பகுதி நேர சிறப்பாசிரியர்களை, வேறு பாடங்களை நடத்தச் சொல்லக் கூடாது என, தலைமை ஆசிரியர்களுக்கு, அனைவருக்கும் கல்வி இயக்கம் (எஸ்.எஸ்.ஏ.,) சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில், 10 ஆயிரத்து 684 பகுதி நேர சிறப்பாசிரியர்கள், 5,000 ரூபாய் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான சம்பளம் எஸ்.எஸ்.ஏ., மூலம் வழங்கப்படுகிறது. பகுதி நேர ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டவர்களை, வேறு பணிகளை செய்யச் சொல்வதாக புகார்கள் வரப்பெற்றுள்ளன. இதையடுத்து, அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவில், பகுதி நேர சிறப்பாசிரியர்களை, அரசாணையில் கூறப்பட்டுள்ள பணிகளை மட்டுமே செய்யச் சொல்ல வேண்டும். பிற பாடங்களை நடத்த நிர்பந்தம் செய்யக்கூடாது என, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment