Friday, November 11, 2011

pothuma?


1,743 ஆசிரியர்கள் நியமனம்


சென்னை:மாநில பதிவுமூப்பு அடிப்படையில், 1,743 இடைநிலை ஆசிரியர் நியமனத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, தமிழ் வழியில் படித்தவர்களுக்கு, 348 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, மாநில பதிவுமூப்பு அடிப்படையில், 1,743 இடைநிலை ஆசிரியர்கள், தொடக்க கல்வித் துறைக்காக தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு, நேற்று வெளியானது. பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 முடித்து, ஆசிரியர் பயிற்சி பெற்ற இரு பிரிவினரும், இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

இந்நியமனத்தில், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு, 20 சதவீதம் முன்னுரிமை அளிக்கப்படும் என, ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. அதன்படி, 348 பணியிடங்கள், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு கிடைக்கும். ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளைப் பொறுத்தவரை, சிறுபான்மை மொழிப்பாடங்கள் கொண்ட பள்ளிகள் மிகவும் குறைவு. அதேபோல், ஆங்கில வழி பயிற்சிப் பள்ளி, ஒன்று மட்டும் தான் உள்ளது. எனவே, தமிழ் வழியில் படித்தவர்களுக்குத் தான், அதிகளவில் இடைநிலை ஆசிரியர் வேலை வாய்ப்பு கிடைக்கும்.14ம் தேதி முதல்

விண்ணப்பம்:மாவட்ட கல்வி அலுவலகங்களில், 14ம் தேதி முதல், 23ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலகங்களில், 23ம் தேதி மாலை 5.45க்குள் ஒப்படைக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் பரிசீலனைக்குப் பின், ஒரு பணியிடத்திற்கு 5 பேர் வீதம், சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவர். அதன்பின், தேர்வுப் பட்டியல் வெளியிடப்படும்.


Recruitment of Secondary Grade Teachers Through Employment Registration State Seniority 2010 - 11 - Sponsered List of Candidates


ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் புதிதாக 1,743 இடை நிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படுகிறார்கள் மாநில சீனியாரிட்டி அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறார்கள்




சென்னை, நவ.10-


புதிதாக 1,743 இடை நிலை ஆசிரியர்கள் வேலைவாய்ப்பு மாநில சீனியாரிட்டி அடிப்படையில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.


இடை நிலை ஆசிரியர் பயிற்சி


தமிழகம் முழுவதும் உள்ள அரசு கல்லூரிகள் மற்றும் அரசு பள்ளிக்கூடங்களுக்கு ஆசிரியர்களை நியமிக்கும் பணியை சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரியம் செய்துவருகிறது.


கடந்த வருடம் இடை நிலை ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் 1,743 நிரப்பப்படப்போவதாக அறிவிக்கப்பட்டது.


ஆனால் தேர்வு செய்யப்படவில்லை. எப்போது தேர்ந்து எடுப்பார்கள் என்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த இடைநிலை ஆசிரியர் பயிற்சி படித்த ஆண்களும், பெண்களும் எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள்.


உடனே பணிநியமனம்


1743 இடை நிலை ஆசிரியர்கள் உடனடியாக நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வர உள்ளது. அறிவிப்பு வெளியானதும், பணிக்காக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு விண்ணப்பிக்கவேண்டும். அதில் அவர்களின் முகவரி, கல்வித்தகுதி, வேலைவாய்ப்பு பதிவு மூப்பு ஆகியவை குறிப்பிடவேண்டும்.


பின்னர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து சீனியாரிட்டி பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் பெற உள்ளது.


வேலைவாய்ப்பு அலுவலகம் கடந்த பல வருடங்களாக சீனியாரிட்டி பட்டியலை சரிபார்த்து ஒழுங்காக ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு கொடுப்பதில்லை. சீனியாரிட்டியில் உள்ளவர்களின் பெயர்களை விட்டுவிட்டு தான் பட்டியலை அனுப்பும். பின்னர் விடுபட்டவர்களின் பட்டியலை அனுப்பும்.


இதன் காரணத்தால் விடுபட்டுபோனவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு வந்து முறையிட்டுள்ளனர். போராட்டம் நடத்தி உள்ளனர்.


மாநில சீனியாரிட்டி அடிப்படையில்


எனவே கிண்டியில் உள்ள வேலைவாய்ப்பு இயக்குனர் அலுவலகம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் இருந்து சரியான சீனியாரிட்டி பட்டியலை ஒரு முறைக்கு இருமுறை சரிபார்த்து அதன்பின்னர் ஆசிரியர் தேர்வுக்கு அனுப்பவேண்டும். அப்படி அனுப்பினால்தான் இடைநிலை ஆசிரியர்களை தேர்வு செய்வது எளிதாகும். கால தாமதம் ஏற்படாது. பிரச்சினை வராது.


இந்த இடைநிலை ஆசிரியர்கள்தேர்ந்து எடுப்பது மாநில பதிவு மூப்பு அடிப்படையில் ஆகும். மாவட்ட சீனியாரிட்டி அடிப்படையில் அல்ல.


ஆசிரியர்களை தேர்ந்து எடுத்தபின்னர் தான் இந்த வருடத்திற்கான காலிப்பணியிடங்களை நிரப்பும் பணி நடைபெற உள்ளது.

No comments:

Post a Comment