பகுதி நேர கணினி ஆசிரியர்கள் அரசு துறை தேர்வுகளை எழுதலாம். அரசு பணியே கிடைக்காதவர்கள் கூட தம் வீட்டு முகவரியை கொண்டு துறை தேர்வுகளை எழுதலாம்.
பகுதி நேர ஆசிரியர்கள் தாங்கள் பணிபுரியும் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி
தலைமை ஆசிரியரின் அனுமதியுடன் அல்லது தொடக்க கல்வி துறை எனில் உதவி தொடக்க
கல்வி அலுவலர் அனுமதியுடன் துறை தேர்வுகளை எழுதலாம். பின்னர் முழு நேர
பணியாளராக ஆனதும் பணிப்பதிவேடு துவங்கிய பின்னர் அதில் தங்கள் துறைதேர்வு
முடிவுகளை பதிவு செய்து கொள்ளலாம்.
குறிப்பு: தாங்கள் பணிபுரியும் பள்ளி முகவரியை கொண்டே தேர்வு
எழுத வேண்டும். தங்கள் பள்ளி அமைந்துள்ள மாவட்டத்தின் தேர்வு மையத்தில்
தான் தேர்வு எழுத வேண்டும். மற்ற மாவட்டத்தில் தேர்வு எழுத வேண்டாம். இது எவ்விதத்திலும் பணி நியமன வாய்ப்பிற்கு பயன்படாது.
No comments:
Post a Comment