Tuesday, February 4, 2014

தினமலர் நாளிதழ் செய்தி: கணினி பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு


பதிவு செய்த நாள்

04 பிப்
2014
02:44

ஆர்.கே.பேட்டை : கணினி பட்டதாரிகள் நியமனம் குறித்த அரசின் நிலைப்பாட்டை அறிந்து கொள்ள, பட்ட தாரிகள் காத்திருக்கின்றனர். நேற்று, நான்கு மாவட்டத்தில் இருந்து, 500 பேர் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
ஆர்.கே.பேட்டையில் நேற்று, கணினி பட்டதாரிகள் கலந்தாலோசனை கூட்டம் நடந்தது. இதில், திருவள்ளூர், வேலுார், காஞ்சிபுரம், கடலுார் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, 500 பேர் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு, துரை தலைமை தாங்கினார். கூட்டத்தில், கணினி பட்டதாரிகள், கணினி பகுதி நேர ஆசிரியர்கள், மற்றும் பி.எட்., பட்டதாரிகள் கலந்து கொண்டு தங்களின் வேலைவாய்ப்பு குறித்து விவாதம் செய்தனர்.
கடந்த, 2006ல், அறிமுகம் செய்யப்பட்ட ஆறு முதல், 10ம் வகுப்பு வரையிலான, கணினி பாடத் திட்டத்தை நடைமுறைப்படுத்தவும், நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கணினி ஆசிரியர்களை நியமனம் செய்யவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர்.
மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளாக, பகுதி நேர ஆசிரியர்களாக பணியாற்றி வருபவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஏற்கனவே அறிவித்த 'ஸ்மார்ட் கிளாஸ்' திட்டத்தை நடைமுறைப்படுத்தி, கணினி பட்டதாரிகளுக்கும் வேலைவாய்ப்பு ஏற்படுத்த வேண்டும் என்றனர். பள்ளியில் தனியார் துறை மூலமாக கணினி கல்வி வழங்கும், ஐ.சி.டி., முறைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். விரைவில், கல்வித் துறை அதிகாரிகளை சந்தித்து தங்களை கோரிக்கை மனு அளிக்கவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

http://www.dinamalar.com/district_detail.asp?id=909585

1 comment:

  1. அன்பான நண்பர்களே,அன்பான நண்பர்களே, உங்கள் தகவல்களை, இந்த வெப்சை ட்டில் upload செய்யுங்கள்.

    ReplyDelete