கம்ப்யூட்டர்
ஆசிரியர் நியமனம் தொடர்பான அறிவிப்பு, விரைவில் வெளியாக உள்ளது. பழைய காலி
பணியிடங்கள், 652 உடன், கூடுதல் பணியிடங்கள் சேர்த்து, அறிவிப்பு
வெளியாகும் என, கூறப்படுகிறது.
அரசு மேல்நிலைப் பள்ளிகளில்,
கம்ப்யூட்டர் ஆசிரியர் பணியிடம், அதிகளவில் காலியாக உள்ளது. காலியாக உள்ள,
652 பணியிடங்களை, இரு மாதங்களுக்குள் நிரப்புவதற்கு, தேவையான நடவடிக்கைகளை,
அரசு எடுக்க வேண்டும் என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து,
பி.எட்., கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்த பட்டதாரிகளை, மாநில பதிவு மூப்பு
அடிப்படையில், தேர்வு செய்ய, பள்ளி கல்வித் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
பழைய காலி பணியிடங்களுடன், கூடுதலாக தேவைப்படும் இடங்களுக்கும் சேர்த்து,
கம்ப்யூட்டர் ஆசிரியர் தேர்வு செய்யப்படுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்த டி.ஆர்.பி.,யின் அறிவிப்பு, விரைவில் வெளியாக உள்ளது. ஒரு
பணியிடத்திற்கு, ஐந்து பேர் வீதம், பதிவு மூப்பு பட்டியல் பெறப்பட்டு,
தகுதியானவர், தேர்வு செய்யப்படுவர்.