Tuesday, November 22, 2011

2 மாணவிகள், 1 மாணவர் படிக்கும் அரசு பள்ளி



வேடசந்தூர், நவ.22:
வேடசந்தூர் அருகே அரசு பள்ளியில் 2 மாணவியர் ஒரு மாணவர் மட்டும் படித்து வருகின்றனர். அவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க 2 ஆசிரியர்கள் மற்றும் 2 பணியாளர்கள் பணிபுரிகின்றனர்.
திண்டுக�கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ளது இ.சித்தூர் ஊராட்சி. இங்குள்ள கெட்டியபட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக�க பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 3 மாணவர் மட்டும் படிக்கின்றனர். மாணவி சவுடீஸ்வரி 2ம் வகுப்பும், மாணவர் ஆகாஷ்ராம், மாணவி பஞ்சவர்ணம் ஆகியோர் 5ம் வகுப்பும் படிக்கின்றனர்.
மூன்று பேருக்கு பாடம் சொல்லி கொடுக்க ஒரு தலைமை ஆசிரியர், ஒரு ஆசிரியர் உள்ளனர். இதுதவிர ஒரு சத்துணவு அமைப்பாளர், ஒரு சமையலர் பணி புரிகின்றனர். தற்போது 5ம் வகுப்பு படித்து வரும் இருவரும், தங்களின் படிப்பை முடித்தவுடன் 6ம் வகுப்புக்கு வேறு பள்ளிக்கு சென்றுவிட்டால், ஒரு மாணவியுடன் இப்பள்ளி செயல்படும் நிலை உருவாகியுள்ளது.
பள்ளியின் நிலை குறித்து, ஆசிரியர்கள் வேடசந்தூர் உதவி கல்வி அலுவலரிடம் தெரிவித்தனர். இப்பள்ளியை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. கெட்டியபட்டியை சுற்றி ஒரு கி.மீ. தொலைவில் வரப்பட்டி, கரிசல்பட்டி, அருப்பம்பட்டி, மேல்மாத்தினிபட்டி ஆகிய கிராமங்களில் பள்ளிகள் உள்ளதாலும், கெட்டியபட்டி குழந்தைகள், எரியோடு தனியார் பள்ளிகளுக�கு சென்று வருவதாலும், இப்பள்ளியில் 3 பேர் மட்டும் கல்வி கற்கும் நிலை உருவாகியுள்ளது.
எனவே, கல்வி துறை உயர் அதிகாரிகள், இப்பள்ளிக�கு குழந்தைகளை வரவழைக்க பெற்றோரிடம் பேச்சு நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். 50 ஆண்டுகளாக இயங்கி வரும் இப்பள்ளி தொடர்ந்து செயல்பட நடவடிக�கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பள்ளி 1961ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
பள்ளியில் அதிகபட்சமாக 50 முதல் 60 பேர் படித்து வந்தனர்.
கடந்த 5 ஆண்டுகளாக படிப்படியாக மாணவர் வருகை மிகவும் குறைந்தது.
தற்போது 2 மாணவிகளும் ஒரு மாணவரும் படிக்கின்றனர்.
பள்ளியில் தலைமை ஆசிரியர், ஆசிரியர், சத்துணவு அமைப்பாளர், சமையலர் ஆகியோர் பணிபுரிகின்றனர்.
2 ஆசிரியர், 2 பணியாளர் பணிபுரிகின்றனர்


அரசு தொடக்கப் பள்ளியில் படிக்கும் 2 மாணவியர், 1 மாணவர்.

1 comment:

  1. sir,
    How will be the PG teachers selection. all papers giving different news. pl clarify.

    ReplyDelete