை அமல்படுத்த, அரசு ஆணை வெளியிடப்
பட்டுள்ளது.சமச்சீர் கல்வி திட்டத்தின் மூலம், தற்போது ஒன்று முதல்
பத்தாம் வகுப்பு வரை, சமச்சீர் பாடத்திட்டமாக மாற்றப்பட்டதால், அனைத்து மாணவர்களும் ஏற்றத்தாழ்வின்றி, ஒரே பாடங்களை படிக்க முடிகிறது. ஜூனில் துவங்கும் முதல் பாடத்திலிருந்து, பொதுத்தேர்வு வரையான கடைசி பாடம் வரை,
அரையாண்டிலிருந்து அனைத்துப் பாடங்களையும் தொடர்ந்து படிக்க வேண்டும். ஓராண்டுக்கான பெரிய புத்தகங்களையும், ஒவ்வொரு பாடத்திற்கான நான்கு நோட்டுக்களையும், தேர்வு முடியும் வரை சுமக்க வேண்டும்.ஒவ்வொரு தேர்வுக்கும் சராசரியாக 20 பாடம் என்றால் கூட, கடைசி ஒரு மாதத்தில் 100 பாடங்களை மனப்பாடம் செய்வது, அனைத்து மாணவர்களுக்கும் இயலாது. மேலும் பள்ளி வளாகத்தில் படிப்பதும், எழுதுவதும் தவிர, மாணவர்களுக்கு சிந்தனை செய்வதற்கு நேரமும், வாய்ப்பும் இல்லை. இது தான் இப்போதுள்ள தேர்வு முறை.

இப்போது அறிவித்துள்ள முப்பருவ முறை, மாணவர்களின் உற்சாகத்தை இருமடங்காக்கி உள்ளது.முதுகில் பையை சுமந்து கொண்டு, கஷ்டப்பட்டு செல்லும் மாணவர்களின் நிலையில் இருந்து பார்த்தால், இது சந்தோஷமான விஷயம். பாடச்சுமையும்,
எடையும் ஒரே நேரத்தில் குறைவதால், மனதின் பாரமும் சட்டென்று குறைந்து விடும்.
ஜூன் முதல் செப்., வரையும், அக்., முதல் டிச., வரையும், ஜன., முதல் ஏப்., வரையும் மூன்று பருவங்களாக பிரித்து, புதுப்புது பாடங்களை படிக்கும் போது, ஆர்வம் அதிகரிக்கும். வெறும் வார்த்தைகளை கவனிப்பதை விட, காட்சிகளாக, செயல்விளக்கமாக இருந்தால், எளிதாக பாடங்கள் மனதில் பதிந்துவிடும்.
முப்பருவ கல்வி திட்டம்... கல்வியாளர்களின் பார்வையில் எப்படி இருக்கிறது?

*டபிள்யூ. தயா சியாமளா(முதல்வர், எஸ்.பி.ஓ.ஏ., மேல்நிலைப் பள்ளி, மதுரை): இத்திட்டத்தின் மூலம் மாணவர்கள் தினமும் படிக்கும் பழக்கத்தை வளர்க்க முடியும். மூன்று முறை தேர்வுகள் நடத்தப்படுவதால், ஒவ்வொரு தேர்வுக்கும்
தனியாக படிக்க வேண்டும். இது மாணவர்களுக்கு எளிதாக இருக்கும். கணிதத்தை பொறுத்தவரை, இத்திட்டம் சரியாக வருமா என சொல்ல முடியாது. கணிதத்தின் அடிப்படை கோட்பாடுகளை தொடர்ந்து படித்தால் தான், மனதில் நிற்கும். எனவே கணிதத்தில் பாடத்தை வகுக்கும் போது, முந்தைய பாடங்களின் நினைவுபடுத்தல் இருக்க வேண்டும். இலக்கணப் பாடங்களையும் தொடர்ந்து படித்தால் மட்டுமே, மாணவர்கள் மொழிப்புலமை பெறமுடியும்.
*எஸ்.வி.டி. ராஜன் (தலைமை யாசிரியர், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, எழுமலை ):
இம்முறை மாணவர்களை உற்சாகப்படுத்தும். ஆனால் ஆசிரியர்களுக்கு தான் வேலை கடினம். சில பள்ளிகளில் ஜன., துவக்கத்தில் இருந்து தான், மாணவர்களை தேர்வுக்கு தயார் செய்வர். இனிமேல் அது இயலாது.

ஆசிரியர்கள் அந்தந்த பாடங்களில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தி கற்றுத் தந்தால், மாணவர்கள் மதிப்பெண் பெறும் விகிதமும் அதிகரிக்கும். கணிதம், இலக்கணம் இதெல்லாம் காலத்துக்கும் தொடரும் விஷயம். எங்களைப் போன்ற கிராமப்புற பள்ளி மாணவர்களை கையாளுபவர்களுக்கு, இந்த முறை பெரிய வரம் என்பேன். எங்கள் மாணவர்களும் அந்தந்த பாடங்களை மட்டும் படித்து, அதிக மதிப்பெண் பெறுவர்.
*எஸ்.அப் துல் ரஹ்மான் (எட்டாம் வகுப்பு மாணவர், மதுரைக் கல்லூரி பள்ளி, மதுரை): நான் நன்றாக படிக்கும் மாணவனாக இருந்தாலும், அனைத்து பாடங்களையும் திரும்ப திரும்ப படித்தால் தான் நினைவில் நிற்கிறது. முப்பருவ முறையாக இருந்தால், குறைந்த பாடங்களில் அதிக கவனம் செலுத்தலாம். மதிப்பெண்களும் அதிகமாக பெறலாம்.
மூடை போல புத்தக சுமையை தூக்க வேண்டாம். மாணவர்களுக்கு சந்தோஷமாக இருக்கும்.

*எஸ். ரத்தினபாண்டியன் (தாளாளர், எம்.எஸ்.பி., பள்ளி, திண்டுக்கல்): நடைமுறை கல்வியில் மனப்பாடமே பிரதானமாக உள்ளது. மாணவர்கள் புத்தகங்களை தூக்கி சுமப்பதால், உடல் பாதிப்பு, மன அழுத்தம் ஏற்படுகிறது. புதியமுறையில், வகுப்பறையில் மாணவர்களுக்கு அதிகம் நேரம் கிடைக்கும். ஆசிரியர்களும் செய்முறை, சோதனை, நேரடி
ஆய்வுகள் மூலம் மாணவர்களை சோதிக்க முடியும்; தனித்திறமை வெளிப்படும். ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சி அளித்தால் மட்டுமே, திட்டத்தின் நோக்கம் மாணவர்களை சென்றடையும்.

*கே.கலைவாணி (எட்டாம் வகுப்பு ஆசிரியை, குமரன் நடுநிலைப்பள்ளி, ராமநாதபுரம்): தற்போதுள்ள முறையில் மாணவர்கள் அதிகமான பாடங்களை படிப்பதால் சோர்வடைகின்றனர். சாதாரணமாக வீட்டுப்பாடங்களை செய்வதில் திணறி, மறுநாள் பாடங்களை கவனிக்க முடியாத நிலையை நேரில் காணமுடிகிறது. பருவமுறையில் படிப்பதும், கற்றுத்தருவதும் எளிது. மாணவர்கள் புரிந்து கொண்டு, அதிக மதிப்பெண்கள் பெறமுடியும். தற்போதைய முறையில், சுமாரான மாணவர்களால் திருப்புதல் தேர்வை எதிர்கொள்ள முடியவில்லை. பருவமுறை தேர்வில் குறைந்த பாடங்களே இருப்பதால், கல்வியின் மீது ஆர்வத்தை அதிகரிக்க செய்யும்.

*வி.சியாமளா(கல்வியாளர், ஆக்ஸ்போர்டு மேல்நிலைப் பள்ளி, சிவகங்கை): ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை, முப்பருவ முறை சரியாக இருக்கும். ஏனென்றால் ஒரே ஆசிரியரே அனைத்து பாடங்களையும் நடத்திவிடுவர். ஆறாம் வகுப்பிற்கு மேல் இத்திட்டத்தை அமல்படுத்தினால், மாணவர்களின் நினைவுத்திறன் குறைந்துவிடும்.
தற்போது மொபைல் போன் பயன்பாட்டால், உறவினர்களின் போன் எண்களை கூட நினைவில் வைப்பதில்லை. இதேநிலை தான் கல்வியிலும் ஏற்படும். படித்து முடித்தவுடன், புத்தகங்களை தூக்கி எறிந்துவிடுவர். அந்தப்பாடம் அப்படியே மறந்துவிடும். அறிவியல் துறையை தேர்ந்தெடுக்கும் மாணவர்களுக்கு, இது பிரச்னையாகிவிடும். ஆசிரியர்களுக்கும் அனைத்து பாடங்களும் நினைவில் இருக்காது.நமது நிருபர் குழு

அறிவுத் திறனை வளர்க்கலாம்:(முதன்மை கல்வி அலுவலர், மதுரை): அரசு திட்டத்தில் இது சிறந்த அணுகுமுறை. புத்தக சுமை இல்லாததால், மாணவர்களின் மனஅழுத்தம் குறையும். இதனால் ஆசிரியர்களின் மனஅழுத்தமும் குறையும். வெறும் பாடங்களை மட்டும் படிக்காமல், பாடம் சார்ந்த விஷயங்களையும் கற்றுக் கொள்ள வாய்ப்பு கிடைக்கிறது. சிந்திக்கும் திறனை இது மேம்படுத்தும்.

கேரளா, கர்நாடகாவில் இம்முறை செயல்படுகிறது. ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, அனைத்து மாணவர்களையும் பாரபட்ச மின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கிறோம். இதனால் முப்பருவ முறையால், இளம் மாணவர்களின் அறிவுத்திறன் குறையாது. கிரேடிங் முறை மூலம், மாணவர்களின் திறமையை வெளிப்படுத்த முடியும். முப்பருவ தேர்வு முறையில், வெற்றி பெறுவதற்கான மதிப்பெண் பற்றி இன்னும் முழுமையாக கூறவில்லை. அரசு அறிவித்த பின் தான், வெற்றிபெறுவதற்கான மதிப்பெண்ணை அதிகரிக்க வேண்டுமா என்பதை பற்றி கூறமுடியும்.

Saturday, December 17, 2011

9,399 புதிய ஆசிரியர்கள் நியமனம் பட்டியல் தயாரிக்கும் பணி தீவிரம்

சென்னை, டிச.17:
பள்ளிக் கல்வியின் கட்டுப்பாட்டில் வரும் உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக 9,399 இடங்களில் புதிய ஆசிரியர் களை தெரிவு செய்து தர வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்திடம், பள்ளிக் கல்வி இயக்ககம் கேட்டுக் கொண்டுள்ளது. இதையடுத்து, மேற்கண்ட பணியிடங்களுக்கான ஆசிரியர்களை தேர்வு செய்ய ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு நடத்த முடிவு செய்துள்ளது. பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் 5,500 உயர்நிலைப் பள்ளிகள், 5,400 மேல்நிலைப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில், கடந்த ஆண்டு நிலவரப்படி 4,098 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அதேபோல், கடந்த ஆண்டில் 1,210, புதிய பணி இடங்கள் 1,305 என முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப வேண்டியுள்ளது. இது தவிர சிறப்பு ஆசிரியர்கள் 1526 பணியிடங்கள், விவசாய ஆசிரியர் பணியிடங்கள் 25 காலியாக உள்ளன.
மேற்கண்ட பணியிடங்களில் ஆசிரியர்களை இந்த ஆண்டே நியமிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, காலிப் பணியிடங்கள் குறித்த பட்டியலை பள்ளிக் கல்வி இயக்ககம் தயாரித்து, ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் வழங்கியுள்ளது. இதையடுத்து, மேற்கண்ட பணியிடங்களில் ஆசிரியர்களை நியமனம் வசதியாக, ஆசிரியர் தேர்வு வாரியம் போட்டி எழுத்துத் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

கற்கும் பாரத திட்ட பணியில் சேர விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு

பெரம்பலூர் : "கற்கும் பாரதம் திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் மைய பொறுப்பாளர் பணிக்கு வரும் 19ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்' பெரம்பலூர் கலெக்டர் தரேஷ்அஹமது தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை:
 பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் கற்கும் பாரதம் திட்டத்தில் தற்காலிக தொகுப்பூதிய முறையிலான ஒரு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் மைய பொறுப்பாளர்கள் 26 பணியிடங்கள் காலியாக உள்ளது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பணிக்கு ஏதேனும் ஒரு பட்டபடிப்பு மற்றும் கம்ப்யூட்டர் தெரிந்திருத்தல் வேண்டும். மாதம் ஊதியம் ரூ.6,000 வழங்கப்படும்.
மையப்பொறுப்பாளர் பணிக்கு குறைந்தபட்சம் எஸ்.எஸ்.எல்.சி., தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாத ஊதியம் ரூ. 2,000 வழங்கப்படும்.
தகுதியும், விருப்பமுள்ளவர்கள் பெரம்பலூர் ஆர்.டி.ஓ., அலுவலக வளாகத்தில் உள்ள அனைவருக்கும் கல்வி இயக்கம், மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் அலுவலகத்தில் வரும் 19ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். வரும் 22ம் தேதி காலை10 மணிக்கு பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்டர்வியூ நடக்கிறது.காலிப்பணியிட விவரங்கள் அந்தந்த யூனியனில் உள்ள வட்டார வள மைய மேற்பார்வையாளர் அலுவலக தகவல் பலகையில் ஒட்டப்பட்டுள்ளது. அந்தந்த பகுதியில் உள்ளவர் மட்டு மே விண்ணப்பிக்க வேண்டும்.

வேலைக்கு காத்திருக்கும் இளநிலை ஆசிரியர்கள் !

புதுக்கோட்டை: தமிழகம் முழுவதும் இளநிலை ஆசிரியர் பயிற்சி முடித்த ஆயிரக்கணக்கானோர் அரசுத் தொடக்கப் பள்ளிகளில் வேலை எப்போது கிடைக்கும் என்று காத்திருக்கின்றனர்.தமிழகத்தில கடந்த 1995-க்கு முன்னர் தொடங்கப்பட்ட முன் முன்பருவ ஆசிரியர் பயிற்சி நிறுவனம் (pre-primary teacher training institute), முன் ஆதார ஆசிரியர் பயிற்சி நிறுவனம் (pre-basic teacher training institute) ஆகியவற்றிலும், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் மூலமும் 2 ஆண்டுகள் பயிற்சி முடித்தவர்களுக்கு "டிப்ளமோ இன் பிரீ பிரைமரி டீச்சர்' என்ற பட்டயச் சான்றிதழ் அளிக்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் இதுவரை இந்தப் பட்டயச் சான்றிதழ் பெற்றவர்கள் 18,600 பேர்.
இந்தப் பயிற்சி முடித்தவர்கள் தொடக்கப் பள்ளிகளில் 1, 2-ம் வகுப்புகளில் மட்டுமே இளநிலை ஆசிரியராக நியமனம் செய்யத் தகுதியுடையவர்கள். ஆனால், காலப்போக்கில் பள்ளிகளில் இளநிலை ஆசிரியர் பணியிடங்கள் அறவே நீக்கப்பட்டதால், இந்தப் பயிற்சி முடித்தவர்களின் நிலை கேள்விக்குறியாகிவிட்டது.தவிர, பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களை மாவட்ட வேலைவாய்ப்பகப் பதிவு மூப்பு அடிப்படையில் நியமனம் செய்வதற்கான கல்வித் தகுதி, நியமன முறை போன்ற நிலைகளில் வகுக்கப்பட்ட நெறிமுறைகளின்படி, நர்சரி பயிற்சி சான்றிதழ் பெற்றவர்களை 1, 2-ம் வகுப்புகளில் நியமனம் செய்யக் கூடாது என்று 1996-ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணையால், எதிர்காலமே இல்லை என்ற நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டனர்.
இதனிடையே, இந்தப் பயிற்சி முடித்த கீதாமணி உள்ளிட்ட 72 பேர், வேலை கோரி தமிழ்நாடு நிர்வாகத் தீர்ப்பாயத்தில் முறையிட்டனர். அதைத்தொடர்ந்து, இவர்கள் அனைவருக்கும் ஆரம்பப் பள்ளிகளில் பணியமர்த்தப்பட்டனர். இதை முன்னுதாரணமாகக் கொண்டு இளநிலை ஆசிரியர் பயிற்சி முடித்த பலரும் நீதிமன்றங்களில் வழக்குத் தொடர்ந்தனர். ஆனால், பலரது கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன.இதனிடையே, "அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் பயிற்சி முடித்து, அரசுத் தேர்வு இயக்ககம் மூலம் தேர்வு நடத்தப்பட்டு, சான்றிதழ் அளித்த பிறகு, அவர்கள் ஆசிரியர் நியமனத்துக்கு தகுதியற்றவர்கள் எனக் கூறுவதை ஏற்க இயலாது. இந்தச் செயல் பொதுவான நீதிக்கு எதிர்மாறானது. எனவே, இதுதொடர்பாக மனிதாபிமானத்துடன் அரசு ஆராய வேண்டும்' என்று தமிழ்நாடு நிர்வாகத் தீர்ப்பாயம் தீர்ப்பளித்தது.
மேலும், 1995-ல் தொடங்கப்பட்ட தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம், "இது போன்ற பயிற்சி பெற்றவர்களை 4- 6 வயதிலான சிறார்களுக்கு பயிற்றுவிக்க ஆசிரியர்களாக நியமிக்கலாம்' என்று கருத்து தெரிவித்தது. ஆனால், அதற்கான நிரந்தர அரசாணைகள் எதுவும் பிறப்பிக்கப்படாததால், பயிற்சி முடித்த ஆயிரக்கணக்கானோர் இன்னமும் வேலைக்கு காத்திருக்கின்றனர்.
இதுதொடர்பாக தொடக்கப் பள்ளி இளநிலை ஆசிரியர்கள் சங்க மாவட்டச் செயலர் எஸ். வசந்த மீனா கூறியது: கடந்த 2003-ல் இளநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களை இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்தில் 6-க்கு 4 என்ற விகிதத்தில் நியமனம் செய்யலாம் என்று அரசு தொடக்கக் கல்வி இயக்ககம் அரசாணை வெளியிட்டது. இதையடுத்து 2006-ல் தமிழகம் முழுவதும் சுமார் 500 பேர் வேலை பெற்றனர். அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள்.ஆனால், அந்த அரசாணை புதுப்பிக்கப்படாமல் போனதால், ஆயிரக்கணக்கானோர் வேலையின்றி தவிக்கின்றனர். தமிழக அரசு இந்த பிரச்னையில் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே விரைவில் நிரப்பப்படவுள்ள ஆசிரியர் பணியிடங்களில் இளநிலை பயிற்சி முடித்த சுமார் 6 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் என்றார்.
இதுதொடர்பாக புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் எஸ்.பி. முத்துக்குமரன் கூறியது: அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் இளநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் சுமார் 18 ஆயிரம் பேருக்கு இதுவரை வேலை கிடைக்கவில்லை என்பது வருத்தத்துக்குரியது. சமச்சீர்க் கல்வித் திட்டத்தில் கிராமங்கள்தோறும் மழலையர், தொடக்கப் பள்ளிகள் தொடங்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழக அரசு அதை விரைவாகச் செயல்படுத்தினால், இவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்வேன் என்றார் அவர்.

Friday, December 16, 2011

தகுதி தேர்வுக்கு பாடத்திட்டம் தயாரிக்கும் பணி தீவிரம்


சென்னை, டிச.13-

ஆசிரியர் தகுதி தேர்வு


தற்போது கேந்திரிய வித்யாலயா, சி.பி.எஸ்.இ. உள்ளிட்ட மத்திய அரசு பள்ளிக்கூடங்களில் ஆசிரியர் பணிக்கு மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு என்ற தேர்வு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே மத்திய அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேரலாம். இந்த தகுதி தேர்வை மத்திய செகண்டரி கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) நடத்துகிறது.
தமிழ்நாட்டில் இலவச கட்டாய கல்வி சட்டம் அமலுக்கு வந்துள்ள நிலையில், மத்திய அரசு பள்ளிகளைப் போன்று மாநில அரசு பள்ளிக்கூடங்களிலும் ஆசிரியர் பணியில் சேர தகுதி தேர்வு கட்டாயமாக்கப்பட்டு விட்டது. அதன்படி, இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
என்.சி.டி.இ. கல்வித்தரம்
மத்திய அரசு பள்ளிகளைப் பொறுத்தவரையில், இடைநிலை ஆசிரியர் பணிக்கும், பட்டதாரி ஆசிரியர் பதவிக்கும் தனித்தனியே தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. தகுதி தேர்வுக்கென்று தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்.சி.டி.இ.) குறிப்பிட்ட தரத்தில் பாடத்திட்டத்தை வடிவமைத்து இருக்கிறது. அதையொட்டித்தான் இந்த தகுதி தேர்வுகளில் வினாக்கள் கேட்கப்படுகின்றன.


பட்டதாரி ஆசிரியர் பணிக்கு அறிவியல் பிரிவு, சமூக அறிவியல் பிரிவு என தனித்தனியே பாடத்திட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டு உள்ளன. மொழிப் பாடத்திற்கு தனி பாடத்திட்டம் இல்லை. தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தும் பொறுப்பு ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது. நடப்பு கல்வி ஆண்டில் (2011-2012) அரசு பள்ளிகளில் ஆயிரக்கணக்கிலான இடைநிலை, பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது.
பாடத்திட்டம் தயாரிப்பு
இந்த நிலையில், என்.சி.டி.இ. வரையறை செய்துள்ள கல்வித்தரத்தின்படி, தகுதி தேர்வுக்கான பாடத்திட்டத்தை தயாரிக்கும் பணியில் ஆசிரியர் தேர்வு வாரியம் மும்முரமாக ஈடுபட்டு உள்ளது. மத்திய ஆசிரியர் தகுதி தேர்வைப் போல் அல்லாமல் அறிவியல், சமூக அறிவியல் பாடப்பிரிவுகளுடன் சேர்த்து தமிழ், ஆங்கிலம் மொழி பாட ஆசிரியர்களுக்காகவும் கூடுதலாக ஒரு தகுதி தேர்வு நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
தற்போது நடத்தப்பட இருப்பது முதல் தகுதி தேர்வு என்பதால், பாடங்களில் சராசரி அறிவு பெற்றவர்கள் தேர்ச்சி பெறும் வகையிலேயே பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு கேள்விகள் கேட்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, தகுதி தேர்வு மற்றும் போட்டித்தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டதுதான் தாமதம். இரண்டு தேர்வுகளுக்காகவும் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பல தனியார் பயிற்சி நிறுவனங்கள் பயிற்சியை தொடங்கிவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.


ஆசிரியர் பணி நியமன தேர்வில் மொழிப் பாடத்தில் கேள்வி

சென்னை, டிச.16:
ஆசிரியர் பணி நியமனத்துக்கான தகுதித் தேர்வில், தமிழ், ஆங்கில பாட ஆசிரியர்கள் சமூக அறிவியல் எழுத வேண்டியதில்லை. அதற்கு பதிலாக அந்தந்த பாடங்களில் இருந்தே கேள்விகள் கேட்க அரசு முடிவு செய்துள்ளது.
ஆசிரியர் பணி நியமனம் தொடர்பாக அரசு பிறப்பித்து வருகின்ற ஆணைகள் மூலம் பட்டதாரிகள் இடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வு உண்டா, இல்லையா என்பது முதல் குழப்பம். டிஇடி தேர்வா அல்லது டிஆர்பி தேர்வா, இரண்டு தேர்வு எழுதிய பிறகும் சான்று சரிபார்ப்பு உண்டா என்பது உள்ளிட்ட பல்வேறு குழப்பங்களில் இடைநிலை, பட்டதாரிகள் உள்ளனர்.
எந்த தேர்வை நடத்த வேண்டும் என்பது குறித்து, ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு இதுவரை உத்தரவு வரவில்லை. தேர்வு என்றால் எந்த தேர்வு முதலில் நடக்கும் என்பதும் தெளிவாகவில்லை. இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் சமீபத்தில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில், ஏற்கெ னவே, அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ள அம்சங் களை கடைபிடிப்பது என்று முடிவு எடுக்கப்பட்டது.
ஆனால், தகுதித் தேர்வு குறித்து என்சிடிஇ தெரிவித்துள்ள அம்சங்களில் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளனர். அதன்படி, தமிழ், ஆங்கிலம் ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வில் கணக்கு, அறிவியல் அல்லது சமூக கல்வி ஆகிய ஏதாவது ஒன்றின் கீழ் 60 மதிப்பெண்களுக்கு கேள்வி கேட்க வேண்டும் என்று இருப்பதை மாற்றி, தமிழ் மற்றும் ஆங்கில பாடத்தில் இருந்தே 60 மதிப்பெண்களுக்கான கேள்விகள் கேட்க உள்ளனர். தகுதித் தேர்வு குறித்து மார்ச்சில் அறிவிப்பு வெளியிட்டு, மே மாதம் தேர்வு நடத்தலாம் என்றும் உத்தேசித்துள்ளனர். ஆனால், குறைந்த கால அவகாசத்தில் தகுதித் தேர்வை நடத்த முடியாது என்ற ஒரு கருத்தும் உள்ளது. அதனால், நேரடியாக ஆசிரியர் தேர்வு வாரிய எழுத்துத் தேர்வை இந்த ஆண்டு நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.
இதன்படி, ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்த உள்ள தேர்வுக்கான வினாத்தாளில் 50 சதவீதம் கடினமான கேள்விகளை கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனால் கிராமப்புற மாணவர்கள் இந்த எழுத்துத் தேர்வில், பணி நியமனத்துக்கு தேவையான அதிக மதிப்பெண்களை பெறுவது மிகவும் கடினம். அதனால் கிராமப் பகுதியை சேர்ந்த மாணவர்கள் குறைந்த சதவீதமே இனிமேல் பணி நியமனம் பெறுவார்கள்.
இந்நிலையில், கடந்த முறை தேர்வு செய்யப்பட்ட பட்டதாரிகளில் விடுபட்டவர்கள் 518 பேருக்கும், முதுநிலை பட்டதாரி ஆசிரியருக்கான கடந்த ஆண்டு ஏற்பட்ட காலி இடங்களில் 1,260 பேரும், தற்போது பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.

கம்ப்யூட்டர் ஆர்வத்தை ஏற்படுத்த பள்ளியில் "சில்ட்ரன்ஸ் கார்டன்'

சிவகங்கை : அரசு பள்ளி மாணவர்களிடம் "கம்ப்யூட்டர் டிசைனிங்' ஆர்வத்தை தூண்டும் வகையில், அரசு நடுநிலைப்பள்ளிகளில் "சில்டரன்ஸ் கார்டன்' அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய பள்ளிகளுக்கு இணையாக, அரசு பள்ளிகளில் "கம்ப்யூட்டர் லேப்' அமைத்து, மாணவர்களின் தனித்திறனை கம்ப்யூட்டரில் உருவாக்க வேண்டுமென, தமிழக முதல்வர் ஜெ., முதல் சட்டசபை கூட்டத்தில் அறிவித்தார்.
அதன்படி, மாணவர்கள் தயாரித்த வரைபடங்கள், "டிசைனிங்கை, கம்ப்யூட்டர் லேபில் பொருத்தி "எல்சிடி' மானிட்டர் மூலம் "ஸ்கிரீனில்' பிற மாணவர்களுக்கு ஒளிபரப்ப வேண்டும். இதன் மூலம், மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் கல்வியுடன் கூடிய தனித்திறன் உருவாகும். இப்பயிற்சியை மாணவர்களிடம் ஏற்படுத்த, நடுநிலைப் பள்ளிகளில் கம்ப்யூட்டர், "எல்சிடி'., மானிட்டர், "புரஜெக்டர்' வசதிகளை உருவாக்க, கல்வித்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. இத்திட்டத்தை ஒவ்வொரு மாவட்ட கலெக்டரும், அனைவருக்கும் கல்வி திட்டம் மூலம் செயல்படுத்த, உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று பள்ளிகளில் "லைப்ரரி கார்னர்' என்ற பெயரில், பள்ளி ஓய்வு அறை மேஜைகளில் பலதரப்பட்ட பாடப்புத்தகங்கள் மற்றும் நீதிநெறி, பொது அறிவு புத்தகங்களை வைக்க வேண்டும். அவர்கள் வகுப்பு ஓய்வு நேரத்தில் விரும்பிய புத்தகங்களை படிப்பர். மேலும், அறிவியல் கண்டுபிடிப்பிற்கான கருவிகளை "சயின்ஸ் கார்னர்' லேபில் வைத்து, புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான ஆயத்தப்

பணிகளில் ஒவ்வொரு அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களும் ஈடுபட்டுள்ளனர்.

இதையடுத்து, பள்ளிகளில், கம்ப்யூட்டர்  பட்டதாரிகளுக்கான   பணியிடங்கள் ஏற்படுத்தப்படுமா? என்ற எதிப்பார்ப்பு  எழுந்துள்ளது.


கடைசி நாளில் வந்தது கரிசனம்?

திருவள்ளூர்   மாவட்டத்தில் கம்ப்யூட்டர் பட்டதாரிகளுக்கு, பகுதி நேர ஆசிரியர்கள் பணிக்கு விண்ணப்பம் வழங்க முதலில் மறுக்க பட்டது. பின்னர்,  கடைசி நாளில் வழங்கப்பட்டது. இதனால், பலரும் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டது. 
G.O.177- இல்  உள்ளதை அதிகாரிகள் முழுமையாக, தெளிவாக படிக்காததே இதற்கு காரணம். விண்ணப்ப தாரர்கள் சுட்டிக்காட்டிய பிறகே அதிகாரிகள்,  விண்ணப்பம் வழங்க முன்வந்தனர்.


வேலைவாய்ப்பு அலுவலக ஆவணங்கள் மாயம்?

சென்னை:தமிழ்நாடு அரசு தேர்வாணய தேர்வில் ஊழல் நடந்திருப்பதை ‌கருத்தில் கொண்டு புலானாய்வுத்துறை ‌அதிகாரி்கள் வீட்டில் அதிரடி சோதனை நடத்தியது. இருந்த‌போதிலும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெயர் ஆவணங்கள் 2010 செப்டம்பரில் இணையதளத்தில் மாற்றும் போது மாயமாகின. அந்த ஆவணங்களில் பல்லாயிரக்கணக்கான பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள் மற்றும் தொழில் வல்லுனர்களின் பதிவுகள் அடங்கும். சமீபத்தில் நடந்த கால்நடை ‌டாக்டர் ‌தேர்வு அறிவிப்பின்‌போது 853 கால்நடை டாக்டர் பணியிடங்களுக்கு 4000 பேருக்கு அழைப்பு கடிதம் அனுப்பியது தேர்வாணையம்.

இதில் மாநிலத்தில் 1600 ‌டாக்டர்கள் மட்டுமே பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் பலருக்கு அழைப்பு கடிதம் அவர்களது பெயரில் கிடைக்கவில்லை என தெரிவித்ததாக ஒரு மூத்த அதிகாரி தெரிவித்தார். இது போல சென்னை பட்டாபிராமில் வசிக்கும் அருண்குமார் தான் கடந்த ‌சென்னை கால்நடை கல்லூரியில் பட்டம் பெற்றேன். என்னுடன் சக மாணவர்களும் சேர்ந்து ஆன்லைன் பதிவு டிசம்பர் 2010ல் செய்தோம். இந்நிலையில்தான் தங்களது பெயர் பதிவில் இல்லை ‌என தெரியவந்தது ‌என்றார். இதுகுறித்து வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் செயலாளர் மோகன் பியாரே கூறுகையில் இணையதளத்தில் பெயர் பதிவு இன்னும் முழுமையடையவில்லை எனவும் விரைவில் சரிசெய்துவிடுவோம் என அவர் தெரிவித்துள்ளார்.

Wednesday, December 14, 2011

பகுதி நேர ஆசிரியர் வேலைக்கு கடும் போட்டி

பகுதி நேர ஆசிரியர் வேலைக்கு, விண்ணப்பம் செய்வதற்கான காலக்கெடு, நாளையுடன் முடிகிறது. சென்னை, மதுரை உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில், ஒதுக்கப்பட்ட பணியிடங்களை விட, இரண்டு மடங்கிற்கும் அதிகமாக விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான அரசுப் பள்ளிகளில், 5,253 பகுதி நேர ஓவிய ஆசிரியர்கள், 5,392 பகுதி நேர உடற் கல்வி ஆசிரியர்கள் மற்றும் 5,904 தையல் ஆசிரியர்கள் என, 16 ஆயிரத்து 549 ஆசிரியர்களை நியமிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

காரணம் என்ன?
இந்த பணிக்கு விண்ணப்பிக்க எக்கச்சக்க ஆர்வம் உள்ளது. உதாரணமாக, மதுரை மாவட்டத்திற்கு ஒதுக்கப் பட்டுள்ள 507 பணியிடங்களுக்கு, 3,500 விண்ணப்பங்கள் குவிந்து உள்ளன. பல இடங்களில் பகுதி நேர வேலை செய்து கணிசமாக சம்பாதிக்கலாம் என்று, விண்ணப்பதாரர்கள் கருதுவதே இதற்கு காரணம் என, தெரிவிக்கப் படுகிறது. ஒரு பள்ளியில், வாரத்திற்கு மூன்று அரை நாள் வேலை; மாதம் 5,000 ரூபாய் தான் சம்பளம் என்றாலும், நான்கு பள்ளிகளில் வேலை பார்த்தால், 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெற, வாய்ப்புகள் இருக்கின்றன. அடுத்த சட்டசபை தேர்தலுக்கு முன், தற்காலிக ஆசிரியர்கள் அனைவரும், பணி நிரந்தரம் செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. இதன் காரணமாகவே, அனைவரும் போட்டி போட்டு விண்ணப்பித்து வருகின்றனர்.

நாளை கடைசி நாள்
இந்த பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள். வரும் 26ம் தேதியில் இருந்து, நேர்முகத் தேர்வு நடைபெறும். தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு, இந்த வாரத்தில் இருந்தே நேர்முகத் தேர்வில் பங்கேற்பதற்கான அழைப்புக் கடிதங்கள் அனுப்பப்படும்.

Monday, December 12, 2011

தகுதித் தேர்வு கட்டாயமாக்குவதா?


வே.புகழேந்தி 
 
பள்ளிகளில்ஆசிரியர் பணியா? தகுதித் தேர்வு எழுத வேண்டும் என்று அரசு கடந்த வாரம் அறிவித்தது. இதை கேட்ட நாமக்கல் மாவட்டம் பரமத்தியை சேர்ந்த பட்டதாரி பத்மநாபன் அதிர்ச்சியில் இறந்தார்.
மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தை பின்பற்றி தமிழக அரசும் தகுதித் தேர்வு அறிவித்துள்ளது. இதை பட்டதாரிகள் எதிர்க்கின்றனர். அரசு கவலைப்படவில்லை.
�பள்ளிகளில் தரமான கல்வி வழங்க வேண்டும். அதனால் தகுதித் தேர்வு தேவை� என்கிறது அரசு.
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோரில் பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் வேண்டும் என்கிறார்கள் பட்டதாரிகள். இதுதான் இப்போதைய சர்ச்சை. அதிமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் திமுக ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட திட்டங்களை முடக்குவது வழக்கம். இந்த முறையும் அது நடக்கிறது. பள்ளிக் கல்வி துறையில் சமச்சீர் கல்வி தொடங்கி ஆசிரியர் பணி நியமனத்திலும் தொடர்கிறது.
அதாவது 1.4.2010க்கு பிறகு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர விரும்புவோர் தகுதித் தேர்வு (டிஇடி), ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் போட்டி எழுத்து தேர்வு (டிசிஇ) எழுத வேண்டும். மதிப்பெண் அடிப்படையில் பணி வழங்கப்படும். இந்த �இரட்டை தேர்வு� அறிவிப்பை கேட்டு பட்டதாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பொறியியல், மருத்துவ படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு வேண்டாம் என்கிறார்கள். எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக் கழகம் தேர்வு முறையில் சில திருத்தங்களை கொண்டு வந்தது. மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததும் அதை அரசு கைவிட்டது. ஆனால், வேலை இல்லா பட்டதாரிகளால் அரசை எதிர்த்து அப்படி போராட முடியாது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவுடன் காலாகாலத்தில் தேர்வு நடத்தி இருந்தால், தேர்வு எழுதி பணிக்கு வந்திருக்க முடியும். அரசுகள் பணி நியமனத்தில் செய்த குளறுபடி களால் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். காலம் கடந்த பிறகு இப்போது அவர்களுக்கு தேர்வு என்றால் வேலை வாய்ப்பு பதிவு அலுவலக பதிவு எதற்கு என்ற கேள்வி எழுகிறது.
ஏற்கனவே பி.எட் பட்டம், டிடிஇ பெற்றவருக்கு மீண்டும் தகுதித் தேர்வு என்றால், ஏற்கனவே படித்த பயிற்சி பள்ளிகள், பல்கலைக் கழகங்கள் வழங்கிய சான்றுகள் மீது நம்பிக்கை இல்லையா? அவர்கள் தகுதி இல்லாதவர்கள் என்றால் ஆசிரியர் பயிற்சி பள்ளிகள், பல்கலைக் கழகங்களின் பாடத்திட்டம் சரியில்லை என்று பொருளா? இரட்டை தேர்வு முறையால் ஊழல்தான் பெருகும் என்று ஆசிரியர் சங்கங்கள் தெரிவிக்கின்றன.
தகுதித் தேர்வில் குறைந்த பட்சம் 60 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறுவது எளிது. ஆனால் அதற்கு பிறகு ஆசிரியர் தேர்வு வாரிய போட்டித் தேர்வு எழுத வேண்டும். இங்குதான் பிரச்னை தொடங்குகிறது. அதில் மதிப்பெண்களை கூட்டியோ குறைத்தோ போடுவதற்கு வாய்ப்புள்ளதாக பட்டதாரிகள் சந்தேகிக்கின்றனர். வசதிபடைத்தவர்கள், பண பலம் கொண்டவர்களுக்கு இது சாதகமாக இருக்கும் என்கின்றனர்.
பதிவு மூப்பு அடிப்படையில் பணி வழங்கிய பிறகு 5 ஆண்டு இடைவெளிக்குள் தகுதித் தேர்வு எழுத அவகாசம் கொடுக்கலாம். ஆனால் இது போன்ற வாய்ப்பு வழங்க அரசு தயாராக இல்லை. இதனால் இந்த முறை பெரிய அளவில் ஊழல் நடக்க வாய்ப்புள்ளது என்று பட்டதாரிகள் வெளிப்படையாக பேசுகிறார்கள்.
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி (என்சிஇஆர்டி) விதிப்படி ஆசிரியர் பணிக்கான தகுதி என்னவென்றால், ஒரு இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அதற்கு பிறகு ஒரு பி.எட் பட்டம் பெற வேண்டும் என்பதே சட்ட விதி. ஆனால் தமிழக அரசு அதை கருத்தில் கொள்ளவில்லை. பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர்களை நியமனம் செய்தால் தரமான கல்வியை வழங்க முடியாது என்று அரசு தரப்பில் கூறப்படுகிறது.
தரமற்ற கல்விக்கு காரணம் பல பள்ளிகளில் ஆசிரியர் இல்லாமல் போனது, பற்றாக்குறை ஆகியவைதான் கார ணம். என்சிஇஆர்டி கடந்த 10 ஆண்டுக்கு மேலாக எடுத்த சர்வேயில் பல பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இல்லை என்பதை சுட்டிக்காட்டி வந்துள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு, அசர்(2010 ஆண்டு கல்வி நிலை அறிக்கை) சர்வேயில் தமிழகத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறுகிறது. ஆனால் கடந்த அதிமுக ஆட்சியில் தேர்வு மூலம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்ட பிறகு இந்த அளவுக்கு தேர்ச்சி வீதம் இருந்ததா என்றால் அது சந்தேகமே என்று பட்டதாரி சங்கங்கள் தெரிவிக்கின்றன.
இந்த சூழலில் இரட்டை தேர்வை நடத்துவதில் அரசு பிடிவாதமாக உள்ளதால் பட்டதாரிகள் வெறுப்பின் உச்சிக்கே சென்றுவிட்டனர். அரசு தனது பிடிவாதத்தை தளர்த்தவில்லை என்றால் பல்வேறு அமைப்புகளின் போராட்டம் தீவிரமாகும். ஏற்கனவே தமிழகத்தில் பல போராட்டங்கள் நடந்து கொண்டு இருக்கும் இந்த தருணத்தில் பட்டதாரிகளும் போராட்டத்தில் குதித்தால் பாதிக்கப் போவது பொது அமைதிதான்.
வெறுப்பின் உச்சியில் பட்டதாரிகள்?
பதிவு செய்து காத்திருப்போர் சுமார் 25,000. கடந்த ஆண்டில் சான்று சரிபார்ப்பு முடித்தவர்கள் 12,000 பேர். பதிவு மூப்பு பெற்ற பட்டதாரிகள் தனியார் பள்ளிகளில் பணியாற்றிய அனுபவம், கற்றுக் கொடுக்கும் முறைகள், குழந்தைகளின் மனநிலையும் நன்கு அறிந்தவர்கள்?
புதிதாக படித்துவிட்டு வருபவர்கள் மனப்பாடம் செய்து கேள்விகளுக்கு பதில் எழுதுவார்கள். அனுபவம் இல்லாதவர்கள். 2007 முதல் பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் பெற்ற ஆசிரியர்கள் அனுபவ ரீதியாக உழைத்ததால், கடந்த ஆண்டு வரை பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி வீதம் தலா 5 சதவீதம் அதிகரித்துள்ளது. டிஆர்பி தேர்வு எழுதி பணிக்கு வந்தவர்கள் இந்த சாதனையை செய்யவில்லை?
மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தில், விருப்பம் உள்ள மாநிலங்கள் தகுதித் தேர்வை நடத்தலாம் என்று தெரிவித்துள்ளது. மற்ற மாநிலங்களில் இந்த தகுதித் தேர்வு முறை இல்லை?
எம்பிபிஎஸ் பட்டம் படித்து முடித்தவர்கள் அதற்கு பிறகு ஒரு தேர்வு எழுதினால்தான் டாக்டர் தொழில் செய்ய முடியும் என்று அரசு ஒரு முடிவு எடுத்தபோது அதை எதிர்த்து அனைத்து டாக்டர்களும் போராட்டம் நடத்தினர். உடனே அரசு அந்த முடிவை கைவிட்டது. வழக்கறிஞர்களும் தகுதித் தேர்வு எழுதி பின்னர் பார் கவுன்சிலில் பதிவு செய்ய வேண்டும் என்று சட்டத்துறை தெரிவித்தபோது அதை வழக்கறிஞர்கள் எதிர்த்ததும் கைவிட்டனர். ஆசிரியர்கள் மீது மட்டும் தகுதித் தேர்வு திணிக்கப்படுகிறது?
இந்த அரசு பொறுப்பேற்றதும் பதிவு மூப்பு அடிப்படையில்தான் பணி நியமனம் வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை செயலாளர் சபீதா தெரிவித்தார். நவம்பர் 2ம் தேதி 169, 170 அரசாணைகளை வெளியிட்டார். உடனடியாக 4ம் தேதி அவர் மாற்றம் செய்யப்பட்டார். 5ம் தேதி புதிய செயலாளராக ஸ்ரீதர் பொறுப்பேற்றார். அவர் வந்ததும், 6.12.2007ல் வெளியிடப்பட்ட பதிவு மூப்பு அடிப்படையில் பணி என்ற அரசாணை யை ரத்து செய்து முதுநிலை பட்டதாரிகளுக்கும் எழுத்து தேர்வு என்று (அரசாணை எண் 175) அறிவித்தார். 
 
இப்படி மாற்றி மாற்றி அரசாணைகள் வெளியிட்டதால் குழப்பம் ஏற்பட்டது.
ஸ்ரீதர் வெளியிட்ட அரசாணை 181 & பக்கம் 2ல், 7வது ஷரத்து பிரிவு 2ல், நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேனிலைப் பள்ளி ஆகியவற்றில் பட்டதாரிகள் நியமிக்கும் போது என்சிஇஆர்டி விதிகளின்படி தகுதித் தேர்வு மூலம் தெரிவு செய்யப்படுவார்கள். அதைத் தொடர்ந்து சான்று சரிபார்ப்பு நடக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், தகுதித் தேர்வுடன் ஆசிரியர் தேர்வு வாரியமும் போட்டித் தேர்வு நடத்தும் என்று அரசு முடிவு செய்துள்ளது. இது பட்டதாரிகளை ஏமாற்றுவதாக அமைந்துள்ளது. பி.எட் பட்டத்தையும் பல்கலை. பட்டங்களையும், பி.எட் கல்லூரிகளையும் அவமதிப்பதாக உள்ளது. எனவே பட்டதாரிகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தாமல், தகுதித்தேர்வு, போட்டித் தேர்வு நடத்துவதை இந்த அரசு கைவிட வேண்டும் என கோருகின்றனர்.
தமிழ்நாடு பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ரத்தினகுமார்:

இசை ஆசிரியர்களுக்கு திறன் வளர் பயிற்சி

திருநெல்வேலி : தமிழகத்தில் 15 மையங்களில் இசை ஆசிரியர்களுக்கு திறன் வளர் பயிற்சி வரும் 13ம் தேதி முதல் 17ம் தேதி வரை நடக்கிறது.தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு மற்றும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் இசை ஆசிரியர்களுக்கு அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின் சார்பில் வரும் 13ம் தேதி முதல் 17ம் தேதி வரை 5 நாட்கள் திறன் வளர் உண்டு, உறைவிட பயிற்சி நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இதில் இசையை ஆர்வத்துடன் மாணவர்கள் கற்றிட எளிய வழிமுறைகள், கற்பித்தல் முறைகள், தேவாரம் உள்ளிட்ட திருமறைகளின் இசை நயம், திவ்ய பிரபந்த பாசுரங்களின் இசை நயம், கோலாட்டம், கும்மி, குரல் வள பயிற்சி, வாத்திய இசை மூலம் திரைப்பட பாடல்களில் உள்ள ராகங்கள் கண்டறிய உதவுதல், தவில் பாடல்கள், நாட்டுப்புற பாடல்கள், வில்லுப் பாட்டு, தப்பாட்டம், கரகம், ஒயிலாட்டம் உட்பட பல்வேறு கலைகள் குறிச்சி பயிற்சி அளிக்கப்படுகிறது.இசை பாடம் கற்பித்தலை மெருகுபடுத்துதல், இந்திய இசையின் அடிப்படையான இலக்குகளும் தலைப்பில் நாதஸ்வரம், புல்லாங்குழல், தாரை, தப்பட்டை, பரை, கொம்பு, ஜண்டா, குடுகுடுப்பை, உடுக்கை, உருமி, நையாண்டி மேளம், சேர்ந்திசை, தாலாட்டு, ஒப்பாரி மற்றும் விழாக்களில் பாடப்படும் நாட்டுப்புற பாடல்கள், கிராமிய பாடல்கள் தமிழ் இசையை வளர்த்த ஆன்றோர் வரலாறும், பாடல்களும், பாடம் சார்ந்த பாடல்களை இசை அமைத்து பாடுதல், தோல் வாத்தியங்களின் தோற்றமும், வளர்ச்சியும், மிருதங்கங்கள் ஆகியவை குறித்தும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
தமிழகத்தில் 15 மையங்களில் இப்பயிற்சி வரும் 13ம் தேதி முதல் 17ம் தேதி வரை நடத்தப்படுகிறது.நெல்லை:>நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த இசை ஆசிரியர்களுக்கு திறன் வளர் பயிற்சி பாளை மேலத்திடியூர் பி.எஸ்.என் இன்ஜினியரிங் கல்லூரியில் 5 நாட்கள் நடக்கிறது. இதில் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த இசை ஆசிரியர்கள் பங்கேற்கின்றனர்.
ஏற்பாடுகளை அனைவருக்கும் இடை நிலைக் கல்வி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் முதன்மை கல்வி அலுவலர் பகவதி ஆலோசனையின் பேரில் மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் நந்தகுமார், பயிற்சி ஒருங்கிணைப்பாளர் ஆவுடையப்ப குருக்கள், தென்காசி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வநாகம், சேரன்மகாதேவி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகராஜன், பயிற்சி கருத்தாளர்கள், திட்டப் பணியாளர்கள் செய்து வருகின்றனர்

Saturday, December 10, 2011

ஆசிரியர் பணி விண்ணப்பம் வரவேற்பு: சி.இ.ஓ., தகவல்

தஞ்சாவூர்: அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை 100 மாணவர்களுக்கு மேல் பயிலும் பள்ளிகளில் பகுதிநேர உடற்கல்வி ஆசிரியர்கள் 158 பணியிடங்கள், ஓவிய ஆசிரியர்கள் 155 பணியிடங்கள் மற்றும் தொழிற்கல்வி ஆசிரியர்கள் இசை மற்றும் தையல் ஆசிரியர்கள் 209 பணியிடங்கள் முற்றிலும் தற்காலிக அடிப்படையில் மாதம் 5,000 ரூபாய் மட்டும் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்ய அரசு உத்தரவுப்படி கடந்த இரண்டாம் தேதி தஞ்சாவூர் முதன்மை கல்வி அலுவலரால் வெளியிடப்பட்டது. தொடர்ந்து அனைவருக்கும் கல்வி திட்ட மாநில திட்ட இயக்குனரால் நேற்று ஏழாம் தேதி வழங்கப்பட்ட அறிவுரையுடன் படி தொழிற்கல்விபணியிடங்கள் பகுதி நேர ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு தோட்டகலை, வாழ்வியல் மற்றும் தகவல் தொடர்புதிறன். கட்டிடக்கலை, கணினி பொறியியல் பயன்பாடு, இசை, தையல்,தொழிற்கல்வி பயிற்சி பெற்றவர்கள் கூடுதலாக விண்ணப்பிக்கலாம்.. ஏற்கனவே, அறிவிக்கப்பட்டப்படி விண்ணப்பம் அனுப்பாத உடற்கல்வி மற்றும் ஓவிய ஆசிரியர்களும் தொடர்ந்து விண்ணப்பிக்கலாம். இப்பதவிக்கான நியமனம் தொடர்பான கல்வித்தகுதிகள் மற்றும் விண்ணப்ப படிவம் மாவட்டத்திலுள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்திலும், மாவட்டக் கல்வி அலுவலங்கள் தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, கும்பகோணம், மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம் தஞ்சாவூர், மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளர் அலுவலகம் (அனைவருக்கும் கல்வி இயக்ககம்), மேம்பாலம், தஞ்சாவூர், அனைத்து ஒன்றியங்களிலுள்ள அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வள மையங்கள் மற்றும் அனைத்து உதவித் தொடக்கக் கல்வி அலுவலங்களில் தகவல்களை நேரடியாக அறிந்து கொள்ளலாம். மேலும் விண்ணப்பங்கள் (www.thanjavur.nic.in)என்ற வலைத்தளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். "ஏ'தாளில் கம்ப்யூட்டர் அச்சு மூலம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் டிசம்பர் 15ம் தேதி மாலை ஐந்து மணிக்குள் வந்து சேர வேண்டும். விண்ணப்பங்களை முதன்மை கல்வி அலுவலர், முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம், பனகல் கட்டிடம், தஞ்சாவூர், 613-001. என்ற முகவரிக்கும் அனுப்ப வேண்டும். விண்ணப்பத்துடன் வயது (T.C)) சாதி, வேலை வாய்ப்பக பதிவு அட்டை, பணி அனுபவச்சான்று மற்றும் கல்வித் தகுதிக்கான சான்றொப்பமிட்ட நகல்களை விண்ணப்பத்துடன் கண்டிப்பாக இணைத்து அனுப்ப வேண்டும். இவ்வாறு தஞ்சை முதன்மை கல்வி அலுவலர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் நியமனம்: ஜி.ராமகிருஷ்ணன்

சென்னை, டிச.9: ஆசிரியர் பணியிடங்கள் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்பப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக டிசம்பர் 7-ம் தேதி முதல்வர் வெளியிட்ட உத்தரவில் 11,593 கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளார். சுமார் 12 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கும் அதேவேளையில் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான பணியிடங்கள் இதுவரை நடைபெற்று வந்த முறைப்படி வேலை வாய்ப்பு அலுவலகப் பதிவு மூப்பு அடிப்படையில்தான் நிரப்பப்பட வேண்டும் என்று தமிழக அரசைக் கோருகிறது. மேலும் ஆசிரியர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்சத்தைப் போக்கும் வண்ணம் அரசு வெளிப்படையான நியமனக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

பள்ளி தரம் உயர்வில் வட மாவட்டங்களுக்கு முன்னுரிமை

அரசு நடுநிலைபள்ளிகளை, உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தியதில்,கல்வியில் பின் தங்கிய வட மாவட் டங் களுக்கு முக்கியத்துவம்அளிக்கப்பட்டு,அங்குஅதிகமானபள்ளிகள் தர உயர்த்தப்பட்டுள்ளனநடப்பு கல்வியாண்டில், 710 அரசு நடுநிலைப் பள்ளிகளை, உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தி, தமிழக அரசு, அரசாணை வெளியிட்டது. தரம் உயர்த்தப்பட்டுள்ள பள்ளிகளின் பட்டியலும் வெளியிடப்பட்டன. இதில், 710 பள்ளிகள், 32 மாவட்டங்களுக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளன.

எனினும், கல்வியில் பின் தங்கியுள்ள திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், தர்மபுரி உள்ளிட்ட வட மாவட்டங்களில், அதிகமான பள்ளிகளை தரம் உயர்த்தி, அரசு அறிவித்துள்ளது. தென் மாவட் டங்களில், குறைவான பள்ளிகளே தரம் உயர்த்தப் பட்டுள்ளன.வேலூர் மாவட்டத்தில் 33, திருவண்ணாமலை 47, விழுப்புரம் 63, கடலூர் 44 மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 47 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

திருவள்ளூர் மாவட்டத்தில், 36 பள்ளிகளும், தர்மபுரியில், 42 பள்ளிகளும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.மிகக் குறைவாக, சென்னை மாவட்டத்தில் இரண்டு பள்ளிகள், கன்னியாகுமரி 5, நீலகிரி 7, கோவை மாவட்டத்தில் 11 பள்ளிகள் தரம் உயர்த்தப் பட்டுள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில், 9 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

தேர்வு மூலம் தான் ஆசிரியர்கள் தேர்வு

சென்னை:தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பட்டதாரி ஆசிரியர்கள், போட்டித் தேர்வு மூலம் தான் தேர்வு செய்யப்படுவர் என, பள்ளிக் கல்வித்துறை செயலர் ஸ்ரீதர் தெரிவித்தார்.நடப்பு கல்வியாண்டில், 710 நடுநிலைப் பள்ளிகளை, உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்துவதன் மூலம், 3,550 பட்டதாரி ஆசிரியர்கள்; தொடக்க கல்வித் துறையில், 1,581 பேர்; உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், 1,282 கூடுதல் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் உட்பட, 6,608 பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர் என, தமிழக அரசு அறிவித்திருந்தது.

இதற்கான அரசாணைகளும் வெளியிடப்பட்டுள்ளன. அதில், ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படும் முறை, குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்தது. இது குறித்து, பள்ளிக் கல்வித்துறை செயலர் ஸ்ரீதரிடம் நேற்று கேட்டபோது, அவர் கூறியதாவது:ஏற்கனவே வெளியிட்ட அரசாணையின்படி, இனிமேல் நியமிக்கப்படும் ஆசிரியர்கள், போட்டித்தேர்வு மூலமே தேர்வு செய்யப்படுவர். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பட்டதாரி ஆசிரியர்களும், தேர்வு மூலமே தேர்வு செய்யப்படுவர்.ஆசிரியர் பணிக்கு வருபவர்கள், முதலில் ஆசிரியர் தகுதித்தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும்.

ஆனால், தற்போது அதற்கு கால அவகாசம் இல்லாததால், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும், நேரடியாக போட்டித்தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு, பணி நியமனம் செய்யப்படுவர். அதன்பின், அவர்கள் ஆசிரியர் தகுதித்தேர்வை எழுதுவர்.இவ்வாறு ஸ்ரீதர் தெரிவித்தார்.

அரசாணை வெளியீடு:இதற்கிடையே, 65 தொடக்கப் பள்ளிகளை, நடப்பு கல்வியாண்டில் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தியும், இதற்கு, 195 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை அனுமதித்தும், தமிழக அரசு நேற்று அரசாணை வெளியிட்டுள்ளது.


Friday, December 9, 2011

பி.எட்., பட்டத்தை திரும்ப ஒப்படைப்பது

பெரம்பலூர்: பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டுமென பட்டதாரி ஆசிரியர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பெரம்பலூரில் தமிழ்நாடு பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் சங்கத்தின் மாவட்டத்தலைவர் அழகமுத்து தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் தகுதித்தேர்வு மற்றும் போட்டித்தேர்வு ஆகிய இரண்டையும் தமிழக அரசு உடனடியாக ரத்து செய்து, வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய வேண்டும்.தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை எதிர்த்து தமிழ்நாடு பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்வது, பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர் பணி நியமனம் செய்யவில்லையெனில், பி.எட்., பட்டத்தை ஆசிரியர் பல்கலைக்கழகத்திலும், பதிவு மூப்பு அட்டையை வேலைவாய்ப்பு அலுவலகத்திலும் திரும்ப ஒப்படைப்பது.

தமிழ்நாடு பதிவு மூப்புப் பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ரத்தினக்குமார் தலைமையில் டிச., 11ம் தேதி திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்டு அருகே அன்னதான மண்டபத்தில் நடைபெற உள்ள மாநில பொதுக்கூட்டத்தில் பதிவு மூப்பு எதிர்பார்ப்பு ஆசிரியர்கள், சான்றிதழ் சரிபார்ப்பு ஆசிரியர்கள், நிலுவையிலுள்ள நியமன ஆசிரியர்கள், பணியிலுள்ள பட்டதாரி ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொள்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



DINAMALAR

தமிழகத்தில் 69 கல்வி அதிகாரிகள் அதிரடி மாற்றம்



வரும் 16ம் தேதி முதல் தற்காலிக ஆசிரியர்கள்  நியமனம் துவக்குகிறது. இவர்களை மாவட்ட கல்வி அதிகாரிகளே நியமனம் செய்ய உள்ளனர். இந்நிலையில், மாநிலம் முழுவதும் 69 அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சிபாரிசுகளை தவிர்க்கவே இந்த நடவடிக்கை என தெரிகிறது. நல்லது நடந்தால் சரி.... 



தேவகோட்டை மாவட்ட கல்வி அலுவலராக பணியாற்றிய சண்முகம் திருநெல்வேலி மாவட்ட கல்வி அலுவலராகவும், ராமநாதபுரம் மாவட்ட கல்வி அலுவலர் ஜாய் எபனேசர் கெட்ஸி திருநெல்வேலி மெட்ரிக்பள்ளி ஆய்வராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.தென்சென்னை மாவட்ட கல்வி அலுவலர் புகழேந்தி திருச்சி மாவட்ட கல்வி அலுவலராகவும், திருவள்ளூர் கிருபாகரன் தென்சென்னை மாவட்ட கல்வி அலுவலராகவும், பொன்னேரி ராஜசேகரன் தர்மபுரி மாவட்ட கல்வி அலுவலராகவும், காஞ்சிபுரம் அருண்பிரசாத் ஈரோடு மாவட்ட கல்வி அலுவலராகவும், செங்கல்பட்டு சண்முகம் சென்னை கிழக்கு மாவட்ட கல்வி அலுவலராகவும்வேலூர் கணேஷ்மூர்த்தி கோவை மாவட்ட கல்வி அலுவலராகவும், விழுப்புரம் பூபதி திருப்பத்தூர் மாவட்ட கல்வி அலுவலராகவும், திண்டிவனம் சண்முகம் செய்யார் மாவட்ட கல்வி அலுவலராகவும்,
விருத்தாச்சலம் பத்ரு திருவண்ணாமலை மாவட்ட கல்வி அலுவலராகவும், அரியலூர் ஜெயலட்சுமி பெரம்பலூர் மாவட்ட கல்வி அலுவலராகவும், கும்பகோணம் கமலா நாகப்பட்டினம் மாவட்ட கல்வி அலுவலராகவும் பட்டுக்கோட்டை சாந்தமூர்த்தி உசிலம்பட்டி மாவட்ட கல்வி அலுவலராகவும், மயிலாடுதுறை நிர்மலா கும்பகோணம் மாவட்ட கல்வி அலுவலராகவும், புதுக்கோட்டை பரமசிவம் மயிலாடுதுறை மாவட்ட கல்வி அலுவலராகவும், அறந்தாங்கி ராஜேந்திரன் பட்டுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலராகவும் விருதுநகர் ராஜேந்திரன் பெரியகுளம் மாவட்ட கல்வி அலுவலராகவும், தென்காசி ஜெயக்கண்ணு விருதுநகர் மாவட்ட கல்வி அலுவலராகவும், தக்கலை சார்லெட் சுஜிதா அருப்புக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலராகவும், மதுரை சுவாமிநாதன் பழனி மாவட்ட கல்வி அலுவலராகவும், வேலூர் விஜயன் பழனி மாவட்ட கல்வி அலுவலராகவும், உசிலம்பட்டி பாலமுரளி கோவை மாவட்ட கல்வி அலுவலராகவும்,
உத்தமபாளையம் பார்வதி புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலராகவும்
திண்டுக்கல் காதர்சுல்தான் தஞ்சாவூர் மாவட்ட கல்வி அலுவலராகவும், கூடலூர் உஷா திண்டுக்கல் மாவட்ட கல்வி அலுவலராகவும், கோவை முருகன் உத்தமபாளையம் மாவட்ட கல்வி அலுவலராகவும், பொள்ளாச்சி கஸ்தூரிபாய் மேலூர் மாவட்ட கல்வி அலுவலராகவும் கிருஷ்ணகிரி மார்ஸ் விழுப்புரம் மாவட்ட கல்வி அலுவலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்ட கல்வி அலுவலர் பாரதமணி ஈரோடு மாவட்ட தொடக்க கல்வி அலுவலராகவும், உடையார்பாளையம் மாவட்ட கல்வி அலுவலர் மகாலிங்கம் தர்மபுரி மாவட்ட தொடக்க கல்வி அலுவலராகவும், நாகப்பட்டினம் மாவட்ட கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் திண்டுக்கல் மெட்ரிக் பள்ளி ஆய்வராகவும்,
சிவகங்கை மாவட்ட கல்வி அலுவலர் சுபாஷினி மதுரை மாவட்ட தொடக்க கல்வி அலுவலராகவும் தூத்துக்குடி மாவட்ட கல்வி அலுவலர் தமிழ்செல்வி திண்டுக்கல் மாவட்ட தொடக்க கல்வி அலுவலராகவும், , சென்னை தொடக்க கல்வி இயக்கக உதவி இயக்குநர் சிவகாமசுந்தரி சென்னை மாவட்ட தொடக்க கல்வி அலுவலராகவும், தஞ்சாவூர் மாவட்ட கல்வி அலுவலர் ஸ்ரீதர் அரியலூர் மாவட்ட கல்வி அலுவலராகவும் உட்பட பல மொ த்தம் 63கல்வி அதிகாரிகள் புதியாக நியமிக்கப் பட்டுள்ளனர்.