Tuesday, December 6, 2011

நீதிமன்றத்தில் வழக்கு தொடர ஆசிரியர்கள்முடிவு



போட்டி தேர்வு மூலம் ஆசிரியர் நியமனம் செய்யப்படுவதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேலையில்லா பட்டதாரி ஆசிரியர் சங்கம் முடிவு செய்துள்ளது. 

தமிழகத்தில் கல்வித்துறையில் மார்ச் மாதத்திற்குள் 55 ஆயிரம் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டது. 
முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் இனிமேல் போட்டித்தேர்வு மூலமே நியமிக்கப்படுவார்கள் என்ற அறிவிப்பு கடந்த சில தினங்களுக்கு முன் வெளியானது. 

மேலும் பட்டதாரி ஆசிரியர்களும் முதலில் தகுதித்தேர்வு எழுத வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதில் 60 சதவீதம் மதிப்பெண் பெறும் ஆசிரியர்கள் அடுத்த கட்டமாக போட்டித்தேர்வில் பங்கெடுக்க வேண்டும்.

இதிலும் வெற்றி பெற்றால்தான் இனிமேல் ஆசிரியர்களாக நியமிக்கப்படுவார்கள் என அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் பட்டதாரி ஆசிரியர்கள் இனி தகுதித்தேர்வு மற்றும் போட்டித்தேர்வு என 2 தேர்வுகளை எழுத வேண்டும். 


அரசின் இந்த அறிவிப்புக்கு வேலையில்லா பட்டதாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர் சங்க பொதுக்குழு கூட்டம் நாளை 6ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தில் நடைபெறுகிறது.

இதில் கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் போராட்டம் நடத்துவது, அரசின் முடிவை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடருவது உள்ளிட்ட முடிவுகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக சங்க நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். 

No comments:

Post a Comment