மதுரை:பட்டதாரி ஆசிரியர்களை போட்டித் தேர்வுகள் மூலம் மட்டும் தேர்வு
செய்யக் கோரிய மனு குறித்து பதிலளிக்க, தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட் கிளை
உத்தரவிட்டது.
ரிட் மனு:
நாங்கள் பி.எட்., முடித்துள்ளோம். எங்களைப் போல் பி.எட்., முடித்த லட்சக்கணக்கானோர், வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில், இடைநிலை ஆசிரியர்கள் மாநில பதிவு மூப்பு அடிப்படையிலும், பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் போட்டித் தேர்வுகள் மூலமும் தேர்வு செய்யப்படுகின்றனர்.
இந்நிலையில், கூடுதல் தலைமைச் செயலர், 2011 நவ., 15ல், பள்ளிக் கல்வியில் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி, வெற்றி பெற்றால் தான் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என, உத்தரவிட்டார். பட்டதாரி ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு நடத்துவது தேவையற்றது.தகுதித் தேர்வில், மொழி 1ல் 30, மொழி 2ல் 30, குழந்தைகள் கற்பித்தல் மேம்பாடு பாடத்தில் 30, கணிதம், அறிவியல் பாடங்களில் 60 அல்லது சமூக அறிவியல் பாடத்தில் 60 மதிப்பெண் பெற வேண்டும். இவை அல்லாமல், மற்ற பாடங்கள் படித்த ஆசிரியர்கள், கணிதம், அறிவியல் அல்லது சமூக அறிவியல் பாடங்கள் தேர்வு செய்து, 60 மதிப்பெண் பெற வேண்டும். பிற பாடங்கள் படித்த ஆசிரியர்கள், தகுதித் தேர்வில் எப்படி மதிப்பெண் பெற முடியும்? தகுதித் தேர்வு தொடர்பான உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மனுவை விசாரித்த நீதிபதி வி.தனபாலன், இதுகுறித்து இரு வாரங்களுக்குள் பதிலளிக்க கூடுதல் தலைமைச் செயலர், பள்ளிக்கல்வி இயக்குனர், சர்வ சிக்ஷா அபியான் திட்ட முதன்மை செயலர், ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=380088

No comments:
Post a Comment