Tuesday, December 6, 2011

பகுதிநேர ஆசிரியர் பணியிடங்கள் : ஆளுங்கட்சி அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள்,


சேலம் : அரசுப்பள்ளிகளில் பகுதிநேர ஆசிரியர் நியமனத்திற்கான விண்ணப்ப விநியோகம் நேற்று துவங்கியது. ஆளுங்கட்சி அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், மாவட்டசெயலாளர்கள் தங்களுக்கு வேண்டப்பட்ட ஆட்களை நியமிக்கும்படி பரிந்துரை கடிதம் கொடுத்துள்ளதால், கல்வித்துறை அதிகாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் (எஸ்எஸ்ஏ) கீழ், தமிழகம் முழுவதும் அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் புதிதாக 5,253 ஓவிய ஆசிரியர்கள், 5,392 உடற்கல்வி ஆசிரியர்கள், 5,904 தையல், இசை ஆசிரியர்கள் என மாநிலம் முழுவதும் மொத்தம் 16,549 பகுதி நேர ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர்.

இவர்களுக்கு Rs5000 தொகுப்பூதியம் வழங்கப்படும். இது, முற்றிலும் தற்காலிக பணி. பகுதிநேர ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தும் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்காக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரை தலைவராகக் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டு உள்ளது. எஸ்எஸ்ஏ இயக்க கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர், இக்குழுவின் உறுப்பினர் செயலராக இருப்பார்.

பகுதிநேர ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என அரசு அறிவித்த நாளில் இருந்தே, உடற்கல்வி மற்றும் தொழில்கல்வி ஆசிரியர்கள், அந்தந்த மாவட்ட எஸ்எஸ்ஏ அலுவலகங்களுக்கு படையெடுக்க ஆரம்பித்துவிட்டனர். இந்நிலையில், இப்பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்ப விநியோகம் நேற்று தொடங்கியது. வரும் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப விநியோகம் துவங்குவதற்கு முன்பே, ஆளுங்கட்சி அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், மாவட்டச் செயலாளர்கள் தங்களுக்கு வேண்டிய நபர்களை பகுதிநேர ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்று கல்வித்துறை அலுவலர்களுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பி உள்ளனர். இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், ÔÔ இதனால், பகுதி நேர ஆசிரியர் நியமனங்களை கல்வித்துறை அதிகாரிகள் சுதந்திரமாக நடத்திமுடிக்க முடியுமா? என்பது கேள்விக்குறிதான் என்றார்.

No comments:

Post a Comment