Tuesday, May 1, 2012

ஆசிரியர் தகுதித் தேர்வு தேதி மாறுமா?

சென்னை, ஏப். 30: 2011-12 மற்றும் 2012-13 ஆகிய இரண்டு கல்வியாண்டுகளுக்கும் சேர்த்து மொத்தம் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் என்.ஆர். சிவபதி தெரிவித்தார்.  பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியர் நியமனம் 55 ஆயிரத்திலிருந்து 14 ஆயிரமாக குறைந்துவிட்டதாக தி.மு.க. தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியிருந்தார்.  
சென்னையில் நிருபர்களிடம் பேசிய அமைச்சர் என்.ஆர். சிவபதி இதுதொடர்பாக அளித்த பதில்:
 வரும் கல்வியாண்டில் (2012-13) 14,349 ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றுதான் பேரவையில் அறிவிக்கப்பட்டது. நியமிக்கப்படும் மொத்த ஆசிரியர் எண்ணிக்கை என்று அறிவிக்கவில்லை.  ஏற்கெனவே அறிவித்தவாறு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகள் இப்போது நடைபெற்று வருகின்றன. 
16,549 பகுதிநேர ஆசிரியர் நியமனம் முடிந்துள்ள நிலையில், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள், பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களை நியமிப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.  எனவே, பள்ளிக் கல்வித் துறையில் மொத்தமாக 65 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். 
வரும் கல்வியாண்டுக்கென அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையை மட்டும் கணக்கில் எடுத்து கருணாநிதி அறிக்கையை விட்டுள்ளார். ஆசிரியர் நியமன எண்ணிக்கை அவர் கூறியுள்ளதைப் போல் குறைந்துவிடவில்லை.  
 
ஆசிரியர் தகுதித் தேர்வு தேதி மாறுமா?  
 
ஆசிரியர் தகுதித் தேர்வு ஜூன் 3-ம் தேதி நடைபெறும். அதிக எண்ணிக்கையிலான ஆசிரியர்களை நியமிக்க உள்ளதால் இந்தத் தேதியில் மாற்றம் செய்வது கடினம் என்றார் அவர்.    
 
 அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள்   
   ஆசிரியர்கள்                                      2011-12     2012-13      மொத்தம்  
 
முதுநிலை ஆசிரியர்கள்                  4272          2312             6584
 
  பட்டதாரி ஆசிரியர்கள்                  19057         6768            25825
  
இடைநிலை ஆசிரியர்கள்                 9487          3433          12920 
 
 சிறப்பாசிரியர்கள்                                  865            823            1688 
 
 தலைமையாசிரியர்கள்                        775         1013           1788 
 
 பகுதிநேர ஆசிரியர்கள்                     16,549    ---------      16,549  
 
மொத்த ஆசிரியர் பணியிடங்கள்                                      65,354  
 
ஆசிரியரல்லாத பணியிடங்கள்       7,308    6,786          14,094 
 
மொத்த பணியிடங்கள்                                                        79,448  

No comments:

Post a Comment