Monday, November 28, 2011

கணினி ஆசிரியர்கள் பணி நியமனத்தில் முறைகேடு


 


சென்னை : "முந்தைய தி.மு.க., ஆட்சியில், கணினி ஆசிரியர்கள் பணி நியமனத்தில் நடந்த முறைகேட்டை, தமிழக அரசு விசாரிக்க வேண்டும்' என, தமிழ்நாடு கணினி அறிவியல் பி.எட்., பட்டதாரி ஆசிரியர்கள் நலச்சங்க பொதுச் செயலர் கோகுலமணி கூறினார்.
இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: 
தமிழகத்தில், 7,000க்கும் மேற்பட்ட, பி.எட்., முடித்த கணினி அறிவியல் பட்டதாரிகள் உள்ளனர். இவர்கள், வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தங்களுக்கு அரசு பள்ளிகளில் வேலை கிடைக்கும் என, காத்திருக்கின்றனர். இந்நிலையில், கடந்த தி.மு.க., அரசு, 2008ம் ஆண்டு, அரசு பள்ளிகளில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வந்த 1,880 கணினி ஆசிரியர்களுக்கு, சிறப்புத் தேர்வு நடத்தி, அவர்களில் 1,684 பேருக்கு ஒரே நாளில் பணி நியமனம் வழங்கியது. இவர்களில், யாரும் பி.எட்., பட்டதாரிகள் இல்லை. இதில் b.com., முடித்தவர்களும் அடக்கம்.   இப்பணி நியமனத்தில் நடந்துள்ள முறைகேட்டை, தனிக்குழு அமைத்து தமிழக அரசு விசாரிக்க வேண்டும்.   இவ்வாறு கோகுலமணி கூறினார்.
dinamalar

------------------
dinakaran

சென்னை, : தமிழ்நாடு கணினி அறிவியல் பி.எட்., பட்டதாரி ஆசிரியர்கள் நலச்சங்கத்தின் தலைவர் பி.சரவணன், பொதுச்செயலாளர் ஜி.முத்துராமன் ஆகியோர் சென்னையில் நேற்று அளித்த பேட்டி:
தமிழகம் முழுவதும் கணினி அறிவியல் பி.எட். பட்டதாரி ஆசிரியர்கள் 7 ஆயிரம் பேர் உள்ளனர். அனைவரும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கடந்த 20 ஆண்டுகளாக பதிவை புதுப்பித்து கொண்டு வருகின்றனர். ஆனால், இதுவரை கணினி ஆசிரியர் பணியிடம் வழங்க வில்லை. உயர்நீதி மன்றத் தில் நிலுவையில் இருக்கும் வழக்கை விரைவாக முடிக்க வேண்டும். அதன் பின், 667 கணினி ஆசிரியர் பணியிடங்களை பி.எட். கணினி அறிவியல் பட்டம் முடித்தவர்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தரம் உயர்த்தப்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள கணினி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 4ம் தேதி சென்னையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம். இதில், தமிழகம் முழுவது உள்ள கணினி அறிவியல் பி.எட். பட்டதாரிகள் கலந்து கொள்வார்கள்.







குற்றம் நடந்தது என்ன ?


dinamani



First Published : 30 Apr 2010 12:00:00 AM IST




கடலூர், ஏப். 29: ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் தோல்வி அடைந்ததால், தமிழக அரசு மேல்நிலைப் பள்ளிகளில் நியமிக்கப்பட்டு இருந்த 674 கணினி ஆசிரியர்கள் புதன்கிழமை பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 1999 முதல், 5 ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் கணினி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அந்தந்த மாவட்டங்களில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் இந்த ஆசிரியர்களை ஒப்பந்த அடிப்படையில் மாதம் ரூ.2,500 ஊதியத்தில் 5 ஆண்டுகளுக்கு நியமித்து இருந்தன. 5 ஆண்டுகள் முடிந்ததும் அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
அவர்கள் தங்களை மீண்டும் பணியில் அமர்த்தக்கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.
அதன் அடிப்படையில் அவர்களுக்குத் தனியாக தேர்வு நடத்தி 1,800 கணினி ஆசிரியர்களையும் பணியில் அமர்த்த அரசு உத்தரவிட்டது. அவர்கள் பி.எட். பட்டம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் அந்தஸ்தில் நியமிக்கப்பட்டனர்.
அவர்களைத் தேர்வு எழுத அனுமதிக்கும் போதே, அவர்களைப் பணி நியமனம் செய்வது சரியல்ல. அவர்களுக்கு பி.எட். கல்வித் தகுதி இல்லை.
மேலும் இடஒதுக்கீடு முறையும் பின்பற்றப்படவில்லை என்று பி.எட். பட்டம் பெற்ற கணினி பட்டதாரிகள் சங்கம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.
ஆனாலும் தேர்வு நடத்தி 50 சதத்துக்கு மேல் மதிப்பெண் பெற்றவர்களுக்குப் பணி வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால், 1800 பேரும் பணியமர்த்தப்பட்டனர். அவர்களில் 35 சதம் மதிப்பெண்   பெற்றவர்களும் இருந்தனர். எனவே பி.எட். பட்டம் பெற்ற கணினி அறிவியல் பட்டதாரிகள் சங்கம் மீண்டும் நீதிமன்றத்தை அணுகியது. நீதிமன்றம் 50 சதத்துக்கு மேல் மதிப்பெண் பெறுவோருக்கே பணி வழங்க உத்தரவிட்டது.
ஆனால் 35 சதம் மதிப்பெண் பெற்றவர்களுக்கும் பணி வழங்கப்பட்டு இருப்பது நீதிமன்ற உத்தரவுக்கு முரணானது என்று என்று நீதிமன்றத்தில் அச்சங்கம் தெரிவித்தது.
எனவே 35 முதல் 49 சதம் வரை மதிப்பெண் பெற்றவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடந்த  இந்தத் தேர்வின் முடிவு, புதன்கிழமை வெளியானது. இதில் தேர்வு எழுதிய 800 பேரில் 126 பேர் மட்டுமே வெற்றி பெற்றனர். தேர்வில் தோல்வி அடைந்த 674 பேரையும் பணி நீக்கம் செய்து, பள்ளிக் கல்வித்துறை புதன்கிழமை உத்தரவிட்டது. கடலூர் மாவட்டத்தில் 30 பேர் தேர்வு எழுதியதில் 4 பேர் மட்டுமே வெற்றி பெற்றனர்.




No comments:

Post a Comment