சென்னை, மார்ச்.7-
ஜுன்
மாதம் 3-ந் தேதி நடைபெற உள்ள ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பம் வருகிற
22-ந் தேதி முதல் அனைத்து மாவட்ட கல்வி அலுவலகங்களில் வழங்கப்படுகிறது.
ஆசிரியர் தகுதி தேர்வு
மத்திய
அரசின் உத்தரவின்படி அனைத்து மாநிலங்களிலும் உள்ள ஆசிரியர்கள் ஆசிரியர்
தகுதி தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.
அதன்படி
தமிழ்நாட்டில் 23-8-2010-ந் தேதி அன்றோ அதற்கு பின்னரோ ஆசிரியர் பணியில்
சேர்ந்தவர்கள் கட்டாயம் ஆசிரியர் தகுதிதேர்வை எழுதவேண்டும். இந்த தேர்வை 5
ஆண்டுகளுக்குள் எழுதி தேர்ச்சி பெறவேண்டும்.
சுயநிதி
பள்ளிகளில் பி.எட். படிக்காமல் பணிபுரியும் ஆசிரியர்கள் 5 வருடங்களுக்குள்
பி.எட்.படிக்கவேண்டும். பின்னர் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி
பெறவேண்டும்.
1-வது
முதல் 8-வது வகுப்பு வரை பாடம் நடத்தும் அனைத்து ஆசிரியர்களும் ஆசிரியர்
தகுதி தேர்வை எழுதவேண்டும். பிளஸ்-2 படித்துவிட்டு 2 வருட ஆசிரியர் பயிற்சி
முடித்து ஆசிரியராக பணிபுரிபவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வில் முதல் தாள்
பரீட்சையை எழுதவேண்டும். பி.எட். படித்தவர்கள் 2-வது தாள் பரீட்சையை
எழுதவேண்டும். சில தனியார் பள்ளிகளில் 1-முதல் 8 வகுப்புகளுக்கும் ஒரே
ஆசிரியர் சில வகுப்புகளை எடுக்கலாம். அப்படிப்பட்ட ஆசிரியர்கள் ஆசிரியர்
தகுதி தேர்வில் முதல் தாளையும் எழுதவேண்டும்., 2-வது தாளையும்
எழுதவேண்டும்.
விண்ணப்பம்
ஆசிரியர் தகுதி தேர்வு எழுத விண்ணப்பம் மார்ச் 22-ந்தேதி முதல் அனைத்து மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகங்களிலும் கிடைக்கும்.
விண்ணப்பத்தின் விலை ரூ.50.
விண்ணப்பம்
கொடுக்கும் போது அதில் ஒரு வங்கிச்செல்லான் இருக்கும். அதை யாரும்
தொலைக்காமல் பத்திரமாக வைத்து அந்த செல்லானை பூர்த்தி செய்து `ஸ்டேட்
பாங்க்'கில் ரூ.500 செலுத்தவேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மாவட்ட
கல்வி அலுவலகங்களில் ஒப்படைக்கவேண்டும். அவ்வாறு ஒப்படைக்க ஏப்ரல் 4-ந்தேதி
கடைசி நாள்.
பாடத்திட்டம்
தேர்வு
ஜுன் மாதம் 3-ந் தேதி நடைபெறுகிறது. தேர்வில் ஆப்ஜெக்ட் முறையில்
கேள்விகள் இருக்கும். அதாவது ஒரு கேள்விக்கு 4 பதில்
கொடுக்கப்பட்டிருக்கும். அதில் ஒன்று மட்டும் சரியானதாக இருக்கும். 3
பதில்கள் தவறாக இருக்கும்.
ஆசிரியர் தேர்வு எழுத பாடத்திட்டம் விரைவில் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.
தேர்வு
தேதி இப்போதைக்கு தற்காலிகமாக முடிவு செய்யப்பட்டுள்ளது. சில நாட்கள்
முந்தவும் சில நாட்கள் பிந்தவும் வாய்ப்பு உள்ளது. தேர்வை 7 லட்சம் பேர்
எழுதுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே 8 லட்சம் விண்ணப்பங்கள்
அச்சடிக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment