மீனாட்சிவலசு அரசு ஆரம்பப் பள்ளி, தண்ணீரைச் சுத்திகரிக்கும் கருவி. |
இது குறித்து முன்னாள் கல்விக்குழு உறுப்பினரும், பாப்பினி ஊராட்சி முன்னாள் துணைத் தலைவருமான டி.சிவகுமார் கூறும்போது, ""இந்தப் பள்ளியில் கணினி, குடிநீர்க் குழாய், தரைத்தளத்துக்கு டைல்ஸ் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை மக்களின் பங்களிப்போடுதான் செய்து முடித்தோம்'' என்றார்.
தற்போதைய கல்விக்குழு தலைவரும், பாப்பினி ஊராட்சி வார்டு உறுப்பினருமான டி.ராஜேஸ்வரி கூறும்போது, ""பள்ளிக்குச் சுற்றுச்சுவர், மாணவர்களுக்கு விளையாட்டுக் கருவிகள் உள்ளிட்ட வசதிகளையும் செய்து தரத் திட்டமிட்டுள்ளோம்'' என்றார்.
இந்தப் பள்ளியைப் போன்று அனைத்து அரசுப் பள்ளிகளும் இருந்துவிட்டால், மாணவர்கள் பாதியிலேயே பள்ளியிலிருந்து விலகுவது குறையும்; கல்வித் தரமும் உயரும். ÷இதுபோன்ற வசதிகளை அனைத்து ஆரம்பப் பள்ளிகளிலும் செய்து தர அரசும், உள்ளாட்சிப் பிரதிநிதிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
No comments:
Post a Comment