சினிமாவில் சில படங்கள் சமூக அக்கறையோடும், பொறுப்போடும் படங்களை
படங்களாக காட்டாமல், பாடங்களாக காட்டும் பட வரிசையில் சேரவுள்ள புதியபடம்
உடும்பன். 17ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கும் இப்படம் குறித்து, அப்படத்தின்
டைரக்டர் பாலன் என்ன சொல்கிறார் என்று நீங்களே கேளுங்கள். நான் இதுவரை
100க்கும் மேற்பட்ட விளம்பர படங்களை எடுத்துள்ளேன். 2006-ல் நாகரீக மோமாளி
என்ற படத்தை எடுத்தேன். அதன் பிறகு இப்போது உடும்பன் படத்தை
எடுத்துள்ளேன். கதையின் களம், மதுரை கருவேலங்காட்டு பகுதியில் இருந்து
ஆரம்பிக்கிறது. கிராமத்தில் வசிக்கும் ஒருவர் தன் மகனை திருடனாகவே தயார்
படுத்துகிறார். கன்னக்கோல் போட்டு திருடுவது, உடும்பை வைத்து திருடுவது
தான் அவன் வேலை. அப்படி ஒருநாள் திருட போன வீட்டில் அவனுக்கு ஒன்றும்
சிக்கவில்லை. வீட்டில் பணம் ஏதும் இல்லையா என்று அந்த வீட்டு
உரிமையாளரிடம் கேட்க, அதற்கு அவர் இப்போது தான் பிள்ளைகளின் படிப்புக்கு
கட்டணம் என்ற பெயரில் பள்ளிக்கூடம் கொள்ளையடித்தது என்று கூறுகிறார்.
இதைக்கேட்டதும் படத்தின் நாயகன் மனதிலும் பள்ளிக்கூடம் தொடங்க வேண்டும் என்ற ஆசை வருகிறது. இப்படி கதை போகும்போது, ஹீரோவின் அண்ணன் கூலிப்படை தலைவன் போல் செயல்படுகிறான். ஹீரோ ஜெயிலுக்கு போக அண்ணன் கைக்கு பள்ளிக்கூடம் போகிறது. இப்படி ஒரு கதை அமைத்து படத்தில் என்ன பெருசா சொல்லியிருக்கிறோம் என்றால், சில வருடங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து, சரியான புள்ளி விவரங்களை எடுத்து, அதை இப்படத்தில் சொல்லியிருக்கிறோம்.
கிராமத்து பிள்ளைகளுக்கு சரியான கல்வி கிடைத்ததா, அவர்களின் கல்வி முறை எப்படி இருக்கு, வியாபாரமான கல்வியை அனைவருக்கும் வழங்குவது எப்படி உள்ளிட்ட விழிப்புணர்வுகளை எங்களால் முடிந்த வரை இப்படத்தில் பதிவு செய்துள்ளோம் என்றார்.

No comments:
Post a Comment