பெரம்பலூர், டிச. 20:
சென்னையில் டிச. 28 ஆம் தேதி நடைபெறவுள்ள உண்ணாவிரதப் போராட்டத்தில்
பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தினர்கள் பங்கேற்க வேண்டும் என
அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு பதிவு மூப்பு
பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்டத் தலைவர் ரங்கநாதன்,
செயலர் அழகுமுத்து, பொருளாளர் விசுவநாதன் ஆகியோர் வெளியிட்ட செய்திக்
குறிப்பு:
தகுதி தேர்வு மற்றும் போட்டித் தேர்வுகளை எதிர்த்து, பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர் நியமனம் வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மாநிலத் தலைவர் ரத்தினகுமார் வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்தக் கோரிக்கையை நிறைவேற்றக் கோரி, டிச. 28 ஆம் தேதி சென்னை காயிதேமில்லத் நினைவிடம் எல்.ஐ.சி. அலுவலகம் அருகில் கவன ஈர்ப்பு அடையாள உண்ணாவிரதம் நடைபெறுகிறது.
இதில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து பதிவு மூப்பு பட்டாரி ஆசிரியர்களும் கலந்து கொள்ள வேண்டும். மேலும், இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் டிச. 25 ஆம் தேதி பெரம்பலூர் மதரஸô சாலையில் நடைபெறுகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment