Thursday, January 19, 2012

பள்ளிகளில் ஆசிரியர் நியமனம்


சென்னை, ஜன.19:
இடைநிலை ஆசிரியர்களுக்கு நடத்திய சான்று சரிபார்ப்பு கிடப்பில் உள்ள நிலையில், நிலுவையில் இருந்த பட்டதாரிகளுக்கு பணி நியமன உத்தரவுகளை தபாலில் அனுப்பும் பணியை தொடக்க கல்வித் துறை தொடங்கியுள்ளது.
தொடக்கப் பள்ளிகளில் (2010&2011 ஆண்டுக்கான) காலியாக உள்ள இடங்களில் இடைநிலை ஆசிரியர்களை பதிவு மூப்பு அடிப்படையில் நியமிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்திருந்தது. இதற்காக அந்தந்த மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களில் இருந்து பட்டியல் பெறப்பட்டது. இதற்கான சான்று சரிபார்ப்பு கடந்த டிசம்பர் 3, 4ம் தேதி அந்தந்த மாவட்டங்களில் நடந்தது.
மூலச் சான்றிதழ்களில் ஏதேனும் ஒன்றை சான்று சரிபார்ப்பு நாளில் ஒப்படைக்கவில்லை என்றால் அவர்கள் தகுதியற்றவர்களாக கருதப்படுவார்கள். எக்காரணம் கொண்டும் மீண்டும் ஒரு முறை வாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது என்று ஆசிரியர் தேர்வு வாரியம் கண்டிப்புடன் தெரிவித்து இருந்தது. இதன்படி மேற்கண்ட தேதிகளில் சான்று சரிபார்ப்பு நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், புதியதாக ஆசிரியர் பட்டயப் படிப்பு முடித்த சில மாணவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதில் பதிவு மூப்பு அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்களை தேர்வு செய்யக் கூடாது என்றும், போட்டித் தேர்வு நடத்தியே பணி நியமனம் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். இதனால் பணி நிறுத்தப்பட்டது. அதில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான இடைநிலை பட்டயம் முடித்தவர்களுக்கு எப்போது பணி கிடைக்கும் என்று தெரியவில்லை.
கடந்த திமுக ஆட்சியில் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 2010& 2011ம் கல்வி ஆண்டில் ஏற்பட்ட காலி பணியிடங்களில் 5056 பட்டதாரி களை பணி நியமனம் செய்தனர். அதில் பள்ளிக் கல்வி, தொடக்ககல்வி, ஆதிதிராவிடர் நலத்துறை ஆகியவற்றில் பணி நியமனம் செய்தனர். தேர்தல் காரணமாக தொடக்க கல்வித் துறைக்கான பணி நியமனம் நிறுத்தி வைக்கப்பட்டது. இறுதியாக 1155 பட்டதாரிகள் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டனர். அவர்களில் தகுதியானவர்களின் பட்டி யலை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த வாரம் தொடக்க கல்வி துறைக்கு அனுப்பி வைத்தது.
அதில் இடம் பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் பணியை தொடக்க கல்வித் துறை தொடங்கியுள்ளது. இடையில் பொங்கல் விடுமுறை என்பதால் அந்த பணி நின்றது. இன்று அல்லது நாளை பணி நியமன உத்தரவுகள் கிடைக்கும். தபால் மூலம் பணி நியமன ஆணைகளை அனுப்பி வைக்கின்றனர்.

பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம்

சென்னை: தொடக்க கல்வித் துறைக்கு ஒதுக்கீடு பெற்ற 1,155 பட்டதாரி ஆசிரியர்களை, நீண்ட இழுபறிக்குப் பின் பணி நியமனம் செய்து, அதற்கான கடிதங்களை தபால் மூலம் தொடக்க கல்வித் துறை அனுப்பியுள்ளது. மாநில பதிவு மூப்பு அடிப்படையில், தொடக்க கல்வித் துறைக்குத் தேர்வாகி, ஆறு மாதங்களுக்கும் மேலாக பணி நியமன உத்தரவு கிடைக்காமல், 1,155 பட்டதாரி ஆசிரியர்கள் அவதிப்பட்டு வந்தனர். இழுபறிக்குப் பின், அனைவரையும் பணி நியமனம் செய்து, அதற்கான உத்தரவு கடிதங்களை, 14ம் தேதி, தபால் மூலம் தொடக்க கல்வித் துறை அனுப்பியுள்ளது. பொங்கல் விடுமுறை காரணமாக, பல மாவட்டங்களில், பணி நியமன உத்தரவு கடிதங்கள் கிடைக்கவில்லை. தாவரவியல் ஆசிரியர்களுக்கு மட்டுமே உத்தரவு கடிதங்கள் கிடைத்துள்ளன. இதர பாட ஆசிரியர்களுக்கு இன்னும் உத்தரவு கடிதங்கள் கிடைக்கவில்லை. "இந்த வார இறுதிக்குள், அனைவருக்கும் உத்தரவு கடிதங்கள் கிடைத்து விடும்' என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.


வேலூர்  பதிவு மூப்பு பட்டியல்

வேலூர், ஜன. 18-

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்ட சிறப்பு ஆசிரியர்கள் பணியிடத்துக்கு வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு மூப்பு பட்டியல் இன்று (புதன்கிழமை) வெளியிடப்படுகிறது என்று மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் அருணகிரி கூறினார்.

இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் அருணகிரி கூறியதாவது:-

சிறப்பு ஆசிரியர்கள்

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்ட ஓவியம், தையல், உடற்கல்வி ஆகிய சிறப்பு ஆசிரியர்கள் பணியிடத்துக்கு வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பதிவு மூப்பு அடிப்படையில் மனுதாரர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

உடற்கல்வி ஆசிரியருக்கு எஸ்.எஸ்.எல்.சி. அல்லது எச்.எஸ்.சி., மற்றும் பி.பி.எட், பி.பி.இ.எஸ்., பி.எம்.எஸ். அரசு ஆசிரியர் சான்றிதழ் (இளநிலை மற்றும் முதுநிலை) ஆகிய கல்வி தகுதியும், ஓவிய ஆசிரியருக்கு எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் டி.டி.சி.யும், தையல் பயிற்சிக்கு எஸ்.எஸ்.எல்.சி., டி.டி.சி. ஆகிய கல்வி தகுதியும் இருக்க வேண்டும். பதிவு மூப்பு உத்தேச பதிவு மூப்பு நாளில் இருந்து இன்றைய தேதி வரையும், வயது வரம்பு 57 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.

இன்று ஒட்டப்படுகிறது

45 தையல் ஆசிரியர்கள், 375 உடற்கல்வி ஆசிரியர்கள், 236 ஓவிய ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு பதிவு மூப்பு பட்டியல் வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உள்ள அறிவிப்பு பலகையில் இன்று (புதன்கிழமை) ஒட்டப்படும்.
தகுதி உடைய நபர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வந்து பரிந்துரை செய்யப்பட உள்ளதை உறுதி செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

பணி நியமனத்தில் கட்டுப்பாடு: குழப்பத்தில் ஆசிரியர்கள்


விருதுநகர்: புதிய ஆசிரியர்கள் நியமனத்தில், ஆசிரியர் தகுதிதேர்வு கட்டுப்பாடு பற்றி குறிப்பிடாததால் ஆசிரியர்கள் குழப்பத்தில் 
உள்ளனர். மத்திய அரசின் கல்வி உரிமைச்சட்டத்தின் படி ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டவர்கள், ஆசிரியருக்கான தகுதி தேர்வு எழுதி, ஐந்து ஆண்டுகளுக்குள் தேர்வானவர்களாக இருக்க வேண்டும், என ,தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி கடந்த மூன்று மாதங்களுக்கு முன் புதிய ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆசிரியர்கள் சங்கத்தினர்,"ஆசிரியர் தகுதி தேர்வு என்பது தேவையில்லாததது,' என்றனர்.


பல ஆசிரியர்களுக்கு ,வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு நடத்தி, பணி நியமனம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் , கடந்த ஒரு மாதமாக வழங்கப்படும் ஆசிரியர் நியமன உத்தரவில், தகுதி தேர்வு பற்றி குறிப்பிடாமல் பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டு வருகின்றன. புதிய ஆசிரியர்கள் நியமனத்தில், இந்த கட்டுப்பாடு நீக்கம் செய்யப்பட்டுள்ளதால், ஆசிரியர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்க அரசும், பள்ளிக்கல்வித்துறையும் தெளிவான 
முடிவினை அறிவிக்க வேண்டும்.

தரம் உயர்வு பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை

விருதுநகர்: தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறையால், மாற்றுப்பணியில் செல்லும் ஆசிரியர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்கம் சார்பில் ,710 நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன. இந்த பள்ளிகளில், இந்த கல்வியாண்டு முதல் மாணவர்கள் சேர்க்கை நடத்த, பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. வெளியிடங்களில் படிக்கும் மாணவர்கள், தரம் உயர்த்தப்பட்ட பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.


நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் ,பதவி உயர்வில் உயர்நிலைப்பள்ளிகளில் பணி நியமனம் செய்யப்பட்டனர். இதனால் போதுமான ஆசிரியர்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில், தமிழ், ஆங்கிலம்,கணிதம், அறிவியல், சமூக அறிவியல், தலைமையாசிரியர் உட்பட ஆறு ஆசிரியர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நடுநிலைப்பள்ளிகளில் இருந்த பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டாலும் ,போதுமான ஆசிரியர் இல்லாத நிலை உள்ளது. அருகில் உள்ள பள்ளி ஆசிரியர்களை, மாற்றுப்பணியில் வாரத்தில் 2 முதல் 3 நாட்கள் வரை பாடம் எடுக்க பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. மாணவர்களோ முழுமையாக ஆசியர்கள் இல்லாத நிலையில் பாதிக்கின்றனர். புதிய ஆசிரியர்களை விரைவில் நியமிக்க அரசு முன் வர வேண்டும்.




4 comments:

  1. AnonymousJan 21, 2012 07:06 AM
    இன்று உண்ணாவிரதம் வெற்றிகரமாக நடைபெற்றது இதில் சுமார் 2000 பட்டதாரி ஆசிரியர் கலந்துகொண்டனர் ரத்தினகுமார் அவர்களுக்கு கோடி நன்றி
  2. AnonymousJan 21, 2012 08:41 PM
    http://1.bp.blogspot.com/-C3BlSQ9rWvs/TxuAF0Hx9pI/AAAAAAAAAfQ/JuVhKT3HZHk/s1600/radna+meeting.jpg
    pls click above link.
  3. AnonymousJan 22, 2012 04:23 AM
    http://2.bp.blogspot.com/-yCH9Xp1nTtM/Txv4TjBzcoI/AAAAAAAAAfg/GkWJHXwhI7o/s1600/vaigo.jpg pls. click above link vaiko speach support to seniority.
  4. AnonymousJan 22, 2012 08:22 AM
    கடந்த 2001-2006 ல் தமிழக அரசால் அறிமுகம் செய்யப்பட்ட TRB examல் குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் ஆசிரியர் பணியில் சேர்ந்தார்கள் அதிக மதிப்பெண் எடுத்தவர்கள் வேலே இல்லாமல் நடுத்தெருவில் நின்றார்கள் இது பின்னர் மதுரை உயர்நீதி மன்ற மூலம் இந்த முறைகேடு வெளிவந்தது(W.A(M.D)no of 821 of 2008) கடந்த 2010 ஒரு போட்டித்தேர்விற்கு மூன்று முடிவுகள் வெளியிடப்பட்டது இந்த நிகழ்ச்சியும் உயர்நீதி மன்றம் மூலம் வெளி கொணரபட்டது இதன் பின்பும் தேர்வு தான் வேண்டும் என்று அடம்பிடிப்பவர்களிடம் பணம் இருக்கும் தைரியத்தில் தான் பேசுகிறார்கள் போல சந்தேகம் வருகிறது

4 comments:

  1. இன்று உண்ணாவிரதம் வெற்றிகரமாக நடைபெற்றது இதில் சுமார் 2000 பட்டதாரி ஆசிரியர் கலந்துகொண்டனர் ரத்தினகுமார் அவர்களுக்கு கோடி நன்றி

    ReplyDelete
  2. http://1.bp.blogspot.com/-C3BlSQ9rWvs/TxuAF0Hx9pI/AAAAAAAAAfQ/JuVhKT3HZHk/s1600/radna+meeting.jpg
    pls click above link.

    ReplyDelete
  3. http://2.bp.blogspot.com/-yCH9Xp1nTtM/Txv4TjBzcoI/AAAAAAAAAfg/GkWJHXwhI7o/s1600/vaigo.jpg pls. click above link vaiko speach support to seniority.

    ReplyDelete
  4. கடந்த 2001-2006 ல் தமிழக அரசால் அறிமுகம் செய்யப்பட்ட TRB examல் குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் ஆசிரியர் பணியில் சேர்ந்தார்கள் அதிக மதிப்பெண் எடுத்தவர்கள் வேலே இல்லாமல் நடுத்தெருவில் நின்றார்கள் இது பின்னர் மதுரை உயர்நீதி மன்ற மூலம் இந்த முறைகேடு வெளிவந்தது(W.A(M.D)no of 821 of 2008) கடந்த 2010 ஒரு போட்டித்தேர்விற்கு மூன்று முடிவுகள் வெளியிடப்பட்டது இந்த நிகழ்ச்சியும் உயர்நீதி மன்றம் மூலம் வெளி கொணரபட்டது இதன் பின்பும் தேர்வு தான் வேண்டும் என்று அடம்பிடிப்பவர்களிடம் பணம் இருக்கும் தைரியத்தில் தான் பேசுகிறார்கள் போல சந்தேகம் வருகிறது

    ReplyDelete