Monday, March 3, 2014

உங்கள் ஓட்டு யாருக்கு...?



பகுதி நேர ஆசிரியர்கள் மற்றும் கணினி பட்டதாரிகள் தங்களின் கோரிக்கையை வலிமையான(வன்மையான) முறையில் அரசுக்கு தெரிவிக்க தயங்குகின்றனர். அரசின் கண்டனத்திற்கு ஆளாக நேரிடும் என அச்சப்படுகின்றனர்.
அரசியல்வாதிகளை போன்று வாழ்த்து தெரிவிப்பது, நன்றி தெரிவிப்பது, பேனர் வைப்பது போன்ற செயல்களுடன் தங்களின் செயல்பாடுகளை நிறுத்திக்கொள்ளலாம் என்ற ரீதியில் செயல்படுகின்றனர்.

நம் மீது அரசுக்கு உண்மையான அக்கறை இருந்திருந்தால், நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக, நமக்கு பதில் அளித்திருக்கும்.
பகுதி நேர ஆசிரியர்கள் மற்றும் கணினி பட்டதாரிகள் தமிழகம் முழுவதும் ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த சில வாரங்களாக மனு அளித்து வருகின்றனர். இது குறித்து ஊடகங்களிலும் செய்தி வெளியாகி வருகிறது.

ஊடகங்கள், மற்றும் அரசு இயந்திரங்கள் மூலமாக, நமது கோரிக்கைகள் அரசை நிச்சயமாக சென்றடைந்திருக்கும். இருந்தும் நடவடிக்கை ஏதும் இல்லை என்பதற்கு காரணம் என்ன?

மாவட்ட அளவில் மனு அளிக்க சென்றவர்கள் 50க்கும் குறைவு. இவர்களால் நமக்கு எந்த பாதிப்பும் கிடையாது என்பது அரசுக்கு வெட்டவெளிச்சமாக தெரிந்து விட்டது.

கணினி பட்டதாரிகள் 15,000
பகுதி நேர ஆசிரியர்கள் 16,500

மொத்தம் உள்ள 31,500 பேரில் கோரிக்கை விடுப்பவர்கள், 1000 பேர் கூட கிடையாது.

ஒரு ஆயிரம் பேருக்காக, 31,500 பேருக்கு மாத சம்பளாக பெரும் தொகையை செலவிட வேண்டிய அவசியம் இல்லை என அரசு நினைப்பதில் நியாயம் உள்ளதா இல்லையா...

இந்த 31,500 பேருக்கு குடும்ப நபர்கள், நண்பர்கள், உறவினர்கள், சமூக வலைத்தள நண்பர்கள் என, ஒவ்வொருவருக்கும், 100 வாக்காளர்களை கவர முடியும் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.

1 comment:

  1. we all are put notta. only,
    Pandiyan, can you publish this news about all part time teacher & b.ed computer teacher decided to put notta, is possible?

    ReplyDelete