Thursday, November 22, 2012

தகுதிதான் அடிப்படை!-தினமணி


ஆசிரியர் தகுதித் தேர்வு அண்மையில் நடத்தப்பட்டபோது, தேர்வு எழுதியவர்களில் 0.3 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். அப்போது தேர்வு எழுதியவர்கள் பலரும் வினாத்தாள் கடினமாக இருந்தது என்று கருத்துத் தெரிவித்ததால், மீண்டும் ஒருமுறை தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்விலும் சுமார் 3 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இரண்டு முறையும் தேர்ச்சி விகிதம் குறைவு என்பதால் இந்தத் தேர்வு முறை தவறு என்று ஆசிரியர் அமைப்புகள், கூட்டணிகள் சார்பில் கருத்துத் தெரிவிக்கப்பட்டு, தகுதித்தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்படுகிறது.
ஆனால், அவர்கள் முன்வைக்கும் காரணங்கள் அவர்கள் கோரிக்கைக்கு
வலு சேர்ப்பதாக இல்லை.
வினாத்தாள் கடினம் என்பதையே திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. 6 லட்சம் பேர் தேர்வு எழுதும்போது, வினாத்தாள் கடினமாகத்தான் இருக்க முடியும். அதற்காகத்தான் அதை "தகுதித் தேர்வு' என்று அழைக்கிறார்கள்.
இந்த அமைப்புகள் எழுப்பும் இன்னொரு கேள்வி, ஒரு தமிழாசிரியர் பணிக்கு விண்ணப்பிப்பவர் ஏன் மற்ற பாடங்களின் கேள்விக்குப் பதில் எழுத வேண்டும், ஆங்கில ஆசிரியர் பணியேற்கப்போகிறவர் ஏன் தாவரவியல், கணிதம் ஆகிய பாடங்களுக்கான கேள்விகளை எதிர்கொள்ள வேண்டும் என்பதுதான். மேலும், பி.எட். பாடத்திட்டத்திலிருந்து அதிகக் கேள்விகள் இடம்பெறுகின்றன என்ற முணுமுணுப்பும் உண்டு. இதில் எந்தவித நியாயமும் இருப்பதாகத் தெரியவில்லை.
இவர்கள் பணியாற்றப்போவது கல்லூரியில் அல்ல, பள்ளிகளில் பணியாற்றப் போகிறவர்கள். தமிழகத்தின் அரசுப் பள்ளிகளில் 90 சதவீதம் புறநகர்ப் பகுதிகளில் இருப்பவை. பல நடுநிலைப் பள்ளிகளிலும் மேனிலைப் பள்ளிகளிலும் ஒரே ஆசிரியர் இரண்டு பாடங்களை எடுக்க வேண்டிய தேவையும் பொறுப்பும் இருக்கிறது.
மேலும், ஒரு மாணவன் ஓர் ஆசிரியரைத் தனக்குத் தெரியாத அனைத்தும் தெரிந்தவராக மதிக்கிறார். அனைத்துப் பாடங்களிலும் ஆசிரியருக்குத் தேர்ச்சி இல்லாவிட்டாலும், அந்நிலையில் அவர் கேட்கும் கேள்விகளுக்கு, குறைந்தபட்சம் அதற்கான சரியான விடையை எங்கே தேடலாம் என்கின்ற அறிவு படைத்தவராக ஆசிரியர் அமைய வேண்டும். இதுதானே நியாயமான எதிர்பார்ப்பாக இருக்க முடியும்?
அதைக் கருதியே, பல்வேறு பாடங்களில் இருந்தும் அடிப்படைக் கேள்விகள் மட்டுமே கேட்கப்பட்டுள்ளன. இதையும்கூட தவறு என்று சொல்வார்கள் என்றால், அவர்கள் கல்லூரி விரிவுரையாளர்களாகப் பணியாற்ற முயற்சி செய்யலாமே தவிர, பள்ளிகளில் பணியாற்ற வேண்டியதில்லை.
இந்த இரண்டு தகுதித் தேர்வுகளிலும் அப்பட்டமாகத் தெரியவந்துள்ளது என்னவென்றால், வெற்றி பெற்றிருப்போர் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பதுதான். அதாவது, தொடர்ந்து படித்துக்கொண்டும், தனியார் பள்ளிகளில் பாடம் நடத்திக்கொண்டும் இருப்போர் மட்டுமே இந்தத் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். பட்டம் மட்டும் வாங்கிக்கொண்டு வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்துவிட்டு, பதிவுமூப்பு அடிப்படையில் வேலை கிடைத்துவிடும் என்று எதையும் படிக்காமல் சும்மா இருந்தவர்களால் இத்தேர்வில் வெற்றி பெற முடியவில்லை. இதுதான் மிகவும் கசப்பான உண்மை.

இந்த உண்மையை ஏற்கவும், ஆன்ம பரிசோதனை நடத்தவும் முயல வேண்டிய ஆசிரியர் அமைப்புகள், கூட்டணிகள், அதற்கு மாறாக பணம் கொடுத்துதான் இவர்கள் தேர்ச்சி பெற்றார்கள் என்று சொல்வது தங்களைத் தாங்களே தரம் தாழ்த்திக் கொள்வதற்கு ஒப்பாகும். அறிவால் தேர்ச்சி பெற்றவர்களை வெறும் காழ்ப்புணர்ச்சியால் இதைவிடக் கொச்சைப்படுத்தும் செயல் வேறு ஏதும் இருக்க முடியாது.
தகுதித் தேர்வுகள் மிகவும் இன்றியமையாதது என்பதும், குறிப்பாக ஆசிரியர் பணிக்கு அறிவுத்திறன் சோதனை அவசியமானது என்பதும் மேலும்மேலும் உறுதிப்பட்டுக்கொண்டிருக்கிறது. ஆகவே, தமிழக அரசு இத்தகைய அடிப்படையற்ற விமர்சனங்களுக்காக அச்சப்படாமல், தகுதித் தேர்வைத் தொடர்ந்து முறைப்படி, நடத்தவும், அதில் தேர்ச்சி பெறுவோரை மட்டுமே பணியமர்த்தவும் செய்தல் வேண்டும். அதுமட்டுமே அடுத்த தலைமுறைக்கு நல்ல ஆசிரியர்களை வழங்கும் செயலாக இருக்கும்.
மேலும், தற்போதைய ஆசிரியர்கள் எந்த அளவுக்குத் தங்கள் பாடங்களில் ஆழமும் விரிவும் கொண்ட அறிவுப்புலம் பெற்றிருக்கிறார்கள் என்பது இன்றியமையாத கேள்வி. ஒருமுறை பணியில் சேர்ந்துவிட்டால், அந்த ஆசிரியருக்குச் சம்பளம் மட்டுமே வழங்க வேண்டும் என்பது எந்த நாட்டிலும் இல்லாத ஒரு நடைமுறை. ஆகவே, ஆசிரியர்கள் அனைவருக்கும், அவர்கள் பணியில் சேர்ந்த பிறகு, ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை, சுய ஆய்வுத் தேர்வு ஒன்றை நடத்துவது அவசியமாகிறது.
காலத்துக்கு ஏற்ப ஆசிரியர்கள் தங்கள் அறிவை வளர்த்துக்கொண்டிருக்கிறார்களா, இவர்களுக்குத் தாங்கள் நடத்தும் பாடப்புத்தகத்தில் உள்ள விஷயங்களாகிலும் முழுமையாகத் தெரிந்திருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள இத்தகைய சுய ஆய்வுத் தேர்வு அவசியம். அந்தத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே ஆசிரியர்களாகத் தொடர அனுமதிக்க வேண்டும். இதற்கு ஆசிரியர்கள் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் என்பது உறுதி. ஆனாலும், ஓர் ஆசிரியர் காலத்தால் பின்தங்கிவிட்டு, ஒரு மாணவனுக்கு எப்படி அறிவு புகட்ட முடியும்? தகுதியற்ற ஒருவருக்கு மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வழங்கிக் கொண்டிருப்பது எந்த வகையில் நியாயம்?
ஒரு சாதாரண தொழிலாளிக்கும்கூட புதிய இயந்திரங்களில் பயிற்சி அளித்து அவரைத் தரப்படுத்துகிறார்கள். மருத்துவர்கள், பொறியாளர்கள் தங்கள் துறையின் தொழில்நுட்ப வளர்ச்சியைப் புத்தாக்கப் பயிற்சிகள் மூலம் வளர்த்துக்கொள்கிறார்கள். ஓர் ஆசிரியர் காலத்துக்கேற்ற அறிவுப்புலம் கொண்டிருக்கிறாரா என்பதை அறிய சுயஆய்வுத் தேர்வு நடத்துவதில் என்ன தவறு?

Saturday, November 17, 2012

பி.எட்., எம்.எட்., படிப்புகளில் சேர நுழைவுத்தேர்வு



சென்னை: பி.எட்., - எம்.எட்., உள்ளிட்ட, ஆசிரியர் கல்வி படிப்பு சேர்க்கைக்கு, நுழைவுத்தேர்வு முறையை அமல்படுத்த, மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது.
நீதிபதி வர்மா குழு அளித்த பரிந்துரை அறிக்கையின் அடிப்படையில், இந்த முடிவை எடுத்துள்ளது. இந்த பரிந்துரைக்கு, கல்விக்கான மத்திய ஆலோசனை வாரிய கூட்டத்தில், ஒப்புதலும் வழங்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும், ஆசிரியர் கல்வியில் கொண்டு வர வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்தும், தரமான ஆசிரியரை தேர்வு செய்வதற்கான வழிமுறைகள் குறித்தும் ஆய்வு செய்து, பரிந்துரை அறிக்கை வழங்க, சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி வர்மா தலைமையில் குழு அமைத்து, மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. வர்மா குழு, சமீபத்தில், தன் பரிந்துரையை, மத்திய அரசிடம் சமர்ப்பித்தது.

பரிந்துரையில், "தரமான கல்வியை அளிக்க வேண்டும் எனில், தரமான ஆசிரியரை நியமனம் செய்ய வேண்டும். அதற்கு, பி.எட்., - எம்.எட்., மற்றும் ஆசிரியர் கல்வி பட்டய படிப்பு ஆகிய ஆசிரியர் கல்வி படிப்பு சேர்க்கையில், நுழைவுத் தேர்வு முறையை அமல்படுத்த வேண்டும்" என, தெரிவிக்கப்பட்டிருந்தது.
தமிழகத்தில் நடந்த, முதல், டி.இ.டி., தேர்வை, கிட்டத்தட்ட, ஏழு லட்சம் பேர் எழுதிய போதும், 1 சதவீதத்திற்கும் குறைவாக, வெறும், 2,448 பேர் மட்டுமே தேர்வு பெற்றதை, வர்மா குழு சுட்டிக் காட்டி, நுழைவுத் தேர்வின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது.

தமிழகத்தின் நிலைப்பாடு:
  வர்மா குழுவின் பரிந்துரை அறிக்கை, சமீபத்தில், டில்லியில் நடந்த கல்விக்கான மத்திய ஆலோசனை வாரிய கூட்டத்தில் வைக்கப்பட்டு, வாரியத்தின் ஒப்புதலும் பெறப்பட்டது. கூட்டத்தில், பல்வேறு மாநில பிரதிநிதிகள், ஆசிரியர் கல்விக்கான நுழைவுத் தேர்வு திட்டத்தை ஆதரித்துள்ளனர். ஆனால், இந்தவிவகாரத்தில், தமிழக அரசின் நிலைப்பாடு தெரியவில்லை.
30 ஆயிரம் மாணவர்கள்
தமிழகத்தில், 700 ஆசிரியர் கல்வி கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில், ஆண்டுதோறும், 40 ஆயிரம் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். ஆசிரியர் கல்வி பட்டயத் தேர்வு படிப்புகளில், 30 ஆயிரம் பேர் வரை சேர்கின்றனர். இந்த படிப்புகளின் சேர்க்கைக்கு, தற்போது நுழைவுத்தேர்வு கிடையாது.
ஆசிரியர் கல்வி பட்டயத் தேர்வு விண்ணப்பதாரர்கள், பட்டப் படிப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில் பெற்ற மதிப்பெண் மற்றும் இன சுழற்சி அடிப்படையில், தேர்வுப் பட்டியலை வெளியிட்டு, கலந்தாய்வு அடிப்படையில் சேர்க்கை நடத்தப்படுகிறது.
இந்த முறையால், தரமான ஆசிரியரை தேர்வு செய்ய முடியாது என்பதை, டி.இ.டி., தேர்வு, வெட்ட வெளிச்சமாக்கி விட்டது. எனவே, நுழைவுத் தேர்வு முறையை அமல்படுத்தும் மத்திய அரசின் முடிவுக்கு ஆதரவு தெரிவிப்பது குறித்து, உயர்கல்வித் துறை தீவிரமாக ஆலோசித்து வருவதாக, உயர்கல்வி வட்டாரங்கள் தெரிவித்தன. தமிழக அரசின் நிலைப்பாடு குறித்த அறிவிப்பு, அடுத்த கல்வியாண்டு சேர்க்கைக்கு முன்னதாக வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து, பல்கலைக்கழக ஆசிரியர் சங்க பொதுச் செயலர் பிச்சாண்டி கூறியதாவது:
 கலை, அறிவியல் பட்டதாரிகள் மட்டுமே, பி.எட்., - எம்.எட்., படிப்புகளில் ஆர்வம் காட்டுகின்றனர். நுழைவுத் தேர்வு திட்டத்தை அமல்படுத்துவதற்கு முன், கல்லூரி பாடத் திட்டங்களின் தரத்தை உயர்த்த வேண்டும்.  இல்லை எனில், நகரங்களைச் சேர்ந்த மாணவர்கள் மட்டுமே, ஆசிரியர் கல்விக்கான நுழைவுத் தேர்வில் வெற்றி பெறுவர். கிராமப்புற பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களின் நிலை, கேள்விக்குறி ஆகிவிடும்.
இவ்வாறு பிச்சாண்டி தெரிவித்தார்.

Tuesday, November 13, 2012

தகுதி மதிப்பெண்ணை, 55 சதவீதமாக நிர்ணயிக்கக் கோரி, அரசுக்கு மனு

நாமக்கல் மாவட்டம், அனங்கூரைச் சேர்ந்தவர் சங்கீதாஅருந்ததியின சமூகத்தைச் சேர்ந்தவர்ஐகோர்ட்டில், இவர் தாக்கல் செய்த மனு: நான், பிஎஸ்சி, மற்றும் பிஎட், பட்டம் பெற்றுள்ளேன்ஆசிரியர் தகுதி தேர்வில், முதல் தாளில், 5733 சதவீதம், இரண்டாம் தாளில், 5733, சதவீதம் பெற்றேன்60 சதவீத மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கே, சான்றிதழ் சரிபார்ப்புக்கு கடிதம் அனுப்பப்பட்டதுஎனக்கு அனுப்பப்படவில்லைஇடைநிலை ஆசிரியர்கள், 7,000 பணியிடங்களுக்கு, முதல் தாளில், 10 ஆயிரத்து 397 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்; ஆனால், பட்டதாரி ஆசிரியர்களைப் பொறுத்தவரை, 20 ஆயிரம் இடங்கள் தேவைப்படுகின்றன8,849 பேர் தான் தேர்ச்சி பெற்றுள்ளனர்எனவே, பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப, பற்றாக்குறை உள்ளதுஇடஒதுக்கீட்டுப் பிரிவினரைப் பொறுத்தவரை, சலுகைகள் வழங்க, அரசுக்கு அதிகாரம் உள்ளதுபட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களைப் பொறுத்தவரை, ஐந்து சதவீத மதிப்பெண் சலுகை வழங்கினால், அதாவது, 60 சதவீதத்துக்குப் பதில், 55 சதவீத மதிப்பெண் எடுத்தால் போதுமானது, என, இருக்க வேண்டும்எனவே, தகுதி மதிப்பெண்ணை, 55 சதவீதமாக நிர்ணயிக்கக் கோரி அரசுக்கு ,மனு அனுப்பினேன்தகுதி மதிப்பெண்ணில், எனக்கு சலுகை வழங்கி, சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்குமாறு உத்தரவிட வேண்டும்
இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளதுஇம்மனு, நீதிபதி சந்துரு முன், விசாரணைக்கு வந்ததுமனுதாரர் சார்பில், வழக்கறிஞர் ஆர்நீலகண்டன் ஆஜரானார்மனுவுக்கு இரண்டு வாரங்களில் பதிலளிக்கும்படி, அரசு க்கு நோட்டீஸ் அனுப்ப, நீதிபதி சந்துரு உத்தரவிட்டுள்ளார்

மீண்டும் மீண்டும் ஃபெயில்!

மாணவர்களுக்கு இதுவரை ஃபெயில் போட்ட ஆசிரியர்கள், மறுபடிமறுபடி ஃபெயில் ஆகிக்கொண்டு இருக்கிறார்கள். ஏற்கெனவே நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் பல லட்சம் பேர் எழுதி சில ஆயிரம்தான் தேறினர். மறு தேர்வும் அப்படியே ஆகி இருக்கிறது!
தேவையான ஆட்களைத் தேர்வு செய்ய முடியாமலே மீண்டும் ஒருமுறை நடந்து முடிந்திருக்கிறது ஆசிரியர் மறுதகுதித்தேர்வு. கடந்த முறைபோல் இந்த முறை குற்றச்சாட்டுக்கள் அதிகம் இல்லை. ஆனால், தேர்வில் கலந்துகொண்டோருக்கு பல்வேறு விதமான ஆதங்கங்களும் சந்தேகங்களும் இருக்கின்றன.
20,525 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் 7,194 இடைநிலை ஆசிரியர்களைத் தேர்வு செய்ய, கடந்த ஜூலை மாதம் ஆசிரியர் தேர்வு ஆணையம் தகுதித் தேர்வை நடத்தியது. அதில் மிகக் குறைந்த பட்சமாக 0.33 சதவிகிதம் பேரே தேர்ச்சி அடைந்தனர். அதனால், அதிர்ந்துபோன தேர்வு ஆணையம் உடனடியாக மறு தேர்வை அறிவித்து கடந்த அக்டோபர் 14-ம் தேதி அதை நடத்தி முடித்தது. முதல்முறை ஆறரை லட்சம் பேரும், இரண்டாம் முறை ஆறே முக்கால் லட்சம் பேரும் தேர்வு எழுதினர். இந்த முறை இடைநிலை ஆசிரியர்கள் தேவைப்படும் அளவுக்கு தேர்ச்சி பெற்றுவிட... பட்டதாரி ஆசிரியர்கள் குறைவாகவே தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது 20,525 ஆசிரியர்கள் தேவைப்படும் இடத்தில் 8,849 பேர் மட்டுமே பாஸ்.

http://www.vikatan.com/jv/2012/11/mqywuy/images/p37.jpg
இந்த நிலையில்தான் தேர்வு எழுதிய ஆசிரியர்கள் மத்தியில் சில குமுறல்கள்...
தமிழ்நாடு பி.எட். பட்டதாரிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பாலசுப்ரமணியன், ''மத்திய அரசின் கட்டாயக் கல்வி சட்டத்தின் அடிப்படையில் தமிழ்நாட்டில் இந்த வருடம் இந்த ஆசிரியர் தகுதித்தேர்வை நடத்த ஆரம்பித்து இருக்கிறார்கள். இனி,  இந்த தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாமல் யாரும் ஆசிரியராக முடியாது. கடந்த ஜூலை மாதம் தகுதித்தேர்வை நடத்தியபோது கொடுக்கப்பட்ட நேரம் குறைவு. கேள்விகளும் கடினம். அவற்றைச் சுட்டிக்காட்டிய பிறகு இப்போது மறுதேர்வு. இதிலும் குழப்பமான கேள்விகள், பாடத்திட்டத்தின் வெளியில் இருந்து 23 கேள்விகள் இருந்தன. அதனால், இந்த முறையும் தேவையான பட்டதாரி ஆசிரி யர்களைத் தேர்வு செய்ய முடியவில்லை'' என்றார் விளக்கமாக.
பி.எட். பட்டதாரிகள் சங்கத்தின் தஞ்சை மாவட்டத் தலைவர் கார்த்திகேயன், ''மாநில அரசு விரும்பினால் இடஒதுக்கீட்டு அடிப் படையில் மதிப்பெண்களை குறைத்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு சொல்லி இருக்கிறது. அதன் அடிப்படையில் தேர்ச்சிக்கான 60 சதவிகிதம் என்பதை 50 சதவிகிதம் வரையிலும் குறைத்தால், தேவைப்படும் பட்டதாரி ஆசிரியர்கள் கிடைத்துவிடு வார்கள். அதை அமல்படுத்தினால், வருடக்கணக்கில் காத்திருக்கும் பல்லாயிரம் ஆசிரியர்கள் வேலைக்குப் போக ஒரு வாய்ப்பு கிடைக்கும். தமிழக அரசு உடனடியாக இதைச் செயல்படுத்த வேண்டும்'' என்கிறார்.
இடைநிலை ஆசிரியர்களோ வேறு வகையில் புலம்பித் தீர்க்கிறார்கள். சிறப்பு இடைநிலை ஆசிரியர்கள் சங் கத்தின் தலைவர் ரவி, ''ஒரு பாடத் திட் டத்தைச் சொல்லி, இதுதான் தேர்வில் வரும் என்றார்கள். ஆனால், அதை விடுத்து வெளியில் இருந்து கேள்விகளைக் கேட்கிறார்கள். எட் டாம் வகுப்பு வரை பாடத் திட்டம் இருக்க வேண்டிய இடைநிலை ஆசிரியர்களின் கேள்வித்தாளில் பி.எட். பாடப்புத்தகத்தில் இருந்து 12 கேள்விகள் இருந்தன. மொத்தமாக 26 கேள்விகள் பாடத்திட்டத்தின் வெளியில் இருந்து கேட்கப்பட்டு இருந்தன. அதை, உரிய ஆதாரங்களோடு தேர்வாணையத்துக்கு எடுத்துச் சென்றும் எந்தப் பதிலும் இல்லை. ஆனால், ஏழு மதிப்பெண்களை மட்டும் அதிகரித்து இருக்கிறார்கள். 26 மதிப்பெண்களையும் முழுதாகக் கொடுத் திருந்தால், கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் வரை தேர்ச்சிபெற்று இருப்பார்கள்'' என்கிறார்.
இதுதவிர இன்னொரு சந்தேகமும் ஆசிரியர்கள் மத்தியில் பலமாக உலவுகிறது. 'ஆசிரியர் வேலை வேண்டும் என்றால், இரண்டரை லட்ச ரூபாய் கொடுங்கள். நிச்சயம் வேலை வாங்கித் தருகிறோம்என்று பலரையும் வெளிப்படையாக அணுகிப் பேரம் பேசிக்கொண்டு இருந்தனர் சிலர். அவர்களின் வலையில் விழுந்தவர்கள் அனைவருமே இப்போது நடந்த தேர்வில் வெற்றிபெற்று இருக்கிறார்களாம். அதனால், இந்தத் தேர்வில் பணத்துக்கும் பெரிய பங்கு இருக்குமோ என்றும் ஐயப்படுகிறார்கள்.
இப்படி இரண்டு தரப்பினரும் கோரிக்கைகள் விடுக்க... கல்வித்துறையோ அலட்டிக்கொள்ளாமல் பதில் சொல்கிறது. ''மத்திய அரசின் ஆசிரியர் தேர்வுகளில் மூன்று சதவிதம் பேர்தான் தேர்ச்சி பெறுவார்கள். அப்படி தேர்ச்சி பெற்றால்தான் அது சரியான தேர்வாக இருக்கும். இப்போது நாங்கள் நடத்தி இருக்கும் தேர்விலும் மூன்று சதவிகிதம் பேர்தான் தேர்ச்சி அடைந்து இருக்கின்றனர். இது ஒன்றே தேர்வின் தரத்தைச் சொல்லும். இந்தத்தேர்வு முழுக்க முழுக்க வெளிப் படையாகவும் நேர்மையாகவும் நடந்த தேர்வு. இதில் எந்த முறைகேட்டுக்கும் வாய்ப்பே இல்லை. தேர்வு எழுதியவர்கள் சொல்லும் குற்றச்சாட்டு... கேள்விகள் வெளியில் இருந்து கேட்கப்படுகிறது என்பதுதான். அதில் உண்மை இல்லை. பாடத்திட்டத்தில் இருந் துதான் கேட்கப்பட்டது. நுண்ணறிவைச் சோதிக்கும்விதமாக மாற்றிக் கேட்டு இருந்தோம். வல்லுனர் குழுவினர் பரிசீலித்து விட்டு சில மதிப்பெண்களை சேர்க்கச் சொன்னார்கள். அதைச்சேர்த்துத்தான் முடிவு வெளியிட்டு இருக்கிறோம். இடஒதுக்கீட்டு முறை யில்தான் பணி அமர்த்துகிறோம்'' என்கிறார்கள்.
ஆசிரியப் பெருந்தகைகளே... ஒழுங்காக படித்து தேர்வு எழுதி வெற்றிபெறுவதைத் தவிர, இனி உங்களுக்கு வேறு மார்க்கம் இல்லை!
- கரு.முத்து, வீ.மாணிக்கவாசகம்

Saturday, November 10, 2012

TET தேர்வு பெற்ற அனைவருக்கும் வேலை கிடைக்குமா?

தேர்ச்சி பெற மிக கடுமையாக உழைத்து தேர்வில் வெற்றி பெற்ற பின் அனைவருக்கும் வேலை கிடைக்குமா என ஒரு விரிவான அலசல்.

BT Post Vacant List (Previous Collection Data as on July 2012 )
தமிழ்=1778
ஆங்கிலம்=5867
கணிதம்=2606
இயற்பியல்=1213
வேதியியல்=1195
உயிரியல்=518
தாவரவியல்=513
வரலாறு=4185
புவியியல்=1044
தெலுங்கு = 12
உருது=01
மொத்தம்=18932

SG Post Vacant Details = 5451
(Source - ஜூலை தினத்தந்தி நாளிதழ்)

இனி அலசல் !

1. சென்ற சில மாதங்களில் பனி நிரவல் செய்த பிறகு தற்போதைய காலி பணியிடம் எந்த அளவில் மீதம் இருக்கும்?


2. தகுதி தேர்வில் மொத்தமாக வெற்றி பெற்றவர்கள் பட்டியல் மட்டுமே வெளியிடப்பட்டு உள்ள நிலையில் பாட  வாரியாகவும், சாதி இன, மொழி வாரியாகவும் வெற்றி பெற்றவர்கள் பட்டியல் இதுவரை வெளியிடப்பட வில்லை.

3. பணியிடத்தை நிரப்பும் போது அரசு இதுவரை சாதி வாரியான இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நிரப்பி வரும் போது தற்போதைய TET தேர்வில் குறிப்பிட்ட இனத்தை சேர்ந்தவர்கள் மிக குறைவாக தேர்ச்சி பெற்று இருந்தால் அந்த பணியிடங்களை காலியாக வைக்க இயலுமே தவிர மற்ற இனத்தை சேர்ந்தவர்களை கொண்டு நிரப்ப இயலாது.

4. ஒரு கருத்தை நினைவில் கொள்ள வேண்டும்:-TET பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெற்றி பெற்ற பலரும் தாள் 1 இலும் வெற்றி பெற்று உள்ள நிலையில் அவர்கள் பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கு தான் செல்ல விரும்புவர். எனில் இடைநிலை தேர்வில் மிக குறைந்த மதிப்பெண் பெற்ற பலருக்கும் Posting Chance அதிகரிக்கிறது.

5.முதல் TET தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் மறு தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் ஒரே நாளில் Online Councelling அந்தந்த மாவட்டத்தில் நடை பெறலாம் . அப்போது முதல் தேர்வில் வெற்றி பெற்ற அனைவருக்கும் பணியிட வாய்ப்பு உண்டு. மறு தேர்வில் சான்றிதழ் சரி பார்த்த பின் அவரவர்கள் பெற்ற Weightage மதிப்பெண், தமிழ் வழி பயின்றதற்கான முன்னுரிமை, இதர முன்னுரிமை (இராணுவம், விதவை ) போன்றவை அடிபடையில் Rank List வெளியிட்ட பிறகே பணியிட வாய்ப்பு குறித்து இறுதியாக அறிய இயலும். Rank List வெளியிட ஓரிரு வாரங்கள் ஆகலாம்.

6. இருப்பினும் தாள் 1 மற்றும் தாள் 2 இல் வெற்றி பெற்ற அனைவருக்குமே பணியிட வாய்ப்பு கிடைத்தால் நாம் மிகுந்த மகிழ்ச்சி அடைவோம்.