மதுரை:பத்தாம் வகுப்பு தேர்வில் மதுரை மாவட்டத்தில் 1051
மாணவ, மாணவியர் தமிழ் பாடத்தில் தோல்வி அடைந்துள்ளது கல்வியாளர்களை
அதிர்ச்சியடையச் செய்துள்ளது. சங்கம் வளர்த்த மதுரைக்கு இந்த சோதனையா என,
தமிழ் ஆர்வலர்களும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மாவட்டத்தில் தமிழ்
பாடத்தில் 2010ல் 1051 பேர் தோல்வி அடைந்த நிலையில் பல்வேறு நடவடிக்கை
மூலம் 2011ல் தோல்வி எண்ணிக்கை 941ஆக குறைந்தது. 2007 ல் 774 பேர், 2008
ல்826, 2009 ல்1399 பேர் தமிழ் பாடத்தில் தோல்வி அடைந்தனர். ஆனால், 2012
தேர்வில் 1051 பேர் தோல்வி பெற்றுள்ளனர்.
காரணம் என்ன?
தமிழ்நாடு பதவி
உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழக தலைமை நிலைய செயலர்
முருகேசன் கூறியதாவது: சமச்சீர் கல்வி முறையில் தயாரிக்கப்பட்ட வினாத் தாள்
அமைப்பு பல முறை மாற்றியமைக்கப்பட்டது. பழைய திட்டத்தில் இருந்தும்
கேள்விகள் இடம்பெற்றிருந்தன. உதாரணமாக, <"உவமை தொடரை வாக்கியத்தில்
அமைத்து எழுதுக' என்பது சமச்சீர் முறையில் இல்லை. ஆனால், அதுதொடர்பான
கேள்வி கேட்கப்பட்டது.
அதேபோல், தமிழ் 2ம் தாளில் "மொழியாக்கம்'
ஆங்கிலத்தில் கொடுத்து தமிழில் எழுதுமாறு கேட்கப்பட்டது. இதுபோன்ற
வினாத்தாள் அமைப்பு மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு சாதகமாக அமைந்துவிட்டது.
இதனால், அரசு பள்ளிகளில் சராசரி மாணவர்கள் தமிழ் பாடத்தில் அதிகளவில்
தோல்வியடைந்துள்ளனர்.
இதுதவிர, மாவட்டத்தில் அனைவருக்கும் இடைநிலை கல்வி
திட்டத்தில் (ஆர்.எம்.எஸ்.ஏ.,) துவங்கப்பட்ட உயர் நிலை பள்ளிகளில்
90
சதவீதம் தமிழாசிரியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதுவும் தமிழ் பாட
தோல்விக்கு முக்கிய காரணமாக இருக்கலாம்.
பெரும்பாலான பள்ளிகளில்
பட்டதாரி (தமிழ்) ஆசிரியர்கள், மேல்நிலை, உயர் நிலை வகுப்புகள்
இரண்டிற்கும் பாடம் நடத்துகின்றனர். இதுகுறித்து
அரசு சிறப்பு கவனம்
செலுத்தி, தமிழை காக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்
என்றார்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
T.G.BALASUBRAMANIAN., Australia.
மொழிப் பாடத்தில் மாணவர்கள் தேர்ச்சி பெறாத நிலை அரசின் தவறான
அணுகுமுறையையே குறிக்கின்றது. மேலும் தமிழின் இலக்கணப் பாடத்தை இறுதி
வகுப்புகளில் ஒரேயடியாக புகுத்தாமல், துவக்க வகுப்புகளிலிருந்தே சிறிது
சிறிதாக சொல்லித் தரவேண்டும்.
இப்படிச் செய்வதால் இலக்கணச் சுமை இறுதி வகுப்புகளில் அதிகம் இருக்காது.
மேலும் மாணவர்கள் தவறின்றி எழுதும் பயிற்ச்சியும் ஓரளவு ஏற்படும்.
இலக்கணப் படிப்பு பத்தாம் வகுப்புக்குள் முடிந்துவிட வேண்டும். மேல்
வகுப்புகளில் தமிழ் சிறப்புப் படங்களாகத்தான் இருக்கவேண்டும். அப்போதுதான்
தமிழ் மக்களிடையே நிலைக்கும்.
மதுரையில்
முக்கால்வாசி தமிழனுக்கு "ழ" என்பது வேற்றுகிரக மொழிதான், இதில் 1051
தோல்வி ஒன்றும் வியப்பில்லை. இது ஒன்றும் அவர்கள் தப்பில்லை, இதற்கு
ஆசிரியர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள், ஆட்சியாளர்கள், கழைகூத்தடிகள் என
அனைவரும் தான் பொறுப்பு.
தமிழிலில் பேசினால் நாம்தான் தரக்குறைவாக
நினைக்கிறோமே, மொழிப்பற்று முதலில் ஆசிரியனுக்கு இருந்தால் தானே மாணவனுக்கு
வரும், அவர்களுக்குத்தான் சம்பளம் குறைவாக(?) இந்த அரசு தருகிறதே.
உண்மையான மதுரை குமரிக்கண்டத்தில் இருந்ததாக வரலாற்று ஆசிரியர்கள்
சொல்கிறர்கள், இது உண்மையோ என்று நினைக்க தோன்றுகிறது....
இதில்
திருவிளையாடல் வசனம் வேறு ......
இதில் தினமலரின் பங்கும் உள்ளது.......
இனிமேல் காலத்தின்மேல் பாரத்தை சுமத்தாமல் ஒவ்வரு தமிழனும் தமிழை காக்க
தினமும் ஒரு ஐந்து நிமிடம் நல்ல, தூய, மாற்றுமொழிஅற்ற தமிழை பேசி பழக
வேண்டும்.
அரசியல்வாதி, சினிமாக்காரன், இந்த கிரிகெட்டு விளயடுரவனுக்கு
கொடுக்கிற முக்கியத்துவத்தைவிட கொஞ்சம் தமிழை வாழவைத்தவர்களுக்கு நேரத்தை
செலவிடலாம். இந்த கருத்துக்கு எதிர்ப்பு சொல்பவர்கள் கொஞ்சம்
சிந்தியுங்கள், நாம் தமிழர்கள் தான் இன்னும்..... நம்மை இணைப்பது இந்த
தமிழ் தான்.
AMMIYA - DENHEDLER,நெதர்லாந்து
என்ன கொடுமை ஐயா
இது ?..தமிழ் வளர்த்த மதுரைக்கே இந்த சோதனையா சுவாமி ?..எல்லோரும்
ஆங்கிலேயரின் பிள்ளைகள் ஆகிவிட்டனரோ?...ஐயா பாரதி நீங்கள் எல்லோரும் செய்த
தொண்டு, சத்தியாகிரகம்,போராட்டம்,அதனால் நீங்கள் அனுபவித்த சிறைத்தண்டனை
எல்லாம் "விழலுக்கு இறைத்த நீராகி" விட்டதே தேவன்களே......இந்தக்கொடுமையைப்
பார்க்கப் பிடிக்காமல்தான் எல்லோரும் முன்னே பூலோகம் விட்டுப்
போய்விட்டீங்களோ ?????...தாயே மீனாக்ஷி நீதான் தமிழைப் பாதுகாக்கணும்.