திருச்சி : ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பதிவு மூப்பு அடிப்படையில் அரசு பள்ளிகளுக்கு தமிழ், ஆங்கிலம் உட்பட 13 பாடப் பிரிவுகளில் ஆயிரத்து 80 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்காக ஆன்லைன் முறையில் பணி நியமன கலந்தாய்வு நடத்தப்பட்டது. இதில், மாநிலம் முழுவதும் 782 பேருக்கு நேரடியாக பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது.
மருத்துவ பரிசோதனை?
வழக்கமாக
பணி நியமனம் பெறுவோர், மருத்துவ சான்றிதழ்களைப் கொடுத்து பணியில்
சேருவார்கள். தற்போது முதல் முறையாக பள்ளிக்கல்வித்துறை சார்பில், அந்தந்த
மாவட்டங்களில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. இதன்படி திருச்சி
மாவட்டத்தில் பணி நியமனம் பெற்றவர்களுக்கான மருத்துவ பரிசோதனை ஜோசப்
கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. அரசு மருத்துவர் செந்தில்வேல்
28 ஆசிரியர்களுக்கு, உயரம், எடை, ரத்த அழுத்தம் மற்றும் செவித்திறன்,
பார்வைத் திறன் உள்ளிட்ட மருத்துவ பரிசோதனையும் செய்தார்.
No comments:
Post a Comment