பெரம்பலூர்: பெரம்பலூர் கலெக்டர் தரேஷ்அஹமது வெளியிட்ட அறிக்கை:பெரம்பலூர்
மாவட்டத்தை சேர்ந்த அந்தந்த பதிவு மூப்புக்குட்பட்ட தகுதி வாய்ந்த
மனுதாரர்கள் அனைவரும் தங்களது வேலைவாய்ப்பு பதிவு அடையாள அட்டையுடன் வருகை
தந்து தங்களது பெயர் பரிந்துரை செய்யப்படுவதை டிச., 28ம் தேதிக்குள் உறுதி
செய்து கொள்ள வேண்டும்.உடற்கல்வி ஆசிரியர் மற்றும் ஓவிய ஆசிரியர்
பணியிடங்களுக்கு சென்னை, தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில்
தங்களது பட்டம் அல்லது பட்டய சான்றிதழை பதிவு செய்துள்ள அந்தந்த பதிவு
மூப்புக்குட்பட்ட பெரம்பலூர் மாவட்ட பதிவுதாரர்கள் தங்களது அந்த அலுவலக
அசல் பதிவு அடையாள அட்டை மற்றும் சான்றுகளுடன் தவறாமல் வருமாறும்
கோரப்படுகின்றனர்.
உடற்கல்வி ஆசிரியர், ஓவிய ஆசிரியர் தோட்டக்கலை டிப்ளமோ பயின்றவர்கள் தையல் ஆசிரியர் (டி.டி.சி) அல்லது டிப்ளமோ, இசை ஆசிரியர் (டி.டி.சி), கணிணி பயிற்றுநர், பட்டதாரி பயிற்றுநர், (ஆங்கிலம், சோசியாலஜி, சோசியல் ஒர்க் மற்றும் பிளாசபி) ஆகிய அனைத்து பிரிவுகளிலும்,
உடற்கல்வி ஆசிரியர், ஓவிய ஆசிரியர் தோட்டக்கலை டிப்ளமோ பயின்றவர்கள் தையல் ஆசிரியர் (டி.டி.சி) அல்லது டிப்ளமோ, இசை ஆசிரியர் (டி.டி.சி), கணிணி பயிற்றுநர், பட்டதாரி பயிற்றுநர், (ஆங்கிலம், சோசியாலஜி, சோசியல் ஒர்க் மற்றும் பிளாசபி) ஆகிய அனைத்து பிரிவுகளிலும்,
ஆதரவற்ற
விதவைகள்,
கலப்பு திருமணம் புரிந்தோர்.
இலங்கை தமிழர்கள்,
முன்னாள், இன்னாள்
ராணுவத்தினர் மற்றும் அவர்களை சார்ந்தவர்கள், சுதந்திர போராட்ட
தியாகிகளின் வாரிசுதாரர்கள்,
தமிழ்மொழி காவலர்களின் வாரிசுகள்,
அரசுக்கு
நிலம் ஒப்படைத்தவர்கள் மற்றும் அவரது வாரிசுதாரர்கள், மாற்றுத்திறனாளிகள்
ஆகிய முன்னுரிமை பிரிவுகளின்கீழ் வேலைவாய்ப்பு அலுவலகம், பெரம்பலூரில் நவ.,
30ம் தேதிக்கு முன்னதாக பதிவு செய்தவர்கள் மற்றும் அனைத்து பிரிவுகளிலும்
நவ.,30ம் தேதி வரை பதிவு செய்துள்ள அருந்ததியினர் பிரிவினரும் பெரம்பலூர்
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு தவறாமல் வருகை தந்து விளம்பர பலகையில்
ஒட்டப்பட்டுள்ளதில் தங்களது பெயர் உள்ளதா? என்பதை சரிபார்த்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment