Wednesday, August 31, 2011

16,549 பகுதி நேர ஆசிரியர்களை நியமிப்பதா


16,549 பகுதி நேர ஆசிரியர்களை நியமிப்பதா பேரவைல அறிவிச்சிருக்காங்க... அதுல விளையாட்டு, ஓவியம், தையல் மற்றும் ஒர்க் எஜுகேட்டர் ஆகியோருக்குத்தான் நியமனம் போடப் போறாங்களாம்... இந்த ஒர்க் எஜுகேட்டர்ங்கறவர் யார்ங்கறதை தெளிவுப்படுத்தலையாம்... ஏற்கனவே, விவசாயம், நெசவு, தச்சு பாடங்களைப் படிச்சுட்டு நிறைய பேர் காத்திருக்காங்களாம்... அவங்களை இந்த கேட்டகிரியில போடணும்னு சிலர், அதிகாரிகள்கிட்ட சொன்னாங்களாம்... ஆனா, இந்த கேட்டகிரிக்குள்ள அவங்க வரமாட்டாங்கன்னு அதிகாரிகள் சொல்லிட்டாங்களாம்... இதனால அது என்ன கேட்டகிரின்னு தெரியாம, குழம்பிப் போயிருக்காங்களாம்...“ என்றார் பீட்டர் மாமா.

Tuesday, August 30, 2011

முதல்வர் ஜெ., அறிவித்த சமச்சீர் கல்வி தமிழகத்தில் கல்வி புரட்சி ஏற்பட வழிவகுக்கும்

தென்காசி : "முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ள சமச்சீர் கல்வி தமிழகத்தில் கல்வி புரட்சி ஏற்பட வழி வகுக்கும்' என தென்காசி எம்.எல்.ஏ., கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ""தமிழக சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா மாநிலத்தில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகள் தரமான கல்வியை பெறும் வகையில் செயல்படுத்தப்பட உள்ள புதிய சிறப்பான திட்டங்களை அறிவித்துள்ளார். பொதுவான பாடத்திட்டம் மட்டுமே சமச்சீர் கல்வி ஆகி விடாது. சமச்சீர் கல்விக்கு ஆதாரமானவை பள்ளிகளின் தரம், ஆசிரியர்-மாணவர் விகிதத்தின் அடிப்படையில் தேவையான எண்ணிக்கையில் கூடுதல் ஆசிரியர் நியமனம், பாட புத்தகங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்காமல் கல்வி இணை செயல்பாடுகளுக்கும் உரிய முக்கியத்துவம் அளிக்கும் விதமாக உடற்கல்வி, ஓவியம், தொழிற்கல்வி ஆகியவற்றிற்காக பகுதி நேர ஆசிரியர்கள், கூடுதல் வகுப்பறைகள், கழிப்பறைகள், சுகாதாரமான குடிநீர் வசதி போன்ற அடிப்படை உள் கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு போன்றவையே என்பதனை உணர்ந்து முதல்வர் பல்வேறு திட்டங்களையும், செயல்பாடுகளையும் அறிவித்துள்ளார். இது தமிழகத்தில் கல்வி புரட்சி ஏற்பட வழி வகுக்கும்.
இதன் அடிப்படையில் 65 துவக்கப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாகவும், 710 நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலை பள்ளிகளாகவும் தரம் உயர்த்த சுமார் 420 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 9 ஆயிரத்து 735 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் 3 ஆயிரத்து 565 இடைநிலை ஆசிரியர்கள் பணியிடங்களை ஏற்படுத்த 315 கோடி ரூபாயும், 16 ஆயிரத்து 549 பகுதி நேர ஆசிரியர் பணியிடங்களை ஏற்படுத்த 99 கோடி ரூபாயும், உள் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த ஆயிரத்து 83 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்திருப்பது வரவேற்கத்தக்கது.
மாநில அரசின் நிதியில் இருந்து 99 கோடி ரூபாய் செலவில் 3 ஆயிரத்து 187 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்தப்பட இருப்பது மகிழ்ச்சிக்குரியது. அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வுகளை நீக்கும் வகையில் ஒரே விதமான புத்தக பைகள், கணித உபகரண பெட்டிகள் வழங்க இருப்பது நல்ல சிந்தனை. துப்புரவு மற்றும் இதர பணிகளுக்கான ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் 5 ஆயிரம் பேர் நியமனம் செய்யப்பட இருப்பது கல்வி வளர்ச்சி பணிகளுக்கு வலுவூட்டுவதாக அமையும்.
மாணவர்கள் புத்தக சுமையை குறைக்கும் விதமாக வரும் கல்வி ஆண்டு முதல் முப்பருவ முறை அறிமுகப்படுத்தப்பட இருப்பது மாணவ, மாணவிகளுக்கும் பெற்றோருக்கும் மிகுந்த மகிழ்ச்சியையும், மன நிறைவையும் ஏற்படுத்தும். நவீன தொழில் நுட்பத்தின் பலன்கள் மாணவ சமுதாயத்திற்கும், ஆசிரியர்களுக்கும் சென்றடைய பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு லேப்டாப் கம்ப்யூட்டர் வழங்க இருப்பதும், ஆசிரியர்கள் கற்றல், கற்பித்தல் முறைகளை மேம்படுத்தும் வகையில் புதிய திட்டம் உருவாக்க இருப்பதும் முதல்வரின் தொலை நோக்கு சிந்தனையை வெளிப்படுத்துகிறது.
முதல்வர் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து, ஆராய்ந்து அனைவரும் வியந்து பாராட்டும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார். இதுதான் உண்மையான சமச்சீர் கல்வி. இதுதான் தமிழகத்திற்கு இன்றைய தேவை என்று நடைமுறைப்படுத்தியிருக்கும் முதல்வருக்கு ச.ம.க.சார்பிலும், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் சார்பிலும் பாராட்டி நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்'' என எம்.எல்.ஏ., அறிக்கையில் கூறியுள்ளார்.

dinamani 100/100

பதிவு மூப்பு அடிப்படையில் பகுதி நேர ஆசிரியர்களை தேர்வு செய்ய திட்டம்


பதிவு மூப்பு அடிப்படையில் பகுதி நேர ஆசிரியர்களை தேர்வு செய்ய திட்டம்


சென்னை: முதல்வர் அறிவித்த 16 ஆயிரத்து 549 பகுதி நேர ஆசிரியர்கள், அந்தந்த மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் பட்டியல் பெறப்பட்டு, அவர்களை அந்தந்த மாவட்டங்களிலேயே பணி நியமனம் செய்ய, நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. காலை அல்லது பிற்பகல் என அரை நாள் வேலை, தொகுப்பூதியமாக மாதம் 5,000 ரூபாய் வழங்கப்பட உள்ளது.பள்ளிக் கல்வித் துறையை சீரமைக்கும் வகையில், நேற்று முன்தினம் சட்டசபையில் பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார். 775 பள்ளிகளின் தரத்தை உயர்த்தியும், இதற்காக ஆசிரியர் பணியிடங்களுக்கு அனுமதித்தும் முதல்வர் அறிவித்தார்.

மேலும், கூடுதலாக ஆசிரியர்கள் தேவைப்படும் பள்ளிகளுக்காக, 16 ஆயிரத்து 549 பகுதி நேர ஆசிரியர்களை பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பையும் அவர் வெளியிட்டார். இதன் கீழ், உடற்கல்வி ஆசிரியர்கள், ஓவிய ஆசிரியர்கள், கை வேலைப்பாடு, தையல் ஆசிரியர்கள், இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் ஆகியோர் நியமிக்கப்பட உள்ளனர். குறிப்பாக, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் அதிகளவில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
பல அரசுப் பள்ளிகளில், ஒரு வகுப்பில் 70, 80 மாணவர்கள் இருக்கின்றனர். இது போன்ற பள்ளிகளை, அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்ககம் ஏற்கனவே அடையாளம் கண்டு, மாவட்டம் வாரியாக பட்டியல் எடுத்துள்ளது. அதன்படி, 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற வீதத்தில், கூடுதலாக தேவைப்படும் ஆசிரியர்கள் கணக்கெடுக்கப்பட்டுள்ளனர். இதன் அடிப்படையிலேயே, 16 ஆயிரத்து 549 ஆசிரியர்கள் தேவைப்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

பணி நியமனம் எப்படி? பகுதி நேர ஆசிரியர்கள் அனைவரும், தொடக்க கல்வித் துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறை சார்பில் தேர்வு செய்யப்பட உள்ளனர். பகுதி நேர ஆசிரியர்கள், 32 மாவட்டங்களிலும் தேவைப்படுகின்றனர். ஒவ்வொரு மாவட்டத்திற்கும், எத்தனை ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர் என்ற விவரங்களையும் பட்டியலிட்டு, அதை பள்ளிக் கல்வித் துறை மற்றும் தொடக்க கல்வித் துறையிடம், அனைவருக்கும் கல்வி திட்ட இயக்ககம் ஒப்படைத்துள்ளது.அதன்படி, ஒவ்வொரு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களிலும், பதிவு மூப்பு பட்டியலை பெற்று, சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பின், அவர்களை அந்தந்த உள்ளூர் மாவட்டங்களிலேயே பணி நியமனம் செய்ய, இரு துறைகளும் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

மாவட்டத்தில் அதிக காலிப் பணியிடங்கள் இல்லாதபட்சத்தில், அருகில் உள்ள மாவட்டங்களில் பணி நியமனம் செய்யப்படுவர்.இது குறித்து, பள்ளிக் கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, "எந்த முறையில் பகுதி நேர ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர் என்பது குறித்து, இதுவரை முடிவு எடுக்கவில்லை. அரசிடம் இருந்து உரிய வழிகாட்டுதல் வந்த பிறகே முடிவு எடுக்கப்படும்' என்றார்.

சம்பளம் எவ்வளவு?  பகுதி நேர ஆசிரியர்களுக்கு, தலா 5,000 ரூபாய் வழங்கப்பட உள்ளது. இவர்களுக்கான சம்பளத்தை, அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்ககம் வழங்கும். மாவட்டம் வாரியாக உள்ள எஸ்.எஸ்.ஏ., திட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மூலம், சம்பளம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, ஆண்டுக்கு 99 கோடியே 29 லட்சம் ரூபாய் செலவிடப்படும்.வேலை நேரம்: ஆசிரியர்களின் பணியைப் பொருத்து, காலை அல்லது பிற்பகல் என, ஏதாவது ஒன்றை தேர்வு செய்து, அரை நாள் வேலை செய்யும் வகையில், உத்தரவு பிறப்பிக்கப்படும். இந்தப் பணி நியமனங்கள், அடுத்த மாதத்திற்குள் நிறைவேற்றி முடிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

பட்டதாரிகள் உற்சாகம்: பகுதி நேர ஆசிரியர்கள் நியமன அறிவிப்பு, பட்டதாரிகளிடையே படு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. எப்படியாவது, "உள்ளே' நுழைந்து விட்டால், ஆட்சி முடியும் தறுவாயில், பணி நிரந்தரம் செய்ய முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகின்றனர்.முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில் நியமிக்கப்பட்ட டாஸ்மாக் ஊழியர்களும், பணி நிரந்தர கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர். இவர்களின் கோரிக்கைகளை, 2016ம் ஆண்டு முதல்வர் பரிசீலிப்பார் என்பதால், பகுதி நேர வேலையில் சேர, பட்டதாரிகள் தீவிர ஆர்வத்துடன் உள்ளனர்.

THANKS:DINAMALAR

பகுதி நேர ஆசிரியர் பணியிடங்கள்


பகுதி நேர ஆசிரியர் பணியிடங்கள் 30 மாவட்டங்களுக்கு பகிர்ந்தளிப்பு : விழுப்புரம் மாவட்டத்திற்கு, 1,221 பணியிடங்கள் ஒதுக்கீடு


சென்னை : முதல்வர் அறிவித்த 16 ஆயிரத்து, 549 பகுதி நேர ஆசிரியர் பணியிடங்கள், 30 மாவட்டங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளன. இதில், ஓவிய ஆசிரியர்கள், தையல், கைவேலை மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் ஆகிய, மூன்று பிரிவினர் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். பள்ளிக்கல்வி அமைச்சரின் விழுப்புரம் மாவட்டத்திற்கு, அதிகபட்சமாக, 1,221 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ள பள்ளிகளில், கூடுதல் ஆசிரியர்களை நியமிக்கும் வகையில், 16 ஆயிரத்து, 549 பகுதி நேர ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதற்கான பணியிடங்கள், அரியலூர், திருப்பூர் ஆகிய இரு மாவட்டங்களை தவிர்த்து, மீதமுள்ள 30 மாவட்டங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளன.
பகுதி நேர ஆசிரியர்களாக ஓவிய ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் தையல், கை வேலைப்பாடு ஆகிய, மூன்று பிரிவுகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் மட்டுமே, தேர்வு செய்யப்பட இருப்பது, தற்போது தெரிய வந்துள்ளது. மாணவர்கள், கல்வி கற்பதற்கு தேவைப்படும் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள், தேர்வு செய்யப்படவில்லை. பகுதி நேர பணியில் சேர, பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் மிகவும் ஆர்வமாக இருந்தனர். ஆனால், இவர்கள் தேர்வு செய்யப்படாதது, அவர்கள் மத்தியில் ஏமாற்றத்தைத் தந்துள்ளது. இதுகுறித்து, பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் கூறும் போது, "இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர்கள், முறையான அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான பணியிடங்கள், ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளன. இவர்களை பணி நியமனம் செய்துவிட்டால், கூடுதல் ஆசிரியர்கள் தேவை இருக்காது. அதனால் தான், பகுதி நேர ஆசிரியர் பட்டியலில், இவர்கள் இடம் பெறவில்லை' என்றனர். மொத்த பணியிடங்களான 16 ஆயிரத்து, 549ல், ஓவிய ஆசிரியர்கள் 5,253 பேரும், உடற்கல்வி ஆசிரியர்கள் 5,392 பேரும், தையல் உள்ளிட்ட ஆசிரியர்கள் 5,904 பேரும் தேர்வு செய்யப்பட உள்ளனர். 30 மாவட்டங்களுக்கான பணியிட ஒதுக்கீட்டில், அதிகபட்சமாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் விழுப்புரம் மாவட்டத்திற்கு, 1,221 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. விழுப்புரம் மட்டுமில்லாமல், கல்வியில் பின் தங்கிய மாவட்டங்களான வேலூர், திருவண்ணாமலை, தர்மபுரி, கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு, முக்கியத்துவம் தரப்பட்டுள்ளன. திருவண்ணாமலை மாவட்டத்திற்கு, 944 பணியிடங்கள், வேலூர் மாவட்டத்திற்கு, 1,093 பணியிடங்கள், கடலூர் மாவட்டத்திற்கு, 706 பணியிடங்கள், தர்மபுரிக்கு, 535 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டுக்குள் 52 ஆயிரம் புதிய ஆசிரியர்கள் நியமனம்


இந்த ஆண்டுக்குள் 52 ஆயிரம் புதிய ஆசிரியர்கள் நியமனம் -29-08-2011


ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கையில், 7,000, 8,000 ஆசிரியர்கள் நியமனம் என்று தான் வழக்கமாக அறிவிப்பு வரும். அதிலும், அதிகபட்சமாக 10 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மேல் இருக்காது. காலிப் பணியிடங்கள் அதிகமாக இருந்தாலும், அதில் ஓரளவு இடங்கள் தான் நிரப்பப்படும்.மூன்று மாதங்களில் அதுவும் ஒரே வாரத்தில், 52,413 ஆசிரியர்களை நியமனம் செய்ய அறிவிப்பு செய்து, முதல்வர் ஜெயலலிதா புதிய சாதனை படைத்துள்ளார்.
அடுத்த ஆண்டு ஓய்வு பெறும் ஆசிரியர்கள் மூலம், காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றரை மாதங்களில், அதுவும் கடந்த ஒரே வாரத்தில், 52 ஆயிரத்து 413 ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார் முதல்வர். வெறும் பொதுவான பாடத் திட்டத்தை அமல்படுத்துவது மட்டுமே சமச்சீரான கல்வியாக இருக்காது என்பதும், அனைத்து நிலைகளிலும் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்தி, கல்வித் தரத்தை மேம்படுத்துவது முக்கியம் என்பதும், முதல்வர் ஜெயலலிதாவின் அழுத்தமான கருத்து.
அதன்படி, அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில், முதல்வர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். சட்டசபையில், கடந்த 22ம் தேதி பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை விவாதம் நடந்தது. விவாதங்களுக்கு பதிலளித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சண்முகம் பேசும்போது, 14 ஆயிரத்து 377 ஆசிரியர்கள் புதிதாக நியமனம் செய்யப்படுவர் என்று அறிவித்தார்.
இந்நிலையில், சட்டசபையில் விதி 110ன் கீழ், பள்ளிக் கல்வித் துறையின் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில், ஏராளமான அறிவிப்புகளை முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார். மாநிலம் முழுவதும் 775 பள்ளிகள் தரம் உயர்வு, 33 ஆயிரத்து 36 ஆசிரியர்கள் நியமனம், ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் 5,000 என மொத்தம், 38 ஆயிரத்து 36 பேர் பணி நியமனம் செய்யப்படுவர் என, முதல்வர் அறிவித்தார்.
கடந்த வாரத்தில் அமைச்சர் வெளியிட்ட புதிய நியமனம் மற்றும் முதல்வர் வெளியிட்ட புதிய நியமனங்களும் சேர்த்து மொத்தம் 52 ஆயிரத்து 413 பேர், பள்ளிக் கல்வித் துறையில் நியமிக்கப்பட உள்ளனர். இந்த பணியிடங்கள் அனைத்தும் விரைவில் நிரப்பப்பட உள்ளன.
THANKS:DINAMALAR

RMSA-COMPUTER TEACHERS


மத்திய அரசின் கட்டாய கல்வி திட்டத்தின் கீழ் M.C.A, PGDCA,M.Sc Computer Science   படித்தவர்களுக்கு
கணினி தொடர்புடைய தற்காலிய பணியிடங்களுக்கு
வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டு வருகிறது.

பி.எட். சான்றிதழ்களை இணையதளம் மூலம் பதிவு செய்யலாம்:


பி.எட். சான்றிதழ்களை இணையதளம் மூலம் பதிவு செய்யலாம்: ஆட்சியர்

First Published : 30 Aug 2011 01:59:52 AM IST


விழுப்புரம், ஆக. 29: பி.எட். சான்றிதழ்கள் வழங்கப்படும் கல்லூரிகளிலேயே இணையதளம் மூலம் வேலைவாய்ப்பு பதிவு மேற்கொள்ள சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கா.த.மணிமேகலை தெரிவித்துள்ளார்.
 ÷இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பி.எட். கல்லூரிகளில் பயின்ற மாணவ, மாணவிகள், தேர்ச்சி பெற்று சான்று பெற தாங்கள் படித்த கல்லூரிக்குச் செல்லும்போது ஏற்கெனவே மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பட்டப்படிப்பு வரை பதிவு செய்த அடையாள அட்டையுடன் தாங்கள் படித்த கல்லூரிக்கு சென்று பி.எட். சான்றிதழை கூடுதல் கல்வித் தகுதியாக இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
 ÷ஏற்கெனவே வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்து புதுப்பிக்காதவர்கள் மற்றும் இதுவரை வேலைவாய்ப்பகத்திலேயே பதிவு செய்யாதவர்களும் தங்களது பெயர் இடம் பெற்ற ரேஷன் கார்டு, பட்டப்படிப்பு சான்று மற்றும் பி.எட். சான்றையும் அன்றே இணையதளம் மூலம் கல்லூரிகளிலேயே பதிவு செய்து கொள்ளலாம்.