திருப்பூர் : அரசு பள்ளிகளில் காலியாக உள்ள உடற்பயிற்சி, தோட்டக்கலை,
இசை, தையல் உள்ளிட்ட ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலானபள்ளிகளில் சிறப்பு ஆசிரியர்கள் இல்லாத நிலையே உள்ளது. மாவட்டம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
காலி பணியிடங்களை நிரப்ப, எஸ்.எஸ்.ஏ., மூலம் விண்ணப்பம்வினியோகிக்கப்பட்டு, நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டது; 499 பேர் தேர்வு செய்யப்பட்டு, பகுதிநேர சிறப்பு ஆசிரியர்களாக, கடந்த பிப்., மாதம் பணி அமர்த்தப்பட்டனர்.
தொடர்ந்து, பல்வேறு துறைகளில் பட்டம்பெற்று மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர்கள் பட்டியல் பெறப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் பதிவு மூப்பு அடிப்படையில், ஓவியம், தையல், இசை ஆசிரியர் பணியிடத்துக்கு 18 பேர்; உடற்பயிற்சிக்கு 31 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
வேலை வாய்ப்பு அலுவலக பதிவு அடிப்படையில் விண்ணப்பித்துள்ளவர்களுக்கான நேர்முகத்தேர்வு, செயின்ட் ஜோசப் பள்ளியில் வரும் 21ல் நடக்கிறது.
விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு, தகுதியானவர்கள் வரும் ஜூன் மாதம், முழு நேர சிறப்பு ஆசிரியர்களாக பணியமர்த்தப்படுவர். இவர்களுக்கு அரசு ஆசிரியர்களுக்கு இணையான சம்பளம் வழங்கப்படும், என, அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment