திருநெல்வேலி : தமிழகத்தில் 15 மையங்களில் இசை ஆசிரியர்களுக்கு திறன் வளர்
பயிற்சி வரும் 13ம் தேதி முதல் 17ம் தேதி வரை நடக்கிறது.தமிழகத்தில்
அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு மற்றும் அரசு மற்றும் அரசு உதவி பெறும்
உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் இசை ஆசிரியர்களுக்கு
அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின் சார்பில் வரும் 13ம் தேதி முதல்
17ம் தேதி வரை 5 நாட்கள் திறன் வளர் உண்டு, உறைவிட பயிற்சி நடத்த
உத்தரவிடப்பட்டுள்ளது.
இதில் இசையை ஆர்வத்துடன் மாணவர்கள் கற்றிட எளிய வழிமுறைகள், கற்பித்தல் முறைகள், தேவாரம் உள்ளிட்ட திருமறைகளின் இசை நயம், திவ்ய பிரபந்த பாசுரங்களின் இசை நயம், கோலாட்டம், கும்மி, குரல் வள பயிற்சி, வாத்திய இசை மூலம் திரைப்பட பாடல்களில் உள்ள ராகங்கள் கண்டறிய உதவுதல், தவில் பாடல்கள், நாட்டுப்புற பாடல்கள், வில்லுப் பாட்டு, தப்பாட்டம், கரகம், ஒயிலாட்டம் உட்பட பல்வேறு கலைகள் குறிச்சி பயிற்சி அளிக்கப்படுகிறது.இசை பாடம் கற்பித்தலை மெருகுபடுத்துதல், இந்திய இசையின் அடிப்படையான இலக்குகளும் தலைப்பில் நாதஸ்வரம், புல்லாங்குழல், தாரை, தப்பட்டை, பரை, கொம்பு, ஜண்டா, குடுகுடுப்பை, உடுக்கை, உருமி, நையாண்டி மேளம், சேர்ந்திசை, தாலாட்டு, ஒப்பாரி மற்றும் விழாக்களில் பாடப்படும் நாட்டுப்புற பாடல்கள், கிராமிய பாடல்கள் தமிழ் இசையை வளர்த்த ஆன்றோர் வரலாறும், பாடல்களும், பாடம் சார்ந்த பாடல்களை இசை அமைத்து பாடுதல், தோல் வாத்தியங்களின் தோற்றமும், வளர்ச்சியும், மிருதங்கங்கள் ஆகியவை குறித்தும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
தமிழகத்தில் 15 மையங்களில் இப்பயிற்சி வரும் 13ம் தேதி முதல் 17ம் தேதி வரை நடத்தப்படுகிறது.நெல்லை:>நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த இசை ஆசிரியர்களுக்கு திறன் வளர் பயிற்சி பாளை மேலத்திடியூர் பி.எஸ்.என் இன்ஜினியரிங் கல்லூரியில் 5 நாட்கள் நடக்கிறது. இதில் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த இசை ஆசிரியர்கள் பங்கேற்கின்றனர்.
ஏற்பாடுகளை அனைவருக்கும் இடை நிலைக் கல்வி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் முதன்மை கல்வி அலுவலர் பகவதி ஆலோசனையின் பேரில் மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் நந்தகுமார், பயிற்சி ஒருங்கிணைப்பாளர் ஆவுடையப்ப குருக்கள், தென்காசி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வநாகம், சேரன்மகாதேவி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகராஜன், பயிற்சி கருத்தாளர்கள், திட்டப் பணியாளர்கள் செய்து வருகின்றனர்

No comments:
Post a Comment