Friday, May 4, 2012

"ஆன்லைன்' மையங்களில் கூடுதல் கட்டணத்திற்கு தடை

சிவகங்கை: ""டி.என்.பி.எஸ்.சி., ஆன்லைன் மையங்களில் பதிவு கட்டணம் 50 ரூபாய்க்கு மேல் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, கலெக்டர் ராஜாராமன் தெரிவித்தார். சிவகங்கை தலைமை தபால் நிலையத்தில் செயல்படும், டி.என்.பி.எஸ்.சி., ஆன்லைன் மையத்தில், விண்ணப்பதாரர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது. கலெக்டர் ராஜாராமன் அங்கு ஆய்வு செய்தார். 

ஆய்வுக்கு பின், ஆன்லைன் மூலம் டி.என்.பி.எஸ்.சி.,க்கு விண்ணப்பிக்க மாவட்ட அளவில் இந்தியன் வங்கி கிளைகள், தபால் நிலையங்கள் என 13 மையங்கள் செயல்படுகிறது. இந்த மையங்கள் மூலம் விண்ணப்பிக்க வரும் பட்டதாரிகளிடம் 50 ரூபாய் பதிவு கட்டணம் செலுத்தி, பதிவு செய்யலாம். அதற்கு பின் 5 ஆண்டுகளுக்கு விண்ணப்பிக்கலாம். அதற்கு கட்டணம் இல்லை. ஆன் லைன் மையங்களில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக வாங்க கூடாது. கூடுதல் கட்டணம் வசூலிக்கும் மையங்கள் மீதும், அதை நடத்துவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.



No comments:

Post a Comment