பட்ஜெட்டில், பள்ளிக் கல்வித் துறைக்கு, 14 ஆயிரத்து 552
கோடியே 82 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த
நிதியில், பள்ளிக் கல்விக்கு அதிகபட்சமாக, 6,936 கோடியே 38 லட்சம் ரூபாய்
ஒதுக்கப்பட்டு உள்ளது.
இது, மொத்த ஒதுக்கீட்டில், 47.66 சதவீதம். பள்ளிக்
கல்வித் துறைக்கான பட்ஜெட் நிதி ஒதுக்கீடு, ஆண்டுதோறும் எகிறிக் கொண்டே
போகிறது. மற்ற அரசுத் துறைகளைவிட, அதிகபட்ச நிதி ஒதுக்கீட்டைக் கொண்ட
துறையாக, பள்ளிக் கல்வித் துறை உள்ளது.
இவ்வளவு நிதியை ஒதுக்கீடு
செய்தாலும், திட்டப் பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு, அதிகளவில் இல்லாதது குறை.
நடப்பாண்டில், 2,694 கோடியே 73 லட்சம் ரூபாய், திட்டப் பணிகளுக்காக
ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இது, மொத்த நிதி ஒதுக்கீட்டில், 18.51
சதவீதம் தான். மீதி நிதி முழுவதும், ஆசிரியர்கள், அலுவலர்களின் சம்பளம்
மற்றும் இதரச் செலவுகளாகக் கரைகிறது.
No comments:
Post a Comment