தமிழகத்தில், 1,000 மேல்நிலைப்பள்ளிகளில் கம்ப்யூட்டர் ஆசிரியர்களை நிரந்தரம் செய்து, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.மாநிலத்தில், 1,880 அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவிற்கென ஆசிரியர் பயிற்றுனர்கள் நியமிக்க, கடந்த 2006ல் அறிவிப்பு வெளியானது. 2008 அக்டோபரில், ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வு மூலம், 1,880 பள்ளிகளுக்கு கம்ப்யூட்டர் ஆசிரியர்கள், தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். அவர்கள், கடந்த 3 ஆண்டுகளாக தங்களை நிரந்தரம் செய்யும்படி, அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர். இது தொடர்பாக, 790 கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து, அவர்களை பணி நிரந்தரம் செய்து, பள்ளிக்கல்வித்துறை (தொழில்நுட்பம்) உத்தரவிட்டது.இந்த உத்தரவில், வழக்கு நிலுவையில் உள்ள, 790 ஆசிரியர்கள் தவிர்த்து, 1,090 பேர்களை நிரந்தரம் செய்வதாக அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment