Saturday, December 13, 2014

என்னதான் நடக்கிறது கணினி ஆசிரியர்களின் நியமனத்தில்...?

கணினி ஆசிரியர்களை குழப்பும் விதமாகவும், தங்களின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் செய்து கொள்ள விரும்பாத அரசு எந்திரங்களை எதிர்த்து போராட வலுவாக அமைப்பு தேவை.

652 கணினி ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு ஓராண்டு கடந்து விட்ட நிலையில், தற்போது, புதிய ஆசிரியர்களை நியமனம் செய்ய பதிவு மூப்பு அடிப்படையில் பரிந்துரை பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதில், கணினி பட்டதாரிகளை காட்டிலும், இதர பட்டதாரிகள் அதாவது இயற்பியல், கணிதம், உயிரியல் பட்டதாரிகளின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
இதை மாற்றி வெளியிட வேண்டும் என, திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த ஓராண்டாக அரசு பள்ளிகளில் கணினி ஆசிிரயர்கள் இல்லாமலும், தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படாமலும், தற்போது அரையாண்டு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அரையாண்டு விடுமுறை முடிந்து, ஜனவரி 2ம் தேதி பள்ளிகள் செயல்பட துவங்கும். துவங்கியதும், பிராக்டிகல் தேர்வு நடத்தப்படும், பிப்ரவரியுடன் பிளஸ்2வுக்கு வகுப்புகள் முடிந்து விடும்.இந்நிலையில், புதிதாக, பிடிஏ மூலமாக கணினி ஆசிரியர்களை நியமனம் செய்து கொள்ள அரசு உத்தரவு போட்டுள்ளது. இதனால், கணினி ஆசிரியர்கள் மதுரை கோர்ட்டில் தொடர்ந்து வழக்கு மற்றும் பரிந்துரை பட்டியலில் உள்ள குளறுபடி காரணமாக, சான்றிதழ் சரிபார்ப்பு தள்ளிப்போகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வரும் 19ம் தேதி, கணினி ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான சான்றிதழ் சரிபார்ப்பு குறி்தது,. மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கான கூட்டம் சென்னையில் நடத்தப்பட உள்ளது என அரசு தெரிவித்துள்ளது.
ஏன் இத்தனை குழப்பம். என்னதான் நடக்கிறது கணினி ஆசிரியர்களின் நியமனத்தில்...?

No comments:

Post a Comment