விழுப்புரம் :பகுதிநேர ஆசிரியர் நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளதாக ஓவிய ஆசிரியர்கள் கலெக்டரிடம் புகார் மனு கொடுத்தனர்.
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைகேட்பு கூட்டத்தில் கலெக்டரிடம் ஓவிய ஆசிரியர்கள் சார்பில் மனு கொடுத்தனர்.
அதில் கூறியிருப்பதாவது : எஸ்.எஸ்.ஏ., திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் 402 பகுதி நேர ஓவிய ஆசிரியர்கள், தகுதிகள் அடிப்படையில் நியமிக்கப்படுமென அறிவித்தனர். தற்போது வழங்கியுள்ள பணி நியமனத்தில் வேலை வாய்ப்பு பதிவு மூப்பு, இன சுழற்சி, உயர் கல்வி தகுதி, அனுபவம் உள்ளிட்ட அரசின் எந்த விதிகளையும் பின்பற்றவில்லை.
முறைகேடான நியமனத்தை ரத்து செய்துவிட்டு, தகுதியுள்ளவர்களுக்கு பணி வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகாரில் தெரிவித்திருந்தனர்.

tncsteacher.co.nr
ReplyDeletesir i am finish bc,b.ed., dcted
b.ed cs teacher
ReplyDelete