Thursday, September 20, 2012

ஆங்கிலம் மற்றும் சமூக அறிவியல் பாடத்திற்கு அதிக வாய்ப்பு

நெல்லை, செப்.20:
பள்ளி கல்வித்துறையில் அரசு, நகராட்சி, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு 1:40 என்ற விகிதாச்சாரப்படி கூடுதலாக தேவைப்படும் முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு அரசு ஏற்கனவே ஒப்புதல் ஆணை வழங்கியுள்ளது.
இந்நிலையில் தற்போது பணி நிரவல் செய்து முடிக்கப்பட்ட பின் அரசு, நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு 2011&2012ம் கல்வியாண்டு முதல் ஆசிரியர் பணியிடங்களின் தேவை அடிப்படையில் 6872 கூடுதல் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான பள்ளி மற்றும் பாட வாரியான பட்டியலை அனுமதிக்க பள்ளிக்கல்வி இயக்குனர் அரசுக்கு கோரி யிருந்தார்.
இதன்படி, தமிழ் பாடத்திற்கு 450 பட்டதாரி ஆசிரியர்கள், ஆங்கிலம் 3000, கணிதம் 50, அறிவியல் 500, சமூக அறிவியல் பாடத்திற்கு 2872 பட்டதாரி ஆசிரியர்கள் என மொத்தம் 6872 ஆசிரியர் பணியிடங்களுக்கான பட்டியலுக்கு அரசு முதன்மை செயலா ளர் அனுமதி வழங்கியுள்ளார்.
ஆங்கிலம் மற்றும் சமூக அறிவியல் பாடத்திற்கு அதிக அளவில் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் அந்த துறை ஆசிரியர்கள் அதிகம் பயன்பெற வாய்ப்பு உள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் நிரப்பப்பட உள்ள பணியிடங்கள் மற்றும் பள்ளிகள் குறித்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன.
பணிக்கு தேர்ந்தெடுக் கப்படும் முறை குறித்து அரசின் அறிவிப்பை எதிர்பார்த்து வேலை இல்லாத பட்டதாரி ஆசிரியர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

No comments:

Post a Comment