Sunday, January 1, 2012

தொழிற்கல்வி ஆசிரியர் நேர்க்காணல்


விழுப்புரம் :விழுப்புரம் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள தொழிற் கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக நேர்க்காணல் துவங்கியது. மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள தொழிற் கல்வி ஆசிரியர் பணியிடங்களுக்கு நேர்க்காணலை விழுப்புரம் அரசு மகளிர் மேல் நிலைப் பள்ளியில் சி.இ.ஓ.,புண்ணிக்கோட்டி துவக்கிவைத்தார். 
அனைவருக்கும் கல்வி இயக்க சி.இ.ஓ., பூபதி,டி.இ.ஓ.,மார்ஸ் உட்பட 30 மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், 25 கணினி ஆசிரியர்கள் மற்றும் 40 அலுவலக ஊழியர்கள் உட்பட 20 குழுக்கள் நேர்க்காணல் நடத்தினர். கணினி ஆசிரியருக்கான நேர்க்காணலில் 1,000 பேர் ஆசிரியர் விண்ணப்பதாரர்கள் பங்கேற்றனர். கணினி ஆசிரியர்கள் நேர்க்காணல் மீண்டும் 2ம் தேதி காலையும் நடக்கிறது. 
2ம் தேதி மாலை தோட்டக்கலை,மெஷினரீஸ் மற்றும் கம்யூனிகேஷன் (தொடர்பியல்) ஆசிரியர்களுக்கும், 3ம் தேதி இசை,தையல், 4ம் தேதி ஓவியம், 5ம் தேதியும்,9ம் தேதியும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கான நேர்க்காணல் நடக்கிறது. 


1 comments:

P.MUTHUKUMARAN said...
MAY THE BLESSINGS OF GOD FILL YOU AND YOUR FAMILY WITH JOY AND PEACE IN THIS NEW YEAR. WISH YOU HAPPY NEW YEAR 2012. GOD GRACE THIS YEAR WE ARE ALL EMPLOYMENT SENIORITY GRADUATE TEACHER GETTING GOVERNMENT TEACHER JOB. I WILL PRAY TO GOD FOR CONTINUE SENIORITY.

REGARDS,

P.MUTHUKUMARAN.M.SC.,MA.,(YOGA)MSW.,B.ED.,PGDBA.,PGDCM.,DCA.,DCH.,
CHENNAI.

1 comment:

  1. MAY THE BLESSINGS OF GOD FILL YOU AND YOUR FAMILY WITH JOY AND PEACE IN THIS NEW YEAR. WISH YOU HAPPY NEW YEAR 2012. GOD GRACE THIS YEAR WE ARE ALL EMPLOYMENT SENIORITY GRADUATE TEACHER GETTING GOVERNMENT TEACHER JOB. I WILL PRAY TO GOD FOR CONTINUE SENIORITY.

    REGARDS,

    P.MUTHUKUMARAN.M.SC.,MA.,(YOGA)MSW.,B.ED.,PGDBA.,PGDCM.,DCA.,DCH.,
    CHENNAI.(9841411594 & muthukumaranp1@gmail.com)

    ReplyDelete