Friday, December 16, 2011

கம்ப்யூட்டர் ஆர்வத்தை ஏற்படுத்த பள்ளியில் "சில்ட்ரன்ஸ் கார்டன்'

சிவகங்கை : அரசு பள்ளி மாணவர்களிடம் "கம்ப்யூட்டர் டிசைனிங்' ஆர்வத்தை தூண்டும் வகையில், அரசு நடுநிலைப்பள்ளிகளில் "சில்டரன்ஸ் கார்டன்' அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய பள்ளிகளுக்கு இணையாக, அரசு பள்ளிகளில் "கம்ப்யூட்டர் லேப்' அமைத்து, மாணவர்களின் தனித்திறனை கம்ப்யூட்டரில் உருவாக்க வேண்டுமென, தமிழக முதல்வர் ஜெ., முதல் சட்டசபை கூட்டத்தில் அறிவித்தார்.
அதன்படி, மாணவர்கள் தயாரித்த வரைபடங்கள், "டிசைனிங்கை, கம்ப்யூட்டர் லேபில் பொருத்தி "எல்சிடி' மானிட்டர் மூலம் "ஸ்கிரீனில்' பிற மாணவர்களுக்கு ஒளிபரப்ப வேண்டும். இதன் மூலம், மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் கல்வியுடன் கூடிய தனித்திறன் உருவாகும். இப்பயிற்சியை மாணவர்களிடம் ஏற்படுத்த, நடுநிலைப் பள்ளிகளில் கம்ப்யூட்டர், "எல்சிடி'., மானிட்டர், "புரஜெக்டர்' வசதிகளை உருவாக்க, கல்வித்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. இத்திட்டத்தை ஒவ்வொரு மாவட்ட கலெக்டரும், அனைவருக்கும் கல்வி திட்டம் மூலம் செயல்படுத்த, உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று பள்ளிகளில் "லைப்ரரி கார்னர்' என்ற பெயரில், பள்ளி ஓய்வு அறை மேஜைகளில் பலதரப்பட்ட பாடப்புத்தகங்கள் மற்றும் நீதிநெறி, பொது அறிவு புத்தகங்களை வைக்க வேண்டும். அவர்கள் வகுப்பு ஓய்வு நேரத்தில் விரும்பிய புத்தகங்களை படிப்பர். மேலும், அறிவியல் கண்டுபிடிப்பிற்கான கருவிகளை "சயின்ஸ் கார்னர்' லேபில் வைத்து, புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான ஆயத்தப்

பணிகளில் ஒவ்வொரு அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களும் ஈடுபட்டுள்ளனர்.

இதையடுத்து, பள்ளிகளில், கம்ப்யூட்டர்  பட்டதாரிகளுக்கான   பணியிடங்கள் ஏற்படுத்தப்படுமா? என்ற எதிப்பார்ப்பு  எழுந்துள்ளது.


1 comment:

  1. I ACCEPT CHILDRENS GARDEN PLAN.OUR CM PLANNING TO DEVELOP EDUCATION FIELD.

    ReplyDelete