Monday, December 5, 2011

தொடக்கப் பள்ளிகளில் கணினி வழி கல்வி


கோவை, டிச. 3: தமிழகத்தில் கிராமப்புற மற்றும் மலைவாழ் பகுதிகளில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் கணினி வழிக் கல்வியை (ஸ்மார்ட் வகுப்பறை போல) அமல்படுத்திட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
 அனைவருக்கும் கல்வி திட்டம் (எஸ்.எஸ்.ஏ.) மூலம் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான தொடக்கப் பள்ளிகளில் தகவல் தொழில்நுட்ப வாயிலான கல்வியை செயல்படுத்திட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
 அந்த வகையில் ஒவ்வொரு மாவட்ட ஆட்சியருக்கும், முதல்வர் சுற்றறிக்கை அனுப்பி வைத்துள்ளார். அதில், மாவட்ட ஆட்சியர் மூலமாக ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள தொடக்கப் பள்ளிகள், குறிப்பாக கிராமப்புற மற்றும் மலைவாழ் பகுதிகளில் உள்ள தொடக்கப் பள்ளிகளைக் கண்டறிந்து கணினி வழியிலான கல்வியை அமல்படுத்திட வலியுறுத்தப்பட்டுள்ளது.
 இதற்கான நிதி ஆதாரம் மற்றும் கணினி வழிக் கல்வியை செயல்படுத்துதல் தொடர்பாக ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
 அதன்படி, கோவை மாவட்டத்தில் திங்கள்கிழமை அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் முதன்மைக் கல்வி அலுவலர் பி.பொன்னையாவின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெறுகிறது. அதில் எடுக்கப்படும் முடிவுகள் தொடர்பான விவரம் மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்படும்.
 பின்னர் மாவட்ட ஆட்சியர் விரிவான அறிக்கையைத் தயாரித்து, அரசுக்கு அனுப்பி வைப்பார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
 எஸ்.எஸ்.ஏ. முதன்மை கல்வி அலுவலர்: கோவை மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் முதன்மைக் கல்வி அலுவலராக பி.பொன்னையா வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் திருவாரூர் மற்றும் நாகர்கோவிலில் முதன்மைக் கல்வி அலுவலராகப் பணியாற்றி வந்தார்.

No comments:

Post a Comment