திருநெல்வேலி: டி.ஆர்.பி தர எண் அடிப்படையில் சீனியாரிட்டி வழங்க வேண்டும்
என்று நெல்லையில் நடந்த பட்டதாரி ஆசிரியர்கள் சங்க கூட்டத்தில்
வலியுறுத்தப்பட்டது. நெல்லை ஜங்ஷன் மதிதா இந்து மேல்நிலைப் பள்ளியில் தமிழக
பட்டதாரி ஆசிரியர்கள் சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில்,
இதில்,
தமிழகத்தில் 6ம் வகுப்பு முதல் 10ம்
வகுப்பு வரை அனைத்து வகை பட்டதாரி ஆசிரியர்களையும் ஒரே அலகாக கருத
வேண்டும். டி.ஆர்.பி தர எண் அடிப்படையில் பதவி உயர்வு பெறுவதற்கு கோர்ட்
மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னையில் பொது இட மாறுதல் கவுன்சிலிங்
நடத்த வேண்டும்.தொடக்க கல்வித் துறையில் பணியாற்றும் பட்டதாரி
ஆசிரியர்களுக்கு டி.ஆர்.பி தர எண் அடிப்படையில் சீனியாரிட்டி அளிக்க அரசு
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
No comments:
Post a Comment