தஞ்சாவூர்: அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் தஞ்சாவூர்
மாவட்டத்திலுள்ள அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில்
ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை 100 மாணவர்களுக்கு மேல் பயிலும்
பள்ளிகளில் பகுதிநேர உடற்கல்வி ஆசிரியர்கள் 158 பணியிடங்கள், ஓவிய
ஆசிரியர்கள் 155 பணியிடங்கள் மற்றும் தொழிற்கல்வி ஆசிரியர்கள் இசை மற்றும்
தையல் ஆசிரியர்கள் 209 பணியிடங்கள் முற்றிலும் தற்காலிக அடிப்படையில் மாதம்
5,000 ரூபாய் மட்டும் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்ய அரசு உத்தரவுப்படி
கடந்த இரண்டாம் தேதி தஞ்சாவூர் முதன்மை கல்வி அலுவலரால் வெளியிடப்பட்டது.
தொடர்ந்து அனைவருக்கும் கல்வி திட்ட மாநில திட்ட இயக்குனரால் நேற்று ஏழாம்
தேதி வழங்கப்பட்ட அறிவுரையுடன் படி தொழிற்கல்விபணியிடங்கள் பகுதி நேர
ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு தோட்டகலை, வாழ்வியல் மற்றும் தகவல்
தொடர்புதிறன். கட்டிடக்கலை, கணினி பொறியியல் பயன்பாடு, இசை,
தையல்,தொழிற்கல்வி பயிற்சி பெற்றவர்கள் கூடுதலாக விண்ணப்பிக்கலாம்..
ஏற்கனவே, அறிவிக்கப்பட்டப்படி விண்ணப்பம் அனுப்பாத உடற்கல்வி மற்றும் ஓவிய
ஆசிரியர்களும் தொடர்ந்து விண்ணப்பிக்கலாம். இப்பதவிக்கான நியமனம் தொடர்பான
கல்வித்தகுதிகள் மற்றும் விண்ணப்ப படிவம் மாவட்டத்திலுள்ள மாவட்ட முதன்மை
கல்வி அலுவலர் அலுவலகத்திலும், மாவட்டக் கல்வி அலுவலங்கள் தஞ்சாவூர்,
பட்டுக்கோட்டை, கும்பகோணம், மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம் தஞ்சாவூர்,
மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளர் அலுவலகம் (அனைவருக்கும் கல்வி இயக்ககம்),
மேம்பாலம், தஞ்சாவூர், அனைத்து ஒன்றியங்களிலுள்ள அனைவருக்கும் கல்வி இயக்க
வட்டார வள மையங்கள் மற்றும் அனைத்து உதவித் தொடக்கக் கல்வி அலுவலங்களில்
தகவல்களை நேரடியாக அறிந்து கொள்ளலாம். மேலும் விண்ணப்பங்கள் (www.thanjavur.nic.in)என்ற
வலைத்தளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். "ஏ'தாளில் கம்ப்யூட்டர்
அச்சு மூலம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் டிசம்பர் 15ம் தேதி மாலை
ஐந்து மணிக்குள் வந்து சேர வேண்டும். விண்ணப்பங்களை முதன்மை கல்வி அலுவலர்,
முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம், பனகல் கட்டிடம், தஞ்சாவூர், 613-001.
என்ற முகவரிக்கும் அனுப்ப வேண்டும். விண்ணப்பத்துடன் வயது (T.C)) சாதி,
வேலை வாய்ப்பக பதிவு அட்டை, பணி அனுபவச்சான்று மற்றும் கல்வித் தகுதிக்கான
சான்றொப்பமிட்ட நகல்களை விண்ணப்பத்துடன் கண்டிப்பாக இணைத்து அனுப்ப
வேண்டும். இவ்வாறு தஞ்சை முதன்மை கல்வி அலுவலர் சுப்பிரமணியன்
தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment