சென்னை,
பிப்.22: தமிழகத்தில் காலியாக உள்ள தையல், ஓவியம் மற்றும் இசை ஆசிரியர்
பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு, பதிவுமூப்பு அடிப்படையில்
நிரப்பப்படவுள்ளன.
இதுகுறித்து தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
"தமிழகத்தில் பல்வேறு பள்ளிகளில் 90 தையல் ஆசிரியர்கள் , 309 ஓவிய ஆசிரியர்கள் மற்றும் 39 இசை ஆசிரியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்புவதற்கான காலியிட அறிவிக்கை ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் இருந்து பெறப்பட்டுள்ளது.
இந்த காலியிடப் பணிகள் அனைத்தும் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. ஜனவரி 31-ம் தேதி நிலவரப்படி தகுதியுள்ள பதிவுதாரர்களின் பெயர், பதிவு மூப்பு விவரங்கள், பாடவாரியாகவும், இனவாரியாகவும் தமிழக அரசின் இணையதளத்தில்(www.tn.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் இணையதளத்தில் பணியிடங்களுக்கான கல்வித் தகுதி, வயது வரம்பு மற்றும் இனசுழற்சி விவரங்கள் ஆகியவற்றையும் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
மேலும் மனுதாரர்களின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதா என்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
பரிந்துரைப் பட்டியலில், பதிவு மூப்பு தேதிக்குள் தகுதியுள்ள மனுதாரர்கள் பெயர்கள் யாருடையதேனும் விடுபட்டு இருப்பின், அவர்கள் தாங்கள் பதிவு செய்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தினை உரிய ஆதாரத்துடன் வரும் 27-ம் தேதிக்குள் நேரில் தொடர்பு கொள்ளலாம்.
அந்தத் தேதிக்குப் பின்னர் தொடர்பு கொள்ளும் மனுதாரர்களின் கோரிக்கைகள் எதுவும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்று தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment