கூட்டத்திற்கு பின்னர், விழுப்புரம் அமுதனுடன் உள்ளூர் ஆசிரியர்கள் பாஸ்கர், தாமோதரன், துரை, காந்தி உள்ளிட்டோர் நடத்திய கலந்துரையாடல். |
திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டையில் 02/02/14 அன்று நடைபெற்ற கணினி பட்டதாரி ஆசிரியர்களின் கூட்டத்திற்கு, மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆதரவு தெரிவிக்கப்பட்டது. தொலைதுாரத்தில் இருந்து கூட்டத்திற்கு வர விருப்பம் தெரிவித்தவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேநேரம், உள்ளூரில் இருந்து கொண்டு, உடல்நலம் சரியில்லை, சொந்த அலுவல் உள்ளது என கூட்டத்திற்கு வராமல் தவிர்த்தவர்களுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்படுகிறது.
உங்களின் கோரிக்கை குறித்து குரல் கொடுக்க உங்களுக்கே ஆர்வம் இல்லாவிட்டால், அரசு அக்கறை எடுக்கமா? சிந்திக்கவும்...
இனிவரும் கூட்டங்களில் முழு அளவில் நமது ஒற்றுமையை காட்ட முன்வர வேண்டும்.
விழுப்புரத்தில் இருந்து கூட்டத்திற்கு நேரில் வந்து, தனது கருத்துக்களை வெளிப்படுத்திய அமுதன் அவர்களின் ஆர்வமும், அக்கறையும், மேற்கண்ட நபர்களுக்கு ஒரு சாட்டையடி.
No comments:
Post a Comment