Monday, December 15, 2014

அந்த 652 பள்ளிகளில் படிப்பவர்கள் தான் மாணவர்களா?

ஞாபகம் இருக்கிறதா?

காலியாக இருக்கும் 1440 கணினி ஆசிரியர்  பணியிடங்களை வரும் ஜனவரி 31ம் தேதிக்குள், நிரப்ப வேண்டும் என கோர்ட் உத்தரவு இட்டது. இது நடந்தது 2013ல்...

இப்ப, 2015 ஜனவரி வந்து விட்டது. அதாவது 16 மாதங்களுக்கு  முன், இதில், இரண்டு கல்வியாண்டுகள் ஓடிவிட்டன. ஆசிரியர்களே இல்லாமல், இரண்டு ஆண்டு கணினி பிரிவு மாணவர்கள் தட்டு தடுமாறி, தேறினார்களோ, திசைமாறினார்களோ தெரியாது.

இந்நிலையில், தற்போது, கோர்ட் உத்தரவை நிறைவேற்றும் முயற்சியில், கல்வித்துறை ஈடுபட்டுள்ளது. அதாவது,  652 பணியிடங்களை மட்டும் நிரப்ப, சான்றிதழ் சரிப்பார்ப்பு நடத்தப்படும் என தேர்வு வாரியம் அறிவி்த்துள்ளது. இதற்கான பதிவுமூப்பு பரிந்துரை பட்டியலில், உள்ள குளறுபடிகளை தினசரி நாளேடுகள் சுட்டிக்காட்டியபோதும், அதை சரி செய்ததாக இது வரை எந்த தகவலும் இல்லை.
இது தொடர்பாக, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

அதாவது, 1440 காலி இடங்களுக்கு தேர்வு செய்யும் பணி நடக்கிறதா என்றால், அதுவும் இல்லை. வெறும் 652 இடங்களை மட்டும் நிரப்பப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த 652 பள்ளிகளில் படிப்பவர்கள் தான் மாணவர்களா? மீதமுள்ள 788 பள்ளிகளில் கணினி  ஆசிரியர்கள் இல்லாமல் கணினி பிரிவில் படித்து வரும் மாணவர்களின் நலனை யார் பாதுகாப்பது?

Saturday, December 13, 2014

என்னதான் நடக்கிறது கணினி ஆசிரியர்களின் நியமனத்தில்...?

கணினி ஆசிரியர்களை குழப்பும் விதமாகவும், தங்களின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் செய்து கொள்ள விரும்பாத அரசு எந்திரங்களை எதிர்த்து போராட வலுவாக அமைப்பு தேவை.

652 கணினி ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு ஓராண்டு கடந்து விட்ட நிலையில், தற்போது, புதிய ஆசிரியர்களை நியமனம் செய்ய பதிவு மூப்பு அடிப்படையில் பரிந்துரை பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதில், கணினி பட்டதாரிகளை காட்டிலும், இதர பட்டதாரிகள் அதாவது இயற்பியல், கணிதம், உயிரியல் பட்டதாரிகளின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
இதை மாற்றி வெளியிட வேண்டும் என, திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த ஓராண்டாக அரசு பள்ளிகளில் கணினி ஆசிிரயர்கள் இல்லாமலும், தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படாமலும், தற்போது அரையாண்டு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அரையாண்டு விடுமுறை முடிந்து, ஜனவரி 2ம் தேதி பள்ளிகள் செயல்பட துவங்கும். துவங்கியதும், பிராக்டிகல் தேர்வு நடத்தப்படும், பிப்ரவரியுடன் பிளஸ்2வுக்கு வகுப்புகள் முடிந்து விடும்.இந்நிலையில், புதிதாக, பிடிஏ மூலமாக கணினி ஆசிரியர்களை நியமனம் செய்து கொள்ள அரசு உத்தரவு போட்டுள்ளது. இதனால், கணினி ஆசிரியர்கள் மதுரை கோர்ட்டில் தொடர்ந்து வழக்கு மற்றும் பரிந்துரை பட்டியலில் உள்ள குளறுபடி காரணமாக, சான்றிதழ் சரிபார்ப்பு தள்ளிப்போகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வரும் 19ம் தேதி, கணினி ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான சான்றிதழ் சரிபார்ப்பு குறி்தது,. மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கான கூட்டம் சென்னையில் நடத்தப்பட உள்ளது என அரசு தெரிவித்துள்ளது.
ஏன் இத்தனை குழப்பம். என்னதான் நடக்கிறது கணினி ஆசிரியர்களின் நியமனத்தில்...?