சென்னை, டிச. 7: தமிழகம் முழுவதும் உள்ள 710 நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக, தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்ட செய்தி:
ஏழை, எளிய குழந்தைகள் இடைநிற்றல் ஏதுமின்றி கல்வி பயில வசதியாக மதிய உணவு, புத்தகங்கள், சீருடை போன்றவற்றோடு கல்வி உதவித் தொகை, சைக்கிள், லேப்-டாப் போன்றவையும் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, 710 ஊராட்சி ஒன்றிய-மாநகராட்சி-நகராட்சி-நலத் துறை நடுநிலைப் பள்ளிகள், இந்தக் கல்வியாண்டிலேயே 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை கொண்ட உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
தரம் உயர்த்தப்படும் பள்ளிகள் முழுமையாகச் செயல்படுவதற்காக, ஒவ்வொரு பள்ளிக்கும் 5 பட்டதாரி ஆசிரியர் வீதம் 3,550 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், 710 ஆய்வக உதவியாளர் பணியிடங்கள், 710 இளநிலை உதவியாளர் பணியிடங்கள் ஆகியவற்றை ஏற்படுத்தவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதற்காக ஆண்டுக்கு ரூ. 113 கோடியே 38 லட்சம் செலவு ஏற்படும்.
இந்தப் பள்ளிகளுக்கு புதிய வகுப்பறைகள், அலுவலக வசதிகள், அறிவியல், கணினி ஆய்வகம், நூலகம், கழிப்பிடம், தளவாடப் பொருள்கள் போன்ற செலவுகளுக்காக ஒவ்வொரு பள்ளிக்கும் ரூ. 58 லட்சம் வீதம் 710 பள்ளிகளுக்கு ரூ. 412 கோடியே 65 லட்சம் ரூபாய் செலவிடவும் முதல்வர் ஒப்புதல் அளித்துள்ளார்.
சுமார் 5 கி.மீ. சுற்றளளவில் உயர்நிலைப் பள்ளி வசதி இல்லாத நடுநிலைப் பள்ளிகள், குடியிருப்புகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் இடங்கள், 8-ம் வகுப்பில் 70 மாணவர்களுக்குக் குறையாமல் சேர வாய்ப்புள்ள நடுநிலைப் பள்ளிகள், போக்குவரத்து வசதியற்ற, இயற்கைத் தடை உள்ள பகுதிகளில் உள்ள பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்த முன்னுரிமை வழங்கப்படும்.
831 தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்கள் நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களாக தரம் உயர்த்தப்படுகின்றன. இதனால் ஆண்டுக்கு ரூ. 1.19 கோடி கூடுதல் செலவாகும்.
அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தின் கீழ், தொடக்கக் கல்வித் துறையில் 1,581 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களையும், பள்ளிக் கல்வித் துறையில் 1,282 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களையும் உருவாக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதனால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 75 கோடியே 40 லட்சம் செலவாகும். இதேபோன்று 6 முதல் 8 வரையிலான வகுப்புகளில் பணிபுரிய 3,565 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களைக் கூடுதலாக தோற்றுவிக்கவும் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களைச் சேர்த்து மொத்தம் 6,428 கூடுதல் பணியிடங்களை உருவாக்க தமிழக அரசுக்கு மொத்தமாக ரூ. 134 கோடி செலவாகும்.
இந்தக் கல்வியாண்டில் 65 தொடக்கப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தவும், கூடுதலாக 195 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களைத் தோற்றுவிக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்த நடவடிக்கைகள் காரணமாக ஊரகப் பகுதிகளில் படிக்கும் மாணவர் மாணவியர் பயனடையலாம்.வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக, தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்ட செய்தி:
ஏழை, எளிய குழந்தைகள் இடைநிற்றல் ஏதுமின்றி கல்வி பயில வசதியாக மதிய உணவு, புத்தகங்கள், சீருடை போன்றவற்றோடு கல்வி உதவித் தொகை, சைக்கிள், லேப்-டாப் போன்றவையும் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, 710 ஊராட்சி ஒன்றிய-மாநகராட்சி-நகராட்சி-நலத் துறை நடுநிலைப் பள்ளிகள், இந்தக் கல்வியாண்டிலேயே 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை கொண்ட உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
தரம் உயர்த்தப்படும் பள்ளிகள் முழுமையாகச் செயல்படுவதற்காக, ஒவ்வொரு பள்ளிக்கும் 5 பட்டதாரி ஆசிரியர் வீதம் 3,550 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், 710 ஆய்வக உதவியாளர் பணியிடங்கள், 710 இளநிலை உதவியாளர் பணியிடங்கள் ஆகியவற்றை ஏற்படுத்தவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதற்காக ஆண்டுக்கு ரூ. 113 கோடியே 38 லட்சம் செலவு ஏற்படும்.
இந்தப் பள்ளிகளுக்கு புதிய வகுப்பறைகள், அலுவலக வசதிகள், அறிவியல், கணினி ஆய்வகம், நூலகம், கழிப்பிடம், தளவாடப் பொருள்கள் போன்ற செலவுகளுக்காக ஒவ்வொரு பள்ளிக்கும் ரூ. 58 லட்சம் வீதம் 710 பள்ளிகளுக்கு ரூ. 412 கோடியே 65 லட்சம் ரூபாய் செலவிடவும் முதல்வர் ஒப்புதல் அளித்துள்ளார்.
சுமார் 5 கி.மீ. சுற்றளளவில் உயர்நிலைப் பள்ளி வசதி இல்லாத நடுநிலைப் பள்ளிகள், குடியிருப்புகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் இடங்கள், 8-ம் வகுப்பில் 70 மாணவர்களுக்குக் குறையாமல் சேர வாய்ப்புள்ள நடுநிலைப் பள்ளிகள், போக்குவரத்து வசதியற்ற, இயற்கைத் தடை உள்ள பகுதிகளில் உள்ள பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்த முன்னுரிமை வழங்கப்படும்.
831 தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்கள் நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களாக தரம் உயர்த்தப்படுகின்றன. இதனால் ஆண்டுக்கு ரூ. 1.19 கோடி கூடுதல் செலவாகும்.
அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தின் கீழ், தொடக்கக் கல்வித் துறையில் 1,581 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களையும், பள்ளிக் கல்வித் துறையில் 1,282 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களையும் உருவாக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதனால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 75 கோடியே 40 லட்சம் செலவாகும். இதேபோன்று 6 முதல் 8 வரையிலான வகுப்புகளில் பணிபுரிய 3,565 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களைக் கூடுதலாக தோற்றுவிக்கவும் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களைச் சேர்த்து மொத்தம் 6,428 கூடுதல் பணியிடங்களை உருவாக்க தமிழக அரசுக்கு மொத்தமாக ரூ. 134 கோடி செலவாகும்.
இந்தக் கல்வியாண்டில் 65 தொடக்கப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தவும், கூடுதலாக 195 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களைத் தோற்றுவிக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்த நடவடிக்கைகள் காரணமாக ஊரகப் பகுதிகளில் படிக்கும் மாணவர் மாணவியர் பயனடையலாம்.
No comments:
Post a Comment