Thursday, November 24, 2011

மாநகராட்சி பள்ளியில் பாடம் நடத்தும் வெளிநாட்டவர்


மதுரை: ஆடிப்பாடி, உற்சாகத்துடன்வெளிநாட்டவர் நடத்தும் ஆங்கிலவகுப்புகள், மதுரை மாநகராட்சிவெள்ளி வீதியார் மேல்நிலைப்பள்ளி மாணவிகளை பெரிதும்கவர்ந்துள்ளது. 

வெளிநாட்டு ஆசிரியர்களைபார்த்ததும், உற்சாக வெள்ளத்தில்குதித்தனர், ஆறாம் வகுப்பு மாணவிகள். ஆசிரியர்கள் சான்ட்லர் (அமெரிக்கா), டேனி (கனடா)வகுப்பறைக்குள் வண்ணப் பந்துடன் உள்ளே நுழைந்தனர். "வாட் டூதிங்க் அபவுட் மைசெல்ப்?' (என்னைப் பற்றிய மதிப்பீடு) எனகேட்டுக் கொண்டே சான்ட்லர் பந்துவீச, "ஐ யாம் ஏ பிளேயர்' (நான்விளையாட்டு வீரர்) என்றார் டேனி.இப்போது மாணவிகளை நோக்கி,பந்தை வீசினார். பந்தை பிடிக்கும்மாணவிகள் ஒவ்வொருவராக, "எனக்கு பாடத் தெரியும், நான் நன்றாக ஓடுவேன்,'என தங்களைப் பற்றிய விஷயங்களை சொல்ல ஆரம்பித்தனர். "வாட் இஸ் யுவர் பேவரிட்புட்?' (உங்களுக்கு பிடித்த உணவு)... அடுத்த கேள்விக்கும்இதே போல, பந்தை பிடித்து பதில்சொல்லி அசத்தினர் மாணவிகள்.அதிலும் கோர்வையாக வாக்கியத்தை அமைத்து பதில் சொல்லும்மாணவிகளுக்கு பேனா, ஹேர் பேன்ட், கிளிப் பரிசாக தருகின்றனர்.இப்படியே முக்கால் மணி நேரபாடவகுப்புக்கும் விறுவிறுப்பாக,உற்சாகமாக சென்றது. 

சிரிப்பும்,வேடிக்கையும், சுவாரசியமாகபாடத்தை கற்றனர், அனைவரும்.பசிநேரம் கடந்தும், பாடம் கேட்பதில் ஆர்வமாக இருந்தனர். நமது ஆசிரியர்களுக்கும், இவர்களுக்கும் உள்ள வித்தியாசத்தைகூறுங்களேன் என்றதும், ஆர்ப்பரித்தனர் மாணவிகள்."இவங்க அடிக்காம, திட்டாமபாடம் சொல்லித் தர்றாங்க. பார்த்தால் பயம் வரலை. பாடத்தோடுவெளிநாட்டு விஷயங்களையும்நிறைய கதையோடு சொல்றாங்க.பாடம் போரடிக்கல. வெளியில்போகும் போது, வெளிநாட்டவரைபார்த்தால் தயக்கமின்றி, நாங்களாகவே சென்று ஆங்கிலத்தில் பேசுகிறோம்', என்றனர்.

சான்ட்லர், டேனியிடம் கேட்டபோது, "இந்திய மாணவர்கள் திறமையானவர்கள். சொல்வதை சட்டென புரிந்து கொள்கின்றனர்.அவர்களின் சிந்தனைத் திறன் நன்றாக உள்ளது,' என்றனர்.

இந்த பயிற்சி பற்றி தலைமையாசிரியை மீனா, ஆசிரியர் ஆறுமுகசாமி கூறுகையில், "இரண்டாண்டுகளாக "ப்ராஜக்ட் அப்ராட்' திட்டத்தின் மூலம், வெளிநாட்டவர்கள்ஆங்கில வகுப்புகளை இங்கே நடத்துகின்றனர். மாதத்திற்கு ஒருமுறைஆசிரியர்கள் மாறுவார்கள். இவர்கள் தினமும் ஆறாம் வகுப்பு முதல்ஒன்பதாம் வகுப்பு வரை ஆங்கிலம் பயிற்றுவிக்கின்றனர்,' என்றனர்

No comments:

Post a Comment