விருதுநகர்: பள்ளிகளில் வாரத்தின் கடைசி பாட வேளையில் ஒரு மணி
நேரம்,மாணவர்களுக்கு, பன்முகத்திறனை வெளிப்படுத்தும் விதமாக பயிற்சி வழங்க,
பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் சபீதா உத்தரவிட்டுள்ளார்.
பள்ளிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து 1.50 நிமிடம், கொடி ஏற்றம், கொடி வணக்கம் 2 நிமிடம், கொடிப்பாடல் 2 நிமிடம், உறுதிமொழி 4 நிமிடம், சர்வசமயவழிபாடு ஒரு நிமிடம், திருக்குறள் மற்றும் விளக்கம் 2 நிமிடம்,தமிழ், ஆங்கில செய்தி வாசிப்பு 4 நிமிடம், இன்றைய சிந்தனை, பழமொழி, பொது அறிவு 2 நிமிடம், பிறந்தநாள் வாழ்த்து அரை நிமிடம் என இருக்க வேண்டும்.
வகுப்பறையில் நடக்கும் வழிபாட்டில், தினமும் ஒரு மாணவர், தமிழ்தாய் வாழ்த்து பாட வேண்டும். இதை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்.

வாரத்தின் இறுதி நாளில் கடைசி பாட வேளையில் ஒரு மணி நேரம் ,மாணவர்கள்
பன்முகத்திறனை வெளிப்படுத்தும், விதமாக இருக்க வேண்டும். இதில் ,பேசுதல்,
நடித்தல், ஆடுதல், பாடுதல், நகைச்சுவை, மனக்கணக்கு, பொன் மொழிகள்,
பழமொழிகள், படைப்பாற்றல் போன்ற செயல்பாடுகள் இருக்க வேண்டும்.
இதை, அனைத்து
அரசு உயர்நிலை, மேல் நிலை, நடுநிலை, மாநகாரட்சி, நகராட்சி, ஆங்கிலோ
இண்டியன், மெட்ரிக்., பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் பின்பற்ற
வேண்டும் என, உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment