Tuesday, January 31, 2012

பழைய அறிவிப்பு :





அ.தி.மு.க., ஆட்சி வந்ததில் இருந்து, புதிய ஆசிரியர் நியமன அறிவிப்புகள், திரும்பத் திரும்ப வந்து கொண்டிருக்கின்றன. நேற்றைய கவர்னர் உரையிலும், ஆசிரியர் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆனால், நியமனப் பணிகள் தான், இதுவரை துவங்கவில்லை.

பழைய அறிவிப்பு : ஆட்சி அமைந்த ஆறே மாதங்களில், 55 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை அறிவித்து, ஆசிரியர் படிப்பிற்கு படித்தவர்களை, அ.தி.மு.க., அரசு, மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி வருகிறது. மாதத்திற்கு இரண்டு முறையாவது, ஆசிரியர் நியமன அறிவிப்புகள் வந்து விடுகின்றன. சட்டசபையில், நேற்றைய கவர்னர் உரையிலும், "நடப்பு கல்வியாண்டில், 33 ஆயிரத்து, 681 ஆசிரியர் பணியிடங்களும், 16 ஆயிரத்து, 549 பகுதி நேர ஆசிரியர் பணியிடங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 5,000 ஆசிரியர் அல்லாத பணியிடங்களும் அனுமதிக்கப்பட்டுள்ளன' என, ஏற்கனவே வெளியான ஆசிரியர் நியமன அறிவிப்பு, திரும்பவும் வெளியாகியுள்ளது.

நியமனப் பணிகள் இல்லை : இன்னும் ஐந்து மாதங்களில், நடப்பு கல்வியாண்டு முடியப் போகிறது. அறிவிப்புகள் மட்டும் திரும்பத் திரும்ப வந்து கொண்டிருக்கிறதே தவிர, பணியிடங்களை நிரப்புவதற்கு இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 
முந்தைய ஆட்சி அறிவித்த பணியிடங்கள் தான், இதுவரை நியமனம் செய்யப்பட்டு வருகின்றன.பகுதி நேர ஆசிரியர் நியமன விவகாரத்தில், ஆளுங்கட்சியினரின் தலையீடுகள் காரணமாக, 16 ஆயிரத்து, 549 ஆசிரியர்களை எப்படி தேர்வு செய்யப் போகிறோம் எனத் தெரியாமல், அதிகாரிகள் முழித்துக் கொண்டிருக்கின்றனர். 2,682 முதுகலை ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வு அறிவிப்பு, விரைவில் வெளியாக உள்ளது.
இடைநிலை ஆசிரியரை பொறுத்தவரை, தகுதித் தேர்வை நடத்திய பிறகே, நியமனம் செய்ய வேண்டும் என, வழக்கு தொடர்ந்துள்ளதால், அப்படியே உள்ளது. 14 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்வதில், முதலில் ஆசிரியர் தகுதித் தேர்வா அல்லது போட்டித் தேர்வா என்பது, இன்னும் முடிவு செய்யாமல் இழுபறியாகவே உள்ளது.

இவராவது தீர்ப்பாரா? : சி.வி.சண்முகம் அமைச்சராக இருந்தபோதும், ஆசிரியர் நியமனக் கொள்கையில் முடிவு எடுக்கப்படவில்லை. எட்டு நாள் அமைச்சராக இருந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி, துறையைப் பற்றி அறிந்து கொள்வதற்கு முன், பதவியில் இருந்து நீக்கப்பட்டார். மூன்றாவது அமைச்சராக வந்துள்ள சிவபதியாவது, ஆசிரியர் நியமனத்தில் உள்ள பிரச்னையை தீர்ப்பாரா அல்லது ஆறப் போடுவாரா எனத் தெரியவில்லை.
புதிய அறிவிப்புகள் வெளியிடாதது ஏன்? : கவர்னர் உரையில், பள்ளிக் கல்வித் துறைக்கு எந்தவிதமான புதிய அறிவிப்புகளும் வெளியிடப்படவில்லை. நடப்பு ஆண்டுக்கான மானியக் கோரிக்கையில் வெளியிடப்பட்ட பல அறிவிப்புகள், இன்னும் நிறைவேற்றப்படாத நிலையில் இருக்கின்றன. மாவட்ட நூலகங்களில், 1,353 நூலகர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என, அறிவிக்கப்பட்டது; இதில், 260 பணியிடங்கள், பதவி உயர்வு மூலம், சமீபத்தில் நிரப்பப்பட்டது. ஆனால், 1,093 ஊர்ப்புற நூலகர்கள், (புதிய பணியிடம்) இன்னும் நியமிக்கப்படவில்லை.
* அனைவருக்கும் இடைநிலைக்கல்வித் திட்டத்தின் கீழ், அரசு உயர்நிலைப்பள்ளிகளில், 344 இளநிலை உதவியாளர்கள், 544 ஆய்வக உதவியாளர்கள் நியமிக்கப்படுவர் என, அறிவிக்கப்பட்டது. இதற்கு, அரசாணை வெளியானதுடன் சரி; மேற்கொண்டு எந்தப் பணிகளும் நடக்கவில்லை. இதேபோல், பல திட்டங்கள் நிலுவையில் இருப்பதால் தான், புதிய அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை எனக் கூறப்படுகிறது.

அடுத்த வாரத்திற்குள் நடவடிக்கை?பள்ளிக் கல்வித் துறைச் செயலர் சபீதா கூறும்போது, ""ஏற்கனவே அரசு அறிவித்த அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த, நடவடிக்கை எடுத்து வருகிறோம். பட்டதாரி ஆசிரியர் நியமனத்தை பொறுத்தவரை, முதலில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்துவது குறித்து, அமைச்சருடன் ஆலோசித்து, அடுத்த வாரத்திற்குள் அறிவிப்பு வெளியிடப்படும்,'' 

Friday, January 27, 2012

எஸ்.எஸ்.ஏ. ஆசிரியர்கள் நியமனத்தில் தாமதம்

சென்னை, ஜன. 25: அனைவருக்கும் கல்வி திட்டத்தின் (எஸ்.எஸ்.ஏ.) கீழ் 16 ஆயிரம் ஆசிரியர்களை நியமிப்பதில் தாமதம் நிலவி வருகிறது. வேலைவாய்ப்பக பதிவு மூப்பு அடிப்படையில் இல்லாமல் வேறு முறையில் ஆசிரியர்களை நியமிக்க முயற்சிகள் நடப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
மத்திய அரசு சார்பில் தமிழகத்தில் அனைவருக்கும் கல்வித் திட்டம் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பல்வேறு பாடங்களுக்கு ஆசிரியர்களை நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 16 
 ஆயிரம் ஆசிரியர்களை மாதத்துக்கு ரூ.5 ஆயிரம் என்ற ஊதிய அடிப்படையில் நியமிக்க அரசு முடிவு செய்து அதற்கான அரசாணையையும் வெளியிட்டுள்ளது.


வேலைவாய்ப்பகப் பதிவு மூப்பு: ஆசிரியர்கள் நியமனத்தில் வேலைவாய்ப்பகப் பதிவு மூப்பு முறை பின்பற்றப்பட வேண்டும் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இந்த அரசாணையைக் கடுமையான முறையில் பின்பற்ற அதிகாரிகளுக்கு அரசின் சார்பில் வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால், கடந்த சில நாள்களுக்கு முன்பு அந்த வாய்மொழி உத்தரவில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகப் புகார்கள் கூறப்படுகின்றன.
""16 ஆயிரம் ஆசிரியர்களை நியமிப்பதற்கான உத்தரவை ஜனவரி 25-ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு அளித்து அவர்கள் 30-ம் தேதிக்குள் பணியில் சேரும்படி அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி தலைமையில் தீவிரமாகப் பணிகள் நடந்தன. வேலைவாய்ப்பகப் பதிவு மூப்பு அடிப்படையில் பட்டியல் பெறப்பட்டு ஆசிரியர்கள் தேர்வு நடந்தது. அந்தப் பணிகள் முற்றிலும் முடிக்கப்பட்ட நிலையில், பட்டியல் இதுவரை வெளியிடப்படவில்லை. இதற்கான காரணமும் தெரியவில்லை'' என மதுரையைச் சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத பட்டதாரி ஒருவர் தெரிவித்தார்.


காரணம் என்ன? ஆசிரியர்களை நியமிப்பதற்கான அறிவிப்பும், விண்ணப்பமும் பத்திரிகைகளில் வெளியிடப்பட்டன. ஒவ்வொரு மாவட்டத்திலும் 500 முதல் 600 பணியிடங்களுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் செய்திருந்தனர்.
அவர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டு வேலைவாய்ப்பக பதிவு மூப்பு அடிப்படையில் அவர்களுக்கு பணி உத்தரவு வழங்கும் பொறுப்பு மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளிடம் வழங்கப்பட்டிருந்தது.
ஆனால், இப்போது அனைத்து மாவட்டங்களின் பட்டியல்களும் சென்னையில் உள்ள பள்ளிக் கல்வி இயக்ககத்திடம் வர வேண்டும் எனவும், அங்கு பட்டியல் இறுதி செய்யப்பட்ட பிறகே வேலைக்கான உத்தரவு அளிக்கப்படும் எனவும் அரசின் சார்பில் வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதுகுறித்து, பள்ளிக் கல்வித் துறை வட்டாரங்களிடம் கேட்டபோது, ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு அதற்கான பட்டியல் தயாராக உள்ளது. அரசு ஒப்புதல் அளித்தவுடன் உடனடியாக அவை வெளியிடப்படும் எனத் தெரிவித்தன.

Wednesday, January 25, 2012

school time


கோவை:நடப்புக் கல்வியாண்டில், தமிழகம் முழுவதும் சமச்சீர் கல்வி முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இக்கல்வித் திட்டத்தை அறிமுகம் செய்வதில், ஏற்பட்ட இரண்டு மாத கால தாமதத்தை தவிர்க்க, அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு, வகுப்பு நேரம் மாலையில் நீட்டிக்கப்பட்டது. துவக்கப் பள்ளிகளிலும், இதே திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

சாதாரண நாட்களில், மாலை 4.10 மணிக்கு முடியும் பள்ளிகள், இப்புதிய திட்டத்தால், 4.40 மணி வரை நடத்தப்பட்டன. மாணவர்களின் பாதுகாப்பு குறித்து கவலைப்படாமல் அமல்படுத்தப்பட்ட இந்த உத்தரவால், கிராமப்புற பள்ளி மாணவர்கள், மாலை வேளைகளில் பஸ் கிடைக்காமல் அவதிப்பட்டனர். மலையோர மாவட்டங்களில் உள்ள, பள்ளி மாணவர்கள் மாலை 6.00 மணிக்குப் பின், இருட்டில் வீடு சென்று சேரும் அவல நிலை ஏற்பட்டது.

இத்திட்டத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என, பெற்றோர், ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகளும் குரல் எழுப்பினர். 
 மதிய உணவு இடைவேளையில், 1.30 மணி முதல் 2.00 மணி வரை வகுப்பு நடத்த, அனைத்து உதவிக் கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 

Monday, January 23, 2012

thottakalai aasiriyar?


புதூர்: மாதம் ஐந்தாயிரம் ரூபாய் சம்பளத்திற்கு தோட்டக்கலை ஆசிரியர் பிரிவு வேலை வாய்ப்பில் விவசாயத்தை பாடமாக எடுத்து படித்தவர்களின் விண்ணப்பங்கள் மாநிலம் முழுவதும் புறக்கணிக்கப்பட்டு வருகின்றன. தோட்டக்கலை மற்றும் தானிய வகைகளை சேர்த்து படித்த விவசாய பாட பிரிவுக்கு ஒரு வாய்ப்பு அளிக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழகத்தில் மாதம் 5 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் அரசு பள்ளிகளில் பகுதி நேரமாக ஓவியம், தொழிற்கல்வி, உடற்கல்வி ஆசிரியர்கள் 16 ஆயிரத்து 500 பேரை நியமிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

இதற்கான பட்டியல் அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் கோரப்பட்டுள்ளது. இப்பட்டியலை தயார் செய்யும் பணியில் வேலை வாய்ப்பு அலுவலகங்கள் ஈடுபட்டு வருகின்றன. இதற்கிடையில் பகுதி நேர ஆசிரியர்களில் முதல் நான்கு பிரிவுகளுக்கு மட்டுமே விண்ணப்பங்கள் பெறப்பட்டது. தற்போது கூடுதலாக தோட்டக்கலை, கம்ப்யூட்டர், இசை ஆசிரியர் பிரிவுகளுக்கும் விண்ணப்பங்கள் தகுதியானவர்களிடமிருந்து அந்தந்த வட்டார வளமைய அலுவலர்கள் மூலம் பெற உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு வருகின்றனர்.
 இதில் தோட்டக்கலை பகுதி நேர ஆசிரியர் பிரிவுக்கு கடந்த 1987ம் ஆண்டு வரை விவசாயத்தை பாடமாக படித்தவர்களின் விண்ணப்பங்கள் மாநிலம் முழுவதும் புறக்கணிக்கப்பட்டு வருகின்றன. தோட்டக்கலையை படித்த சான்று இருந்தால் மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்கப்படுகின்றன. 1987க்கு பின் தான் தோட்டக்கலை பாடமாக அமல்படுத்தப்பட்டது. அதற்கு முன் வரை விவசாயப் பாடத்தை படித்து சான்று பெற்றவர்கள் ஆயிரக்கணக்கானோர் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது.தோட்டக்கலை பாடப்பிரிவில் காய்கறிகள், பழங்கள், மூலிகைக் கீரைகள், அழகு செடிகள், பூக்களை பற்றி படிக்கின்றனர். ஆனால் விவசாய பாடப்பிரிவில் கோதுமை, அரிசி, கேழ்வரகு உட்பட்ட அனைத்து தானிய வகைகளும், தோட்டக்கலையில் காய்கறிகள், பழங்கள், மூலிகைக் கீரைகள், அழகு செடிகள், பூக்கள் ஆகியவைகளை சேர்த்தே விவசாயப் பாடமாக படித்தனர். இதற்கு ஆசிரியர் தொழில்நுட்ப சான்று படிப்பு என்று பெயரிடப்பட்டது.
 இப்பயிற்சி தொழில்நுட்பதேர்வு இயக்குனரால் அங்கீகரிக்கப்பட்டது. இதுகுறித்து விவசாயத்தை பாடமாக படித்தவர்கள் கூறியதாவது
 மாநில அளவில் தேர்வானவர்களை கொண்டு ஒவ்வொரு ஆண்டும் ஒரு மாவட்டத்தை மையமாக கொண்டு தச்சு, ஓவியம், இசை, விவசாயம் ஆகிய சான்று படிப்புக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. கோடை விடுமுறையின் போது 45 நாட்களுக்கு சிறந்த ஆசிரியர்களால் வகுப்பு எடுத்தனர். படிப்பு முடித்தவர்களுக்கு ஆசிரியர் தொழில்நுட்ப சான்றை சென்னை நுங்கம்பாக்கம், தொழில்நுட்ப தேர்வு இயக்குனர் மூலம் வழங்கப்பட்டது. இது தெரியாத இப்போதைய அதிகாரிகள் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் அரசின் (ஜி.ஓ.171 தோட்டக்கலை) உத்தரவை காண்பித்து விவசாயத்தை பாடமாக படித்தவர்கள் அவமானப்படுத்தப்பட்டு வருகின்றனர்.1987ம் ஆண்டுக்கு பின் விவசாய சான்றுக்கு பதிலாக தோட்டக்கலை என்று பெயர் மாற்றப்பட்டது.
1987ம் ஆண்டுக்கு முன் வரை விவசாயத்தை பாடமாக எடுத்து படித்தவர்கள் நிறையபேர் வேலையின்றி 40 வயதை நெருங்கிக் கொண்டிருக்கின்றனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் 20 தோட்டக்கலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் தலையிட்டு விவசாயத்தை பாடமாக படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும். எங்களை புறக்கணித்தால் யாரும் வேலை தரமாட்டார்கள். இவ்வாறு பாதிக்கப்பட்ட விவசாய பாட இருபால் ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.

thiruvalore part time teachers seniority list



திருவள்ளூர், ஜன.22: ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பாசிரியர் (உடற்கல்வி, ஓவியம், தையல்) பணியிடங்களுக்கு, திருவள்ளூர் மாவட்டத்தில் பதிவு மூப்பு அடிப்படையில் பரிந்துரை செய்யப்பட்டவர்களின் பட்டியல் இளையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
சிறப்பாசிரியர் (உடற்கல்வி, ஓவியம், தையல்) காலிப் பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் தொழில் நுட்ப ஆசிரியர் சான்றிதழ் பயிற்சி முடித்து பதிவு செய்துள்ள பதிவு தார்களின் பெயர்கள் பதிவு மூப்பு அடிப்படையில் பரிந்துரை செய்யப்பட்ட பட்டியல் மற்றும் விவரங்கள்http:www.tiruvallur.tn.nic.in  என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
மேற்காணும் தகுதியுடைய பதிவுதாரர்கள் தங்களது பதிவு விவரத்தில் ஏதேனும் விடுபட்டு இருந்தாலோ, குறைகள் இருந்தாலோ வரும் 25.1.2012-க்குள் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலரை அனைத்து அசல் கல்விச் சான்றிதழ்களுடன் நேரில் அணுகி விளக்கம் கேட்டுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஆசிஷ் சாட்டர்ஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

1,267 teachers



சென்னை, ஜன. 22: தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப் பள்ளிகளுக்காக இந்தக் கல்வி ஆண்டிலேயே 1,267 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை கூடுதலாக தோற்றுவிக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
 பள்ளிகளுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்காக ரூ.36 கோடியே 17 லட்சத்தை ஒதுக்கியும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
 இதுதொடர்பாக, தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்தி:
 2009-10 ஆம் ஆண்டில் தரம் உயர்த்தப்பட்ட 831 நடுநிலைப் பள்ளிகளுக்கு தலா ஒரு பட்டதாரி ஆசிரியர் வீதம் 831 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும், 2010-11 ஆம் ஆண்டில் தரம் உயர்த்தப்பட்ட 218 நடுநிலைப் பள்ளிகளுக்கு தலா 2 பட்டதாரி ஆசிரியர் வீதம் 436 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.
 இந்த 1,267 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களையும் இந்தக் கல்வி ஆண்டிலேயே (2011-12) தோற்றுவிக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
 பள்ளி மாணவ, மாணவியருக்கு கல்வி கற்க ஏற்றவகையில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
 அரசு உயர் நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்குத் தேவையான சாய்வு மேஜை, இருக்கை, மேஜை, நாற்காலி ஆகிய வசதிகளை ஏற்படுத்த ரூ.36 கோடியே 17 லட்சத்தை ஒதுக்கீடு செய்து முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 25 ஆயிரம் ஆசிரியர்கள்: தமிழக அரசின் இந்த அறிவிப்பையடுத்து, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் இந்த ஆண்டு தேர்வு செய்யப்படும் ஆசிரியர்களின் எண்ணிக்கை 25,284 ஆக அதிகரித்துள்ளது. இதில் பட்டதாரி ஆசிரியர்கள் மட்டும் 16,028 பேர் என்பது குறிப்பிடத்தக்கது.
 ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் இந்த ஆண்டுக்கான ஆசிரியர்களை நியமிக்கும் பணிகள் பிப்ரவரி மாதம் தொடங்க உள்ளன. ஆசிரியர் தகுதித் தேர்வு, போட்டித் தேர்வுகள் ஆகியவை நடத்தப்பட்டு, ஜூன் மாதத்துக்குள் ஆசிரியர்கள் தேர்வுசெய்யப்பட உள்ளனர்.
 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் ஆகியோர் எழுத்துத் தேர்வு மூலம் நியமனம் செய்யப்படுவார்கள். ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெறும் பட்டதாரி ஆசிரியர்கள் மட்டுமே எழுத்துத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர்.
 உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை, இடைநிலை ஆசிரியர்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பின் அடிப்படையில் நியமனம் செய்யப்படுவர். 16 ஆயிரத்துக்கும் அதிகமான பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கும் பணி மாவட்ட அளவில் இப்போது நடைபெற்று வருகிறது.
 

Thursday, January 19, 2012

பள்ளிகளில் ஆசிரியர் நியமனம்


சென்னை, ஜன.19:
இடைநிலை ஆசிரியர்களுக்கு நடத்திய சான்று சரிபார்ப்பு கிடப்பில் உள்ள நிலையில், நிலுவையில் இருந்த பட்டதாரிகளுக்கு பணி நியமன உத்தரவுகளை தபாலில் அனுப்பும் பணியை தொடக்க கல்வித் துறை தொடங்கியுள்ளது.
தொடக்கப் பள்ளிகளில் (2010&2011 ஆண்டுக்கான) காலியாக உள்ள இடங்களில் இடைநிலை ஆசிரியர்களை பதிவு மூப்பு அடிப்படையில் நியமிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்திருந்தது. இதற்காக அந்தந்த மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களில் இருந்து பட்டியல் பெறப்பட்டது. இதற்கான சான்று சரிபார்ப்பு கடந்த டிசம்பர் 3, 4ம் தேதி அந்தந்த மாவட்டங்களில் நடந்தது.
மூலச் சான்றிதழ்களில் ஏதேனும் ஒன்றை சான்று சரிபார்ப்பு நாளில் ஒப்படைக்கவில்லை என்றால் அவர்கள் தகுதியற்றவர்களாக கருதப்படுவார்கள். எக்காரணம் கொண்டும் மீண்டும் ஒரு முறை வாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது என்று ஆசிரியர் தேர்வு வாரியம் கண்டிப்புடன் தெரிவித்து இருந்தது. இதன்படி மேற்கண்ட தேதிகளில் சான்று சரிபார்ப்பு நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், புதியதாக ஆசிரியர் பட்டயப் படிப்பு முடித்த சில மாணவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதில் பதிவு மூப்பு அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்களை தேர்வு செய்யக் கூடாது என்றும், போட்டித் தேர்வு நடத்தியே பணி நியமனம் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். இதனால் பணி நிறுத்தப்பட்டது. அதில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான இடைநிலை பட்டயம் முடித்தவர்களுக்கு எப்போது பணி கிடைக்கும் என்று தெரியவில்லை.
கடந்த திமுக ஆட்சியில் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 2010& 2011ம் கல்வி ஆண்டில் ஏற்பட்ட காலி பணியிடங்களில் 5056 பட்டதாரி களை பணி நியமனம் செய்தனர். அதில் பள்ளிக் கல்வி, தொடக்ககல்வி, ஆதிதிராவிடர் நலத்துறை ஆகியவற்றில் பணி நியமனம் செய்தனர். தேர்தல் காரணமாக தொடக்க கல்வித் துறைக்கான பணி நியமனம் நிறுத்தி வைக்கப்பட்டது. இறுதியாக 1155 பட்டதாரிகள் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டனர். அவர்களில் தகுதியானவர்களின் பட்டி யலை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த வாரம் தொடக்க கல்வி துறைக்கு அனுப்பி வைத்தது.
அதில் இடம் பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் பணியை தொடக்க கல்வித் துறை தொடங்கியுள்ளது. இடையில் பொங்கல் விடுமுறை என்பதால் அந்த பணி நின்றது. இன்று அல்லது நாளை பணி நியமன உத்தரவுகள் கிடைக்கும். தபால் மூலம் பணி நியமன ஆணைகளை அனுப்பி வைக்கின்றனர்.

பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம்

சென்னை: தொடக்க கல்வித் துறைக்கு ஒதுக்கீடு பெற்ற 1,155 பட்டதாரி ஆசிரியர்களை, நீண்ட இழுபறிக்குப் பின் பணி நியமனம் செய்து, அதற்கான கடிதங்களை தபால் மூலம் தொடக்க கல்வித் துறை அனுப்பியுள்ளது. மாநில பதிவு மூப்பு அடிப்படையில், தொடக்க கல்வித் துறைக்குத் தேர்வாகி, ஆறு மாதங்களுக்கும் மேலாக பணி நியமன உத்தரவு கிடைக்காமல், 1,155 பட்டதாரி ஆசிரியர்கள் அவதிப்பட்டு வந்தனர். இழுபறிக்குப் பின், அனைவரையும் பணி நியமனம் செய்து, அதற்கான உத்தரவு கடிதங்களை, 14ம் தேதி, தபால் மூலம் தொடக்க கல்வித் துறை அனுப்பியுள்ளது. பொங்கல் விடுமுறை காரணமாக, பல மாவட்டங்களில், பணி நியமன உத்தரவு கடிதங்கள் கிடைக்கவில்லை. தாவரவியல் ஆசிரியர்களுக்கு மட்டுமே உத்தரவு கடிதங்கள் கிடைத்துள்ளன. இதர பாட ஆசிரியர்களுக்கு இன்னும் உத்தரவு கடிதங்கள் கிடைக்கவில்லை. "இந்த வார இறுதிக்குள், அனைவருக்கும் உத்தரவு கடிதங்கள் கிடைத்து விடும்' என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.


வேலூர்  பதிவு மூப்பு பட்டியல்

வேலூர், ஜன. 18-

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்ட சிறப்பு ஆசிரியர்கள் பணியிடத்துக்கு வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு மூப்பு பட்டியல் இன்று (புதன்கிழமை) வெளியிடப்படுகிறது என்று மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் அருணகிரி கூறினார்.

இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் அருணகிரி கூறியதாவது:-

சிறப்பு ஆசிரியர்கள்

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்ட ஓவியம், தையல், உடற்கல்வி ஆகிய சிறப்பு ஆசிரியர்கள் பணியிடத்துக்கு வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பதிவு மூப்பு அடிப்படையில் மனுதாரர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

உடற்கல்வி ஆசிரியருக்கு எஸ்.எஸ்.எல்.சி. அல்லது எச்.எஸ்.சி., மற்றும் பி.பி.எட், பி.பி.இ.எஸ்., பி.எம்.எஸ். அரசு ஆசிரியர் சான்றிதழ் (இளநிலை மற்றும் முதுநிலை) ஆகிய கல்வி தகுதியும், ஓவிய ஆசிரியருக்கு எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் டி.டி.சி.யும், தையல் பயிற்சிக்கு எஸ்.எஸ்.எல்.சி., டி.டி.சி. ஆகிய கல்வி தகுதியும் இருக்க வேண்டும். பதிவு மூப்பு உத்தேச பதிவு மூப்பு நாளில் இருந்து இன்றைய தேதி வரையும், வயது வரம்பு 57 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.

இன்று ஒட்டப்படுகிறது

45 தையல் ஆசிரியர்கள், 375 உடற்கல்வி ஆசிரியர்கள், 236 ஓவிய ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு பதிவு மூப்பு பட்டியல் வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உள்ள அறிவிப்பு பலகையில் இன்று (புதன்கிழமை) ஒட்டப்படும்.
தகுதி உடைய நபர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வந்து பரிந்துரை செய்யப்பட உள்ளதை உறுதி செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

பணி நியமனத்தில் கட்டுப்பாடு: குழப்பத்தில் ஆசிரியர்கள்


விருதுநகர்: புதிய ஆசிரியர்கள் நியமனத்தில், ஆசிரியர் தகுதிதேர்வு கட்டுப்பாடு பற்றி குறிப்பிடாததால் ஆசிரியர்கள் குழப்பத்தில் 
உள்ளனர். மத்திய அரசின் கல்வி உரிமைச்சட்டத்தின் படி ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டவர்கள், ஆசிரியருக்கான தகுதி தேர்வு எழுதி, ஐந்து ஆண்டுகளுக்குள் தேர்வானவர்களாக இருக்க வேண்டும், என ,தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி கடந்த மூன்று மாதங்களுக்கு முன் புதிய ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆசிரியர்கள் சங்கத்தினர்,"ஆசிரியர் தகுதி தேர்வு என்பது தேவையில்லாததது,' என்றனர்.


பல ஆசிரியர்களுக்கு ,வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு நடத்தி, பணி நியமனம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் , கடந்த ஒரு மாதமாக வழங்கப்படும் ஆசிரியர் நியமன உத்தரவில், தகுதி தேர்வு பற்றி குறிப்பிடாமல் பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டு வருகின்றன. புதிய ஆசிரியர்கள் நியமனத்தில், இந்த கட்டுப்பாடு நீக்கம் செய்யப்பட்டுள்ளதால், ஆசிரியர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்க அரசும், பள்ளிக்கல்வித்துறையும் தெளிவான 
முடிவினை அறிவிக்க வேண்டும்.

தரம் உயர்வு பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை

விருதுநகர்: தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறையால், மாற்றுப்பணியில் செல்லும் ஆசிரியர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்கம் சார்பில் ,710 நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன. இந்த பள்ளிகளில், இந்த கல்வியாண்டு முதல் மாணவர்கள் சேர்க்கை நடத்த, பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. வெளியிடங்களில் படிக்கும் மாணவர்கள், தரம் உயர்த்தப்பட்ட பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.


நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் ,பதவி உயர்வில் உயர்நிலைப்பள்ளிகளில் பணி நியமனம் செய்யப்பட்டனர். இதனால் போதுமான ஆசிரியர்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில், தமிழ், ஆங்கிலம்,கணிதம், அறிவியல், சமூக அறிவியல், தலைமையாசிரியர் உட்பட ஆறு ஆசிரியர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நடுநிலைப்பள்ளிகளில் இருந்த பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டாலும் ,போதுமான ஆசிரியர் இல்லாத நிலை உள்ளது. அருகில் உள்ள பள்ளி ஆசிரியர்களை, மாற்றுப்பணியில் வாரத்தில் 2 முதல் 3 நாட்கள் வரை பாடம் எடுக்க பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. மாணவர்களோ முழுமையாக ஆசியர்கள் இல்லாத நிலையில் பாதிக்கின்றனர். புதிய ஆசிரியர்களை விரைவில் நியமிக்க அரசு முன் வர வேண்டும்.




4 comments:

  1. AnonymousJan 21, 2012 07:06 AM
    இன்று உண்ணாவிரதம் வெற்றிகரமாக நடைபெற்றது இதில் சுமார் 2000 பட்டதாரி ஆசிரியர் கலந்துகொண்டனர் ரத்தினகுமார் அவர்களுக்கு கோடி நன்றி
  2. AnonymousJan 21, 2012 08:41 PM
    http://1.bp.blogspot.com/-C3BlSQ9rWvs/TxuAF0Hx9pI/AAAAAAAAAfQ/JuVhKT3HZHk/s1600/radna+meeting.jpg
    pls click above link.
  3. AnonymousJan 22, 2012 04:23 AM
    http://2.bp.blogspot.com/-yCH9Xp1nTtM/Txv4TjBzcoI/AAAAAAAAAfg/GkWJHXwhI7o/s1600/vaigo.jpg pls. click above link vaiko speach support to seniority.
  4. AnonymousJan 22, 2012 08:22 AM
    கடந்த 2001-2006 ல் தமிழக அரசால் அறிமுகம் செய்யப்பட்ட TRB examல் குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் ஆசிரியர் பணியில் சேர்ந்தார்கள் அதிக மதிப்பெண் எடுத்தவர்கள் வேலே இல்லாமல் நடுத்தெருவில் நின்றார்கள் இது பின்னர் மதுரை உயர்நீதி மன்ற மூலம் இந்த முறைகேடு வெளிவந்தது(W.A(M.D)no of 821 of 2008) கடந்த 2010 ஒரு போட்டித்தேர்விற்கு மூன்று முடிவுகள் வெளியிடப்பட்டது இந்த நிகழ்ச்சியும் உயர்நீதி மன்றம் மூலம் வெளி கொணரபட்டது இதன் பின்பும் தேர்வு தான் வேண்டும் என்று அடம்பிடிப்பவர்களிடம் பணம் இருக்கும் தைரியத்தில் தான் பேசுகிறார்கள் போல சந்தேகம் வருகிறது

Friday, January 13, 2012

31-ந்தேதிக்குள் பணி நியமன ஆணை


சென்னை, ஜன.13-

அரசு பள்ளிக்கூடங்களில் புதிதாக நியமிக்கப்பட உள்ள 16,549 பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களுக்கு 31-ந் தேதிக்குள் பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என்று அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனர் முகமது அஸ்லாம் உத்தரவிட்டுள்ளார். பணிநியமன ஆணை பெற்ற சிறப்பு ஆசிரியர்கள் பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் வேலையில் சேர வேண்டும்.

தமிழகம் முழுவதும் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் (எஸ்.எஸ்.ஏ.) கீழ் அரசு பள்ளிக்கூடங்களில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்காக 16,549 பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். தையல், ஓவியம், இசை, உடற்கல்வி, கம்ப்ïட்டர் உள்பட பல்வேறு பாடங்களைச் சேர்ந்த இந்த ஆசிரியர்கள் வாரத்தில் 3 நாட்கள் (தினசரி 3 மணி நேரம்) பணியாற்ற வேண்டும். அவர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் தொகுப்பூதியம் வழங்கப்படும்.

போதிய எண்ணிக்கையில் ஆசிரியர்கள் கிடைக்காத பட்சத்தில் அவர்களுக்கு அதிகபட்சம் 4 பள்ளிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கு ஏற்ப கூடுதல் சம்பளம் வழங்கவும் அரசு முன்வந்துள்ளது. இதன்படி, ஒரு ஆசிரியர் 2 பள்ளிக்கூடங்களில் வேலை பார்க்க நேரிட்டால் அவருக்கு ரூ.10 ஆயிரம் சம்பளம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறப்பு ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணி தமிழகம் முழுவதும் மும்முரமாக நடந்து வருகிறது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி (பொது), கூடுதல் முதன்மை கல்வி அதிகாரி (எஸ்.எஸ்.ஏ.), மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரி, சம்பந்தப்பட்ட பாடத்தில் மூத்த ஆசிரியர் ஆகியோர் அடங்கி தேர்வுக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவினர் தகுதியுள்ள நபர்களிடம் விண்ணப்பங்களைப் பெற்று நேர்முகத்தேர்வுகளை நடத்தி வருகிறார்கள்.


விண்ணப்பித்த அனைவருக்குமே சான்றிதழ் சரிபார்ப்புக்கான அழைப்புக்கடிதங்கள் அனுப்பப்பட்டாலும் தொழிற்நுட்ப ஆசிரியர் பயிற்சி (டி.டி.சி.) முடிக்காதவர்கள் சரிபார்ப்பின்போது நிராகரிக்கப்பட்டனர். தேர்வுமுறை மாவட்டத்திற்கு மாவட்டம் வித்தியாசமாக இருந்தாலும், பெரும்பாலான மாவட்டங்களில் மாணவ-மாணவிகளின் கூடுதல் கல்வித்தகுதி, பணி அனுபவம், வேலைவாய்ப்பு பதிவுமூப்பு, இதர திறமைகள் போன்ற விவரங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு, ஒவ்வொன்றுக்கும் தனித்தனி மதிப்பெண் வழங்கப்பட்டது.

பணிஅனுபவ சான்றிதழ்

பணி அனுபவ விவரங்கள் கேட்கப்பட்டிருந்ததால் ஏராளமான மாணவ-மாணவிகள் தாங்கள் பாடம் சொல்லிக்கொடுத்த பள்ளியிடம் இருந்து அனுபவச் சான்று வாங்கி வந்திருந்தனர். எனினும் மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் அல்லது உதவி தொடக்கக்கல்வி அதிகாரி அல்லது மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரியிடம் சான்றொப்பம் (கவுண்டர்-சைன்) பெற்றுவராத பணி அனுபவச் சான்றுகளை தேர்வுக்குழுவினர் ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்த நிலையில், பகுதி நேர சிறப்பு ஆசிரியர் பதவிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு இந்த மாத இறுதிக்குள் வேலைக்கான உத்தரவு வழங்க வேண்டும் என்றும், உத்தரவு பெற்ற ஆசிரியர்கள் அடுத்த மாதம் (பிப்ரவரி) முதல் வாரத்தில் பணியில் சேர்ந்துவிட வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அனைவருக்கும் கல்வி திட்டத்தின் மாநில திட்ட இயக்குனர் ஏ.முகமது அஸ்லாம் `தினத்தந்தி' நிருபரிடம் நேற்று கூறியதாவது:-

சீனியாரிட்டி அடிப்படையிலா?

எஸ்.எஸ்.ஏ. திட்டத்தின் கீழ் அரசு பள்ளிக்கூடங்களுக்கு 16,549 பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணி அனைத்து மாவட்டங்களிலும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. ஆசிரியர்களை எந்த முறையில் தேர்வு செய்ய வேண்டும்? என்பது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு ஏற்கனவே வழிகாட்டி நெறிமுறைகள் அனுப்பப்பட்டன. அதன் அடிப்படையில் சிறப்பு ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இதற்கு பதிவுமூப்பு (சீனியாரிட்டி) மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது. முன்கூட்டியே முடித்தவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். அவர்களின் கல்வித்தகுதி என்ன? மாணவர்களுக்கு எப்படி பாடம் எடுப்பார்கள்? என்னென்ன இதர திறமைகள் உள்ளன? போன்றவை எல்லாம் கணக்கில் கொள்ளப்படும்.

31-ந் தேதிக்குள் நியமன ஆணை

எவ்வித புகாருக்கும் இடம் தராத வகையில் ஆசிரியர்களை தேர்வு செய்ய வேண்டும் என்று மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. எந்த மாவட்டத்திலாவது புகார்கள் வந்தால் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு உள்ளிட்ட தேர்வு பணிகளை 15-ந் தேதிக்குள் முடித்துவிட்டு தகுதியான நபர்களை தேர்வு செய்து அவர்களுக்கு வருகிற 31-ந் தேதிக்குள் பணிநியமன ஆணை அனுப்பப்பட்டுவிட வேண்டும் என்று ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி முதல் வாரத்தில் வேலை
பகுதி நேர சிறப்பு ஆசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவோர் பிப்ரவரி முதல் வாரத்தில் பணியில் சேர்ந்துவிட வேண்டும். ஒரு ஆசிரியர் இரண்டு பள்ளிக்கூடங்களில் பணியாற்றும் சூழ்நிலை ஏற்பட்டால் அவருக்கு ஒரு பள்ளிக்கு ரூ.5 ஆயிரம் வீதம் இரண்டு பள்ளிகளுக்கு ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும்.



Sunday, January 8, 2012

பகுதி நேர ஆசிரியர்களுக்கான நேர்காணல்

சென்னை:சென்னை மாவட்டத்திற்கான, பகுதி நேர ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக சான்றிதழ் சரிபார்த்தல் மற்றும் நேர்காணல், வரும் 12ம் தேதி நடைபெறுகிறது.
கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் வெளியிட்ட அறிக்கை:செய்தித்தாள் பார்த்து விண்ணப்பித்தவர்கள் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 2011ம் ஆண்டு நவ., 11 வரை பதிவு செய்த உடற்கல்வி, ஓவியம், இசை, தோட்டக்கலை, கணினி, வாழும் திறன், தகவல் திறன், தையல் ஆகிய பாடங்களில் பகுதி நேர ஆசிரியர் பணிக்கு தகுதியானவர்கள், அழைப்பு கடிதம் பெறப்படாதவர்கள், வரும் 12ம் தேதி, சென்னை எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் நேர்காணலில், உரிய சான்றிதழ்களுடன் கலந்து கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Saturday, January 7, 2012

63 ஆயிரம் பேருக்கு ஆசிரியர் பணி: சண்முகம் பெருமிதம்

விழுப்புரம் : "இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட விளையாட்டுத் துறைக்கு 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்த ஒரே முதல்வர் ஜெ., மட்டுமே' என, கல்வி அமைச்சர் சண்முகம் தெரிவித்தார். விழுப்புரத்தில் நடந்த மாநில அளவிலான 29வது பாரதியார் தின விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்து, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சண்முகம் பேசியதாவது:
மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில், 3 ஆயிரத்து 956 மாணவ, மாணவியர் கலந்து கொள்கின்றனர். ஜெ., முதல்வராக இருந்த போது தான், சென்னையில் உலகத்தரம் வாய்ந்த நேரு உள்விளையாட்டு அரங்கம், நீச்சல் குளம் போன்றவை அமைக்கப்பட்டன. டில்லியில் விளையாட்டு அரங்கம் சரியில்லாததால் பல்வேறு விளையாட்டுகள், தற்போது சென்னையில் நடத்தப்படுகின்றன.

கல்வித் துறையும், விளையாட்டுத் துறையும் ஒன்றோடு ஒன்று இணைந்தவை.


ஆசிரியர்கள், ஆசிரியர் சங்கங்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை இல்லாமலேயே, இந்த ஒரே ஆண்டில் 63 ஆயிரம் ஆசிரியர்களை நியமிக்க, முதல்வர் ஜெ., உத்தரவிட்டுள்ளார். இந்த ஆண்டில் ஏற்பட்ட 11 ஆயிரத்து 549 ஆசிரியர் காலி பணியிடங்கள் முழுவதும் நிரப்படும். 1990ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை நிரப்பப்படாமல் இருந்த, 14 ஆயிரத்து 377 கூடுதல் ஆசிரியர் பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன. கல்வித் துறையில் பல்வேறு பணிகளில், 16 ஆயிரத்து 449 பேர் நியமிக்கப்படுகின்றனர்.

இதுவரை எப்போதும் இல்லாத அளவிற்கு, ஒரே ஆண்டில் 63 ஆயிரம் ஆசிரியர்கள் பணியில் அமர்த்தப்படுவது இதுவே முதல் முறை.

ஆயிரத்து 54 நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. ஆசிரியர்கள் கேட்காமலேயே வாரி வழங்கும் அரசாக ஜெ., அரசு உள்ளது. இந்தியாவிலேயே, மற்ற மாநிலங்களை விட விளையாட்டுத் துறைக்கு, 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்த ஒரே முதல்வர் ஜெ., மட்டுமே.

மாணவர்கள் விளையாட்டில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக, இந்த அரசு, பல கோடி ரூபாய் செலவு செய்து வருகிறது. மாணவர்கள் அரசு திட்டங்களைப் பயன்படுத்தி, உலக அளவில் சிறந்த விளையாட்டு வீரர்களாக விளங்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் சண்முகம் பேசினார்.