Saturday, May 19, 2012

ஆசிரியர்கள் காலிப்பணியிடம் : பள்ளிக்கல்வித்துறை சேகரிப்பு

விருதுநகர் : தமிழகத்தில் உள்ள உயர்நிலை,மேல் நிலைப்பள்ளிகளில் காலிப்பணியிட விபரங்களை பள்ளிக்கல்வித்துறை சேகரித்து வருகிறது. தமிழகத்தில் உயர்நிலை, மேல்நிøப்பள்ளிகளில் ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் குறித்து விபரங்களை உடனடியாக வழங்கும்படி பள்ளிக்கல்வித்துறை கேட்டுள்ளது.

ஆண்டு தோறும் ஆர்.எம்.எஸ்.ஏ., மூலமாக பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு வருகின்றன. தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் புதிய ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் பாட வாரியாக ஆசிரியர்களும், ஒரு தலைமையாசிரியர், உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப வேண்டும். தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் உடனடியாக ஆசிரியர்கள் பணியிடங்கள் நிரப்ப முடியாததால் அந்த இடங்களில் அருகில் உள்ள பள்ளி ஆசிரியர்களை மாற்றம் செய்து பள்ளிகள் செயல்படுத்தப்பட்டன. போதுமான ஆசிரியர்கள் இல்லாத நிலையில் மாணவர்கள் கல்வி கற்பதில் சிரமம் ஏற்பட்டது. இந்த கல்வியாண்டில் இந் நிலை ஏற்படக்கூடாது என்பதற்காக பள்ளிக்கல்வித்துறை முன் கூட்டியே திட்டமிடப்படவுள்ளது.
தமிழகத்தில் அனைத்து பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்கள் குறித்து விபரங்கள் சேகரிக்கப்பட்டு உடன் வழங்க முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.காலிப்பணியிட விபரங்களை உடனடியாக பள்ளி தலைமையாசிரியர்களிடம் பெற்று பள்ளிக்கல்வித்துறைக்கு அனுப்பப்படவுள்ளது.

2 comments:

  1. sir, These ministers, chief minister, and all the other governtment employees , those who are in high position also studied in the schools, in which the teachers who have not written these tet exam only. They all have a knowledge to rule India also . I feel that this eligibility test can also be conducted for the ministers and also all the persons, even chief minister. This should be based on the Indian consitution . So that if they get only 100/100 then only they are eligible to qualify as a minister. Why don't we public give such a suggestion to the government.

    ReplyDelete