Tuesday, November 13, 2012

மீண்டும் மீண்டும் ஃபெயில்!

மாணவர்களுக்கு இதுவரை ஃபெயில் போட்ட ஆசிரியர்கள், மறுபடிமறுபடி ஃபெயில் ஆகிக்கொண்டு இருக்கிறார்கள். ஏற்கெனவே நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் பல லட்சம் பேர் எழுதி சில ஆயிரம்தான் தேறினர். மறு தேர்வும் அப்படியே ஆகி இருக்கிறது!
தேவையான ஆட்களைத் தேர்வு செய்ய முடியாமலே மீண்டும் ஒருமுறை நடந்து முடிந்திருக்கிறது ஆசிரியர் மறுதகுதித்தேர்வு. கடந்த முறைபோல் இந்த முறை குற்றச்சாட்டுக்கள் அதிகம் இல்லை. ஆனால், தேர்வில் கலந்துகொண்டோருக்கு பல்வேறு விதமான ஆதங்கங்களும் சந்தேகங்களும் இருக்கின்றன.
20,525 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் 7,194 இடைநிலை ஆசிரியர்களைத் தேர்வு செய்ய, கடந்த ஜூலை மாதம் ஆசிரியர் தேர்வு ஆணையம் தகுதித் தேர்வை நடத்தியது. அதில் மிகக் குறைந்த பட்சமாக 0.33 சதவிகிதம் பேரே தேர்ச்சி அடைந்தனர். அதனால், அதிர்ந்துபோன தேர்வு ஆணையம் உடனடியாக மறு தேர்வை அறிவித்து கடந்த அக்டோபர் 14-ம் தேதி அதை நடத்தி முடித்தது. முதல்முறை ஆறரை லட்சம் பேரும், இரண்டாம் முறை ஆறே முக்கால் லட்சம் பேரும் தேர்வு எழுதினர். இந்த முறை இடைநிலை ஆசிரியர்கள் தேவைப்படும் அளவுக்கு தேர்ச்சி பெற்றுவிட... பட்டதாரி ஆசிரியர்கள் குறைவாகவே தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது 20,525 ஆசிரியர்கள் தேவைப்படும் இடத்தில் 8,849 பேர் மட்டுமே பாஸ்.

http://www.vikatan.com/jv/2012/11/mqywuy/images/p37.jpg
இந்த நிலையில்தான் தேர்வு எழுதிய ஆசிரியர்கள் மத்தியில் சில குமுறல்கள்...
தமிழ்நாடு பி.எட். பட்டதாரிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பாலசுப்ரமணியன், ''மத்திய அரசின் கட்டாயக் கல்வி சட்டத்தின் அடிப்படையில் தமிழ்நாட்டில் இந்த வருடம் இந்த ஆசிரியர் தகுதித்தேர்வை நடத்த ஆரம்பித்து இருக்கிறார்கள். இனி,  இந்த தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாமல் யாரும் ஆசிரியராக முடியாது. கடந்த ஜூலை மாதம் தகுதித்தேர்வை நடத்தியபோது கொடுக்கப்பட்ட நேரம் குறைவு. கேள்விகளும் கடினம். அவற்றைச் சுட்டிக்காட்டிய பிறகு இப்போது மறுதேர்வு. இதிலும் குழப்பமான கேள்விகள், பாடத்திட்டத்தின் வெளியில் இருந்து 23 கேள்விகள் இருந்தன. அதனால், இந்த முறையும் தேவையான பட்டதாரி ஆசிரி யர்களைத் தேர்வு செய்ய முடியவில்லை'' என்றார் விளக்கமாக.
பி.எட். பட்டதாரிகள் சங்கத்தின் தஞ்சை மாவட்டத் தலைவர் கார்த்திகேயன், ''மாநில அரசு விரும்பினால் இடஒதுக்கீட்டு அடிப் படையில் மதிப்பெண்களை குறைத்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு சொல்லி இருக்கிறது. அதன் அடிப்படையில் தேர்ச்சிக்கான 60 சதவிகிதம் என்பதை 50 சதவிகிதம் வரையிலும் குறைத்தால், தேவைப்படும் பட்டதாரி ஆசிரியர்கள் கிடைத்துவிடு வார்கள். அதை அமல்படுத்தினால், வருடக்கணக்கில் காத்திருக்கும் பல்லாயிரம் ஆசிரியர்கள் வேலைக்குப் போக ஒரு வாய்ப்பு கிடைக்கும். தமிழக அரசு உடனடியாக இதைச் செயல்படுத்த வேண்டும்'' என்கிறார்.
இடைநிலை ஆசிரியர்களோ வேறு வகையில் புலம்பித் தீர்க்கிறார்கள். சிறப்பு இடைநிலை ஆசிரியர்கள் சங் கத்தின் தலைவர் ரவி, ''ஒரு பாடத் திட் டத்தைச் சொல்லி, இதுதான் தேர்வில் வரும் என்றார்கள். ஆனால், அதை விடுத்து வெளியில் இருந்து கேள்விகளைக் கேட்கிறார்கள். எட் டாம் வகுப்பு வரை பாடத் திட்டம் இருக்க வேண்டிய இடைநிலை ஆசிரியர்களின் கேள்வித்தாளில் பி.எட். பாடப்புத்தகத்தில் இருந்து 12 கேள்விகள் இருந்தன. மொத்தமாக 26 கேள்விகள் பாடத்திட்டத்தின் வெளியில் இருந்து கேட்கப்பட்டு இருந்தன. அதை, உரிய ஆதாரங்களோடு தேர்வாணையத்துக்கு எடுத்துச் சென்றும் எந்தப் பதிலும் இல்லை. ஆனால், ஏழு மதிப்பெண்களை மட்டும் அதிகரித்து இருக்கிறார்கள். 26 மதிப்பெண்களையும் முழுதாகக் கொடுத் திருந்தால், கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் வரை தேர்ச்சிபெற்று இருப்பார்கள்'' என்கிறார்.
இதுதவிர இன்னொரு சந்தேகமும் ஆசிரியர்கள் மத்தியில் பலமாக உலவுகிறது. 'ஆசிரியர் வேலை வேண்டும் என்றால், இரண்டரை லட்ச ரூபாய் கொடுங்கள். நிச்சயம் வேலை வாங்கித் தருகிறோம்என்று பலரையும் வெளிப்படையாக அணுகிப் பேரம் பேசிக்கொண்டு இருந்தனர் சிலர். அவர்களின் வலையில் விழுந்தவர்கள் அனைவருமே இப்போது நடந்த தேர்வில் வெற்றிபெற்று இருக்கிறார்களாம். அதனால், இந்தத் தேர்வில் பணத்துக்கும் பெரிய பங்கு இருக்குமோ என்றும் ஐயப்படுகிறார்கள்.
இப்படி இரண்டு தரப்பினரும் கோரிக்கைகள் விடுக்க... கல்வித்துறையோ அலட்டிக்கொள்ளாமல் பதில் சொல்கிறது. ''மத்திய அரசின் ஆசிரியர் தேர்வுகளில் மூன்று சதவிதம் பேர்தான் தேர்ச்சி பெறுவார்கள். அப்படி தேர்ச்சி பெற்றால்தான் அது சரியான தேர்வாக இருக்கும். இப்போது நாங்கள் நடத்தி இருக்கும் தேர்விலும் மூன்று சதவிகிதம் பேர்தான் தேர்ச்சி அடைந்து இருக்கின்றனர். இது ஒன்றே தேர்வின் தரத்தைச் சொல்லும். இந்தத்தேர்வு முழுக்க முழுக்க வெளிப் படையாகவும் நேர்மையாகவும் நடந்த தேர்வு. இதில் எந்த முறைகேட்டுக்கும் வாய்ப்பே இல்லை. தேர்வு எழுதியவர்கள் சொல்லும் குற்றச்சாட்டு... கேள்விகள் வெளியில் இருந்து கேட்கப்படுகிறது என்பதுதான். அதில் உண்மை இல்லை. பாடத்திட்டத்தில் இருந் துதான் கேட்கப்பட்டது. நுண்ணறிவைச் சோதிக்கும்விதமாக மாற்றிக் கேட்டு இருந்தோம். வல்லுனர் குழுவினர் பரிசீலித்து விட்டு சில மதிப்பெண்களை சேர்க்கச் சொன்னார்கள். அதைச்சேர்த்துத்தான் முடிவு வெளியிட்டு இருக்கிறோம். இடஒதுக்கீட்டு முறை யில்தான் பணி அமர்த்துகிறோம்'' என்கிறார்கள்.
ஆசிரியப் பெருந்தகைகளே... ஒழுங்காக படித்து தேர்வு எழுதி வெற்றிபெறுவதைத் தவிர, இனி உங்களுக்கு வேறு மார்க்கம் இல்லை!
- கரு.முத்து, வீ.மாணிக்கவாசகம்

No comments:

Post a Comment