அரசுப் பள்ளிகளில், பகுதி நேர அடிப்படையில், 16 ஆயிரத்து, 549
ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். விண்ணப்பங்கள் மீதான பரிசீலனைக்குப்
பின், நேற்று முன்தினத்தில் இருந்து, நேர்முகத் தேர்வு நடத்த வேண்டும் என,
தமிழக அரசு தெரிவித்திருந்தது.ஆனால், பல மாவட்டங்களில், விண்ணப்பங்கள்
மீதான பரிசீலனைப் பணிகள், இன்னும் முடியவில்லை. மேலும், மாவட்ட வேலை
வாய்ப்பு அலுவலகங்களில் இருந்து, பதிவுமூப்பு பட்டியலும் வரவில்லை. இதனால்
சென்னை, மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களில், நேர்முகத் தேர்வு துவங்கவில்லை.
இதுகுறித்து, அனைவருக்கும் கல்வி இயக்க வட்டாரங்கள் கூறும்போது,""சில மாவட்டங்களில், விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை முடியாததால், நேர்முகத்தேர்வு துவங்கவில்லை. ஆனாலும், நேர்முகத்தேர்வு பணிகள், ஏற்கனவே திட்டமிட்டபடி, ஜன.,15ம் தேதிக்குள் முடிக்கப்படும். அதற்கேற்ப, ஒவ்வொரு மாவட்டத்திலும், பல குழுக்கள் அமைக்கப்பட்டு, விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றனர்.

No comments:
Post a Comment