Monday, March 26, 2012

கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் தவிக்கின்றனர்.


சிவகங்கை:அரசு பள்ளிகளில் பணியாற்றும் கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் பலர் 
தகுதிக்காண் பருவ உத்தரவு கிடைக்காமல் தவிக்கின்றனர்.தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அரசு பள்ளிகளில் தொகுப்பூதிய அடிப்படையில் 1700 கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் பணியில் சேர்ந்தனர். இவர்கள் 2008ல் சிறப்பு தேர்வு மூலம் பணி நிரந்தரமாக்கப்பட்டனர். இவர்களுக்கு தொழிற்கல்வி பிரிவு ஆசிரியர் அந்தஸ்தை அரசு வழங்கியது. இவர்களில் 800 பேர் தவிர, 900 ஆசிரியர்களுக்கு டிசம்பர் 2011க்குள் தகுதிக்காண் பருவம் வழங்கி, மற்ற ஆசிரியர்களுக்குரிய அனைத்து சலுகைகளையும் வழங்கலாம் என்று கல்வித்துறை இணை இயக்குனரகம் உத்தரவிட்டது.

அதன்படி தமிழகம் முழுவதும் சிலருக்கு, அவர்களின் சான்றிதழ்களின் உண்மைத் தன்மைக்கு பின், தகுதிக்காண் பருவம் அளிக்கப்பட்டு மருத்துவ விடுப்பு உள்ளிட்ட சலுகைகளை பெற்று வருகின்றனர்.சிவகங்கை, ராமநாதபுர மாவட்டத்தில் 50க்கு மேற்பட்ட கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இவர்களில் பலருக்கு முதன்மை கல்வி அலுவலகம் மூலம் தகுதிக்காண் பருவம் கிடைக்காததால் சலுகைகள் பெற முடியாமல் தவிக்கின்றனர்.கல்வித்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், ""கம்ப்யூட்டர் ஆசிரியர்களுக்கான தகுதிக்காண் பருவம் வழங்க, சென்னையிலிருந்து அவரவர் சான்றிதழ்களின் உண்மைத் தன்மைக்கான உத்தரவு, பணிபுரியும் தலையாசிரியர்கள் கையெழுத்திட்டு வர வேண்டும். இரு மாவட்டத்திலும் ஒரு சிலர் தவிர, மற்றவர்களுக்கு இன்னும் வரவில்லை. அவை கிடைத்தவுடன் உரியவர்களுக்கு தகுதிக்காண் பருவத்திற்குரிய உத்தரவு வழங்கப்படும்'' என்றார்.

No comments:

Post a Comment