Thursday, January 5, 2012

பகுதி நேர ஆசிரியர்களின் சான்றிதழ் சரிபார்க்கும் பணி

ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் பணியமர்த்தப்பட உள்ள ஓவியப் பாடத்துக்கான பகுதி நேர ஆசிரியர்களின் சான்றிதழ் சரிபார்க்கும் பணி நேற்று துவங்கியது.
தமிழகம் முழுவதும் தொகுப்பூதியம் அடிப்படையில் பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். இதற்காக பாடம் வாரியாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சமீபத்தில் பெறப்பட்டன.
அவ்வாறு பெறப்பட்ட விண்ணப்பதாரர்ளின் சான்றிதழ் சரிபார்க்கும் பணி ஈரோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. ஓவியப் பாடத்துக்கு விண்ணப்பித்திருந்த 180 பேரின் கல்வித்தகுதி சான்றிதழ் சரிபார்க்கும் பணி நேற்று நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராஜராஜன் தலைமை வகித்தார். சி.இ.ஓ., நேர் முக உதவியாளர் முருகேசன் உடனிருந்தார்.

No comments:

Post a Comment