சென்னை, மே 2: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 22-ம் தேதி காலை 11 மணிக்கு
வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி புதன்கிழமை
தெரிவித்தார்.
தேர்வு முடிவுகள் இணையதளங்களில் மே 22 காலை வெளியிடப்பட உள்ளன.
பிளஸ் 2 தேர்வு மார்ச் 8 முதல் 30 வரை சுமார் 2 ஆயிரம் மையங்களில் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் சுமார் 8.2 லட்சம் மாணவ, மாணவியர் இந்தத் தேர்வை எழுதினர். விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 2 முதல் 30 வரை தமிழகம் முழுவதும் 47 மையங்களில் நடைபெற்றது. பொறியியல், மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான முக்கியப் பாடங்களான கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய பாடங்களுக்கான விடைத்தாள்கள் "டம்மி' எண் வழங்கப்பட்டு பல்வேறு தேர்வு மையங்களில் திருத்தப்பட்டன.
விடைத்தாள் திருத்தும் மையங்களில் இருந்து அவ்வப்போது பெறப்பட்ட மதிப்பெண்கள், சென்னையிலுள்ள டேட்டா சென்ட்டரில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிந்த பிறகு மொத்தமாக சி.டி.க்களில் இந்த மதிப்பெண் விவரங்கள் பெறப்படும். அதன்பிறகு, ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட மதிப்பெண்களும், சி.டி.க்களில் பெறப்பட்ட மதிப்பெண்களும் சரிபார்க்கப்படும். இதில் ஏதேனும் குறை இருந்தால் அவையும் உடனுக்குடன் சரிசெய்யப்படும். இறுதி மதிப்பெண் பட்டியலும் ஒருமுறைக்கு இருமுறை சரிபார்க்கப்படும். கடைசியாக, டம்மி எண்களுக்கு உரிய தேர்வர்களின் மதிப்பெண் விவரங்கள் வெளியிடப்படும்.
மாநில அளவில் ரேங்க் பெறும் மாணவர்களின் மதிப்பெண்களும் சிறப்பு கவனத்தோடு சரிபார்க்கப்படும் என கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. வழக்கமாகத் தொடங்குவதை விட, இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வு ஒரு வாரம் தாமதமாகத் தொடங்கியது. அதன் காரணமாக இந்த ஆண்டு சற்று தாமதமாக முடிவுகள் வெளியிடப்படுகின்றன. கடந்த ஆண்டு மே 9-ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

புகைப்படத்துடன் கூடிய மதிப்பெண் சான்றிதழ்:
இந்த ஆண்டு பிளஸ் 2 மதிப்பெண்
சான்றிதழ் புகைப்படம், "பார் கோடு' உள்பட 12 பாதுகாப்பு அம்சங்களுடன்
தயாரிக்கப்படுகிறது. எனவே, மதிப்பெண் சான்றிதழ் முறைகேடு உள்ளிட்டவற்றுக்கு வாய்ப்பே
இல்லை என்று கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மதிப்பெண் சான்றிதழ் தரமான
தாளில் வழங்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment