Saturday, December 31, 2011

சிறப்பாசிரியர்களுக்கான நேர்காணல் ஜன., 3ம் தேதி துவக்கம்

நாமக்கல்: "அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம், தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்படும் சிறப்பாசிரியர்களுக்கான நேர்காணல், ஜனவரி 3ம் தேதி துவங்கி, 10ம் தேதி வரை நடக்கிறது' என, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குமார் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
நாமக்கல் மாவட்டம், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், அரசு பள்ளிகளில், கலை ஆசிரியர்கள், 128 பேர், உடற்கல்வி ஆசிரியர்கள், 132 பேர், தொழிற்கல்வி ஆசிரியர்கள், 148 பேர் என மொத்தம், 408 பேர், 5,000 ரூபாய் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட உள்ளனர்.
அதில், உடற்கல்வி ஆசிரியர் பதவிக்கு, 478 பேர், ஓவிய ஆசிரியர் பதவிக்கு, 380 பேர், இசை, தோட்டக்கலை மற்றும் கட்டடக்கலை ஆசிரியர் பதவிக்கு முறையே, 22, 18, ஒன்று என, 41 பேர், தையல் ஆசிரியர் பதவிக்கு, 256 பேர், கணினி ஆசிரியர் பதவிக்கு, 491 பேர் என மொத்தம், 1,646 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
அவர்களுக்கான நேர்காணல், ஜனவரி 3ம் தேதி துவங்குகிறது. அதன்படி, உடற்கல்வி ஆசிரியர்களுக்கான நேர்காணல், ஜனவரி 3 மற்றும் 4ம் தேதியும், ஓவிய ஆசிரியர்களுக்கான நேர்காணல், ஜனவரி 5 மற்றும் 6ம் தேதியும், இசை, தோட்டக்கலை மற்றும் கட்டடக்கலை ஆசிரியர்களுக்கான நேர்காணல், ஜனவரி 6ம் தேதியும் நடக்கிறது.
மேலும், தையல் ஆசிரியர்களுக்கான நேர்காணல், ஜனவரி 7ம் தேதி, கணினி ஆசிரியர்களுக்கான நேர்காணல், ஜனவரி 9 மற்றும் 10ம் தேதி நடக்கிறது. நேர்காணலுக்கான கடிதம், அந்தந்த விண்ணப்பதாரர்களுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு நேர்காணல் கடிதம் கிடைக்கப்பெறாதவர்கள், தங்களுக்குரிய நேர்காணல் தேதிக்கு ஒரு நாள் முன்னதாக, அனைவருக்கும் கல்வி இயக்கம், மாவட்ட திட்ட அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

LINK: http://www.dinamalar.com/district_detail.asp?id=376560

No comments:

Post a Comment